Tuesday, October 12, 2021

CINEMATIC WORLD - 047 - THE SECRET WORLD OF WALTER MITTY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0067]


THE SECRET LIFE OF WALTER MITTY - இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பான திரைப்படம் என்று சொல்லலாம் . இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் நெகடிவ் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கும் நிழற்படங்கள் அனைத்தையும் அச்சிவதற்கு உதவும் நெகடிவ் ஆசெட்ஸ் துறையில் பணிபுரிகிறார் வால்டர். புதிதாக பதவி க்கு வரும் நிறுவன அதிபரால் LIFE என்ற மாதம் தோறும் வெளிவந்த மாத இதழ்  நிறுவனத்தில் இருந்து அனைவருமே வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். லைஃப் ஒரு இணையதள பத்திரிக்கையாக மாறுகிறது. LIFE மேகஸின் கடைசி பதிப்பின் அட்டைப்படத்துக்காக போட்டோகிராபர் ஷியான் அவர்கள் எடுத்த  நெகடிவ் 25 இல் இருக்கும் படம் அட்டைப்படமாக வெளியிடப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் அந்த நெகட்டிவ் தொலைந்து போனதால் ஷியானை சந்திக்க  நிறைய ஆண்டுகளுக்கு பின்னால் ஒரு அடவெஞ்செர் நிறைந்த பயணமாக கிரீன்லாந்து செல்கிறார். இந்த பயணத்தில் அவரை சந்திக்க முடியாமல் போனாலும் மனதுக்குள் ஒரு புதிய தன்னம்பிக்கை பெறும் வால்டர் மறுபடியும் பயணித்து இமய மலை பகுதியில் அவரை சந்தித்து பேசுகிறார். கடைசியில் அவருக்கு நெகடிவ் 25 கிடைத்ததா ? அந்த மாத இதழ் வெளிவரும் கடைசி பதிப்பில் அட்டைப்படத்தை அவரால் கொடுக்க முடிந்ததா என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படம் யாராக இருந்தாலும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றே சொல்லலாம். பென் ஸ்டில்லேர் ஒரு சிறப்பான நடிப்பை இந்த திரைப்படத்துக்கு கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. கடைசியாக ஒரு விஷயம் சொல்லப்போனால் குடும்ப கஷ்டத்துக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டு வேலை விட்டா வீடு , வீடு விட்டால் வேலை என்று மோத்த வாழ்க்கையும் சம்பளத்துக்கு போக்கியம் பண்ணிவிட்டு சின்ன சின்ன சந்தோஷம் கூட கிடைக்காமல் குடும்பத்தை காப்பாத்தும் ஆண்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.!!




No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...