Wednesday, October 13, 2021

CINEMATIC WORLD - 048 - BIG HERO 6 -TAMIL REVIEW - நாங்களும் சூப்பர் ஹீரோக்கள்தான் என்று சொல்லும் ஒரு DISNEY படைப்பு !



BIG HERO 6 - ஒரு பக்கம் அனிமேஷன் படங்கள் எல்லாம் ஃபேண்டஸி கதைகளை மட்டுமே நம்பி சென்றுக்கொண்டு இருக்கவுமே ஒரு படம் மட்டும் அனிமேஷன் படங்களை கொண்டு சூப்பர் ஹீரோ கதைகளை சொல்லலாம் என்று புதுசாக யோசித்தது , அப்படி ஒரு படம்தான் இந்த BIG HERO 6 , இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக BAYMAX ஐ மறக்க மாட்டார்கள் !! அடுத்த பாகம் எப்போது வரும் என்று பார்க்காமல் TANGLED - THE SERIES போல BIG HERO - 6 THE SERIES ஓடிக்கொண்டு இருக்கிறது , COME ON சென்று பாருங்கள். இந்த படத்தின் கதை, படத்துடைய கதாநாயகன் ஹீரோ [ HIRO - ஜப்பான் பேருப்பா !!] அவனுடைய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சின்ன சின்ன ரோபோட்களை கொண்டு ஆடுகளம் தனுஷ் போல லோக்கல் தெருக்களில் சண்டைகளை உருவாகிறான். கடைசியில் காவல் துறை கடமையை செய்வதற்குள் காபற்றப்படும் நம்ம ஹீரோ பின்னாளில் அவனுடைய அண்ணனால் வடிவமைக்கப்பட்ட பே மேக்ஸ் என்ற ரோபோட்டை பார்த்து ரொம்பவுமே இம்ப்ரஸ் ஆகிறான், இதனால் மண்டைக்குள் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்று யோசனை வந்த ஹீரோ ஹமடா அவனே ரொம்பவுமே கடினமாக முயற்சி செய்து ஒரு தனித்த சிறு சிறு பாகங்களாக பிரிந்தும் இணைந்தும் செயல்படும் ஒரு சின்ன சின்ன ரோபோட்கள் இணைந்த இயந்திரத்தை உருவாக்கி அறிவியல் படைப்புகளை வெளியிடும் எக்ஸ்போ கண்காட்சியில் காட்டுகிறான். இந்த EXIBITION இல் நடக்கும் ஒரு மோசமான நெருப்பு விபத்தில் அவனுடைய அண்ணன் இறந்து போகிறார். குடும்பமே உடைந்து போகிறது. ஆனால் கொஞ்சம் வருடங்களுக்கு பிறகு சின்ன சின்ன ரோபோட்கள் வில்லன்களால் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடிக்கிறான் நமது கதாநாயகன் ! அந்த விபத்தின் மர்மங்களை கண்டறிந்து நடந்த எல்லாமே சதி என்று புரிந்துகொள்கிறான் ! அவருடைய அண்ணனின் இழப்புக்கும் மேலும் அவன் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு இப்போது இப்படி தவறான இடத்தில் தப்பான ஆட்களிடம் இருக்க கூடாது என்பதற்காகவும் புதிதாக அண்ணனின் நண்பர்களுடன் இணைந்து மெடிக்கல் ரோபோட் பே-மேக்ஸ்-ன் உதவியுடன் பிரச்சினைகளை சமாளித்து ஒரு சூப்பர் ஹீரோ குழுவினராக இணைந்து போராடி வெற்றி அடைவதுதான் இந்த பிக் ஹீரோ 6 திரைப்படத்தின் மொத்த கதை. இந்த படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் திரைக்கதையில் விறுவிறுப்பாக அமைகிறது. டிஸ்னி வெளியிட்டு பின்னாளில் வெளிவந்த ஜூடோபியா படத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு சராசரி பொழுதுபோக்கு அனிமேஷன் திரைப்படமாக மட்டுமே இல்லாமல் ஒரு ஆக்சன் அடவென்சர் நிறைந்த திரைப்படமாக இந்த திரைப்படங்கள் அமைவது வரவேற்கதக்கது. இருந்தாலும் ஒரு அனிமேஷன் காட்சிகளில் சி ஜி ஐ தொழில்நுட்ப வடிவமைப்பில் பிரமாதமாக அமைக்கப்பட்ட காட்சிகள் திரைக்கதைக்கு சிறப்பு சேர்க்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். மொத்தத்தில் ONE LINE REVIEW : BIG HERO 6 _ புதிய கதாநாயகர்களின் உதயம் !!! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 


No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...