Tuesday, December 21, 2021

CINEMATIC WORLD - 051 - FREE GUY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!! [REGULATION 2024 - 00074]


இந்த படம் 2021 இல் வெளிவந்தது. இந்த படத்துடைய கதை, ஃப்ரீ சிட்டி எனப்படும் விளையாட்டை சுற்றி மட்டுமே நகர்கிறது.  ஒரு நிகழ்நிலையில் விளையாடும் ஆன்லைன் கணினி விளையாட்டில் பின்னணி காதப்பாத்திரமாக இருக்கும் ரேனால்ட்ஸ் ஒரு கட்டத்தில் அந்த கணினி விளையாட்டை விளையாடும் ஒரு கதாப்பத்திரத்தை நேசிக்க தொடங்குகிறார், ஆனால் அந்த கதாப்பத்திரம் ஒரு கணினி வரைகலையாளரின் நகல் என்றும் உண்மையில் தான் ஒரு கணினி விளையாட்டின் கதாப்பாத்திரம் மட்டும்தான் என்றும் தெரிந்துகொள்ளும் ரேனால்ட்ஸ் பொறுப்பற்ற கோபமான அந்த கணினி விளையாட்டின் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் டைக்காவின் ஆன்லைன் விளையாட்டை முடக்கும் முயற்சியை எப்படி தடுக்கிறார் என்பதுதான் இந்த படத்துடய கதை, இந்த படத்தில் விஷுவல் எஃபக்ட்ஸ் நம்பும் வகையில் இருக்கிறது. உண்மையில் கணினி விளையாட்டை விளையாடும் ஒரு கதாப்பத்திரத்தின்  ஒரு அனுபவத்தை வழங்க முயற்சி செய்துள்ளது எனலாம். இந்த படத்துடைய கிளைமாக்ஸ் சொன்னால் ஸ்பாய்லர் ஆக மாறிவிடும் என்றாலும் ரொம்பவுமே இமாஜினேஷன் நிறைந்த இந்த காதல் ஆக்ஷன் டிராமா நகைச்சுவை போன்ற எல்லா விஷயங்களும் ஒரு சேர அமைந்துள்ள திரைக்கத்தைக்கு ஒரு நல்ல முடிவை கொடுத்துள்ளது. ஒரு கணினி கதாப்பத்திரமாக வந்திருக்கும் ரேனால்ட்ஸ் இதற்கு முந்தைய திரைப்படங்களை போலவே துல்லியமான வசனங்களாலும் எதார்த்தமான காட்சி நடிப்பினாலும் மனதை கவர்கிறார். 20 ஆம் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் வெளியீட்டில் வெளிவந்து இருக்கும் இந்த திரைப்படம் அனைவரும் பார்க்கும் படியாக இருக்கிறது. சலிப்பு தட்டாத திரைக்கதையில் என்ற குறைகளும் இல்லை. காட்சி அமைப்புகளும் இந்த படத்தின் டிரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பை விட ரொம்பவுமே அதிகமாகவே சிறப்பாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். நிறைய செல்ஃப் ஹ்யூமர் இருப்பதால் இந்த படம் ஒரு மீட்டா லெவல் படம் என்ற எண்ணமே தோன்றாத வண்ணம் ஒரு செம்ம படம் கொடுத்து இருக்கிறார்கள்.  ONE LINE REVIEW - FREE GUY - '10/10 RATED OPEN WORLD GAME' - ஒரு முறை கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். இன்னும் கருத்துக்கள் இருந்தால் மேற்கொண்டு பதிவு பண்ணுகிறேன். ரொம்ப நல்ல படம் கண்டிப்பாக பாருங்கள் !! BYE நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...