Saturday, October 2, 2021

AVATAR THE LAST AIRBENDER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0065]


   

 அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் - ஒரு சிறப்பான தொலைக்காட்சி தொடர். 2015 களில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் ரொம்பவுமே ஸ்பெஷல் ஆன கார்ட்டூன் செரீஸ் இந்த அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர். இந்த சீரியல் ரொம்பவுமே சிறப்பாக கதைப்படுத்தப்பட்டு இருக்கும். அதனாலேயே இந்த சீரியல் க்கு ஒரு தனி ஃபேன் பேஸ் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஒரு காலத்தில் நெருப்பு, நிலம், கடல், மற்றும் காற்று ஆகிய நான்கு சக்திகளை கட்டுப்படுத்தும் மக்களுக்குள் போர் உதயமாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மறு ஜென்மம் எடுக்கக்கூடிய அவதார் என்ற சிறப்பு சக்தி வாய்ந்த ஒருவர் இந்த போரை தடுத்து அமைதியை நிலைநாட்ட வருவார் என்று அங்கே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கேப்டன் அமெரிக்கா போல பனிக்கட்டியில் உறைந்து போகிறார். பின்னாளில் கடல் சக்திகளை கொண்ட நாடோடி அண்ணன் தங்கையான சாக்கா மற்றும் கடாராவால் மீட்கப்பட்டு நெருப்பு இன மக்களிடம் இருந்து எல்லோரையும் காப்பாற்ற பயணத்தை தொடங்குகிறார்கள். இந்த பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் எல்லாமே எபிசோட்களில் சொல்லப்பட்டு இருக்கும். இந்த அனிமேஷன் தொடர் ரொம்பவுமே இன்டர்ஸ்டிங் ஆக இருக்கும். முதல் சீசனில் அவதாரை தேடிக்கொண்டு இருக்கும் இளவரசன் ஜுகோ மற்றும் அவருடைய கார்டியன் இரோஹ்விடம் இருந்து தப்பித்து பனி நாட்டுக்கு சென்று அங்கே கடல் நீரை கட்டுப்படுத்தும் சக்திகளை கற்றுக்கொள்வது சொல்லப்பட்டு இருக்கும்.. அடுத்த இரண்டாவது சீசனில் நிறைய திருப்பங்களுடன் நில சக்தியில் மிகவும் சிறந்தவராக இருக்கும் டோஃப் என்பவரின் உதவியுடன் நெருப்பு சக்திகளை உடையவர்களை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் ஜூகோவால் தோற்கடிக்கப்பட்ட அவதார் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுப்பதில் முடியும்.. மூன்றாவது சீசனில் நெருப்பு இனத்தை சேர்ந்தவர்களின் முயற்சிகளை தடுத்து அமைதியை நிலைநாடடவும் மக்களின் நன்மைக்காகவும் அவதார் ஆங் மற்றும் குழுவினர் போராடுவதாக இருக்கும்.. இந்த அனிமேசன் தொலைக்காட்சி தொடர் கண்டிப்பாக நீங்கள் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளின் பட்டியல் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல கதை, சிறப்பான காட்சியமைப்பு , ரசிக்கும் படியாக இருக்கும் நகைச்சுவை காட்சிகள், என்று இந்த தொடர் ஒரு முழுமையான அடவெஞ்செர் தொடராக இருக்கிறது. இது கண்டிப்பாக எல்லோருமே பார்க்க வேண்டிய தொடர் ஆகும் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...