Thursday, December 30, 2021

CINEMATIC WORLD - 053 - SPIDERMAN : FAR FROM HOME - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 00076]

 

 

SPIDERMAN FAR FROM HOME - ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்  இந்த படம் 2019 இல் வெளிவந்தது. இந்த படத்துடைய கதை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் டோனி ஸ்டார்க்ன் மறைவுக்கு பிறகு பிரபஞ்சத்தின் பாதி மக்கள் தொகை மீட்டமைக்கபட்டது. இந்த காலகட்டத்தில் இப்போது உயர்நிலை பள்ளியில் படிக்கும் பீட்டர் பார்கேர் இன்னும் டோனி ஸ்டார்க்கின் மறைவுக்காக வருத்தத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நிஜம் போலவே கற்பனையான ஆனால் பாதிப்புகளை உருவாக்கக்கூடிய மிகப்பெரிய உருவங்களையும் காட்சிகளையும் உருவாக்கும் தொழில் நுட்பம் கொண்ட மெஸ்டரியோ என்று அழைக்கப்படும் கவெண்டென் பெக் என்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் நிறைய வருடங்களாக திட்டமிட்டு ஷெல்டு பாதுகாப்பு அமைப்பையும் ஸ்பைடர் மேன் யும் நம்பவைத்து டோனி ஸ்டார்க்கின் அதி நவீன தொழில் நுட்பம் நிறைந்த டிரோன் புராஜக்ட்டையும் பாதுகாப்பு சாதனங்களையும் பீட்டர் பார்கெரின் அனுமதியுடன் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பின்னாளில் பீட்டர் பார்கெரை மோசமாக தாக்குகிறார். இந்த எதிர்பாராத தாக்குதல்களால் இன்னும் பாதிப்புகளை அடையும் பீட்டர் பார்கர் கடைசியில் எப்படி ஹாப்பி மற்றும் ஸ்டார்க் தொழில் நுட்பத்துடன் எவ்வாறு இந்த முயற்சிகளில் கடைசிவரைக்கும் போராடி மெஸ்டரியோவை தடுக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட் என்றால் இந்த படத்துடைய கதை எனலாம். காரணம் என்னவென்றால் மெஸ்டரியோ போன்ற சக்திவாய்ந்த மாயாஜால மாயைகளை உருவாக்கும் தொழில் நுட்பம் கொண்ட சக்திகளை மார்வெல் சினிமா யுனிவர்ஸ் அளவுக்கு பின்னணியில் கொண்டுவந்து சொல்லியிருப்பது மிகவும் சிறப்பாக பயனளித்து இருக்கிறது என்றே சொல்லலாம். ஜேக் கிளைகால் பிரின்ஸ் ஆப் பெர்சியா படத்தில் இருப்பது போலவே ஒரு ஸ்ட்ராங் ஆன கதாப்பாத்திரமாக நடித்து மிகவும் சிறப்பாக மெஸ்டரியோ கதாப்பாத்திரத்தில் பிரகாசிக்கிறார். முந்தைய ஸ்பைடர் மேன் ஹோம்கமிங் படத்தில் இருந்த சண்டை காட்சிகளுக்கு ஒரு நல்ல அப்டேட் இந்த படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் சண்டை காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் பேக்கிரவுன்ட் மியூசிக் பிரமாதம். ஸ்பைடர் மேன் மற்றும் எம்ஜெயின் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பேசும் வசனங்கள், டோனி ஸ்டார்க் நினைவுகளால் ஸ்பைடர் மேன் மனதுக்குள் உருவாகும் மாற்றங்கள், நெட் லீட்ஸ், ஹாப்பி ஹோகான், அண்ட் மே, நிக் பியூரி காதப்பாத்திரங்கள் கொஞ்சம் நேரங்களே எடுத்துக்கொண்டாலும் படத்தை நிறைவு செய்கின்றனர்.  மொத்தத்தில் ஒரு நல்ல படம் என்று சொல்லலாம்.ONE LINE REVIEW - SPIDERMAN - FAR FROM HOME IS NEXT LEVEL நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...