Wednesday, October 13, 2021

CINEMATIC WORLD - 050 - THE DARK KNIGHT RISES - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! [REGULATION 2024 - 00070]




 இந்த படம் ஒரு பெரிய சகாப்தம். இந்த படத்தை பற்றி மட்டுமே பேசவேண்டும் என்றால் பேசிக்கொண்டே போகலாம். இந்த திரைப்படம் 2012 ம் ஆண்டு வெளிவந்தது. கிறிஸ்டோபர் நோலான் இயக்கத்தில் வெளிவந்த BATMAN BEGINS (2005),  THE DARK KNIGHT (2008) திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமாக கடைசி திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் GOTHAM நகரத்தில் நடந்த குற்றங்களை தடுக்கும் பேட் மேன் கடந்த 7 வருடங்களாக பேட் மேனாக செயல்படாமல் இருக்கிறார், டென்ட் சட்ட அமைப்பு மூலமாக காவல்துறை குற்றங்களை தடுத்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக லீக் ஆஃப் ஷாடோஸ் அமைப்பில் இருந்து வரும் வில்லன் BANE அந்த நகரத்தில் வாழும் தொழில் அதிபர் புரூஸ் வேய்ன் தான் பேட் மேன் என்று தெரிந்து இருப்பதால் புரூஸ் வேய்னை தாக்கி அவருடைய சாதனங்கள் அனைத்தையும் கைப்பற்றி அவரை ஒரு கொடிய சிறையில் அடைக்கிறார், மேலும் GOTHAM மக்களை நகரத்தினை விட்டு வெளியே செல்ல முடியாதவாறு அடைக்கிறார். இந்த பிரச்சனைகளில் இருந்து மிகவும் கடினமாக முயற்சி செய்து வெளியே வரும் பேட் மேன் அங்கே காவல் துறையின் உதவியுடன் BANE ஐ தோற்கடித்து அனைவரையும் காப்பாற்றினாரா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். இந்த திரைப்படம் ஐ மாக்ஸ் காமிராவில் எடுக்கப்பட்டு மிகவும் சிறப்பான நேர்த்தியான கதைக்களத்துடன் வெளிவந்து. இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் கதையின் STORY ARC க்கு மிகவும் சிறப்பான முடிவை கொடுத்துள்ளது. இந்த படத்தின் முக்கிய வில்லனான BANE இன் கேரக்டர் டிசைன் எனக்கு ரொம்பவுமே பிடிக்கும். BANE பண்ணுவது அதிகாரத்தை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு GOTHAM நகரத்தை அழிக்க வேண்டும் என்பதுதான் ஆனால் BANE பண்ணற எல்லா விஷயங்களையும் LARGE SCALE -ல் பண்ணுவாரு. COMICS ல இவர் அந்த அளவுக்கு பயங்கரமான வில்லன் இல்லை. இந்த படத்தில் இவர் மொத்த GAME ஐயும் CONTROL ல எடுத்துக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமாக GOTHAM நகரத்தை அந்த நகரத்தில் இருப்பவர்களை கொண்டே தாக்குவது எல்லாம் ரொம்ப அருமையான கதைக்களம். CHRISTOPHER NOLAN அவருடய கதைகளில் சிக்கலான CONCEPT களை கொண்டு வருவதில் மிகவும் சிறப்பாக சாதிப்பார். இந்த படமும் அவருடைய சாதனைப்பட்டியலில் அடக்கம். BRUCE WAYNE இப்போது அவரிடம் COMPANY இல்லை , MONEY இல்லை , TECH இல்லை ஆனால் எதுவுமே இல்லை என்றாலும் BATMAN ஆக களத்தில் குதிப்பார். இங்கே நான் கவனிக்க வேண்டிய விஷயம் சொல்கிறேன். BATMAN V. SUPERMAN -ல் SUPERMAN உயிரோடு இருக்கிறார் என்று அதிகமான DETAIL கொடுத்து இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த படத்தில் CLIMAX -ல் BATMAN எப்படி ESCAPE ஆனார் என்பதை ஒரு மறைக்கப்பட்ட PLOT LINE ஆகவே மாற்றியிருப்பார்கள். ஒரு STORY யை எப்படி EXECUTION பண்ணனும் என்பதற்கு இந்த படம் ஒரு BEST உதாரணம். இன்னும் என்ன சொல்ல ? எப்போதும் போல இந்த தமிழ் வலைப்பூவை பயன்படுத்தியதற்க்கு நன்றி, அப்படியே ஃபாலோ பட்டன் கொடுத்துவிடவும் ! தொடர்ந்து சப்போர்ட் பண்ணிக்கொண்டே இருங்கள். முடிந்தால் ஏதாவது கமெண்ட் பண்ணுங்கள். பல வருடமாக என்னுடைய வலைத்தளத்துக்கு கமெண்ட் இல்லை. நானும் பார்க்கிறேன் பார்க்கிறேன் ஒருவரும் கமெண்ட் பண்ணவே மாட்டேன் என்கிறார்கள். யுட்யூப் காலத்தில் பிளாக் வேலை செய்யாது என்ற எழுதப்படாத சட்டத்தை தோற்கடிக்கதான் இந்த முயற்சி. சப்போர்ட் பண்ணுங்கள்.  நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...