புதன், 4 பிப்ரவரி, 2026

GENERAL TALKS - சூரியனும் நிலவும் என்று இரு மனங்கள் !

 



நம் கதாநாயகன் கடைக்குள் நுழைந்தவுடன், அவன் மனதில் ஓர் இசை ஒலிக்கிறது போல. நெய் வழியும் பருப்பு சாதம், மொறுமொறுப்பான மசாலா தோசை, பக்கத்தில் மீன் குழம்பு - ஒரு மனிதனுக்கு, தனக்குப் பிடித்த உணவைச் சாப்பிடும் நாள் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போன்றது. அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு விஷயம். ஒவ்வொரு கவ்விலும் அவன் வாழ்க்கையின் சின்ன சின்ன கவலைகள் கரைந்து போகின்றன. சாதத்தில் நெய் அதிகமா இருந்தால், அது அவனுக்கு “ஜாக்பாட்” கிடைத்தது போல. தோசையின் ஓரம் சற்று மொருமொருப்பாக சாம்பாரில் மிதமான நனைந்து இருந்தால், அது அவனுக்கு “போனஸ் லெவல்” அன்லாக் ஆனது போல இருக்கும் மக்களே (சோலோ லெவல்லிங் அனிமேஷன் தொடர் பாருங்கள்) ஆண்களின் மனநிலை இப்படித்தான் சாப்பாட்டில் கிடைக்கும் சின்ன சின்ன சுகமே அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சி. ஒரு நல்ல உணவு, ஒரு நல்ல தூக்கம், ஒரு நல்ல சினிமா—இதுவே அவர்களின் “அதிகபட்ச நெருப்பு பறக்கும் இலட்சியம்.” ஆனால் பெண்களின் மனநிலை வேறுபட்டது. அவர்களுக்கு சாப்பாடு மட்டும் போதாது; அதோடு சேர்ந்து “என்னை யாராவது கவனிக்கிறார்களா?” என்ற கேள்விக்கும் பதில் வேண்டும். அவர்கள் விரும்புவது பொருள் சார்ந்த விஷயங்களும் தான் புதிய உடை, அழகான ஆபரணம், சின்ன சின்ன பரிசுகள். ஆனால் அதற்கும் மேலாக, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் உண்மையான ஆசை. அதனால் தான், ஆண்கள் “சாப்பாடு கிடைத்தா, சொர்க்கத்துக்கு விசிட் அடிப்பதாக சந்தோஷ சாரல்” என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, பெண்கள் “சாப்பாடு நல்லா இருந்தாலும், யாராவது என்னை புரிந்துகொள்கிறார்களா?” என்று எதிர்பார்க்கிறார்கள். இது சண்டை அல்ல, இது இயல்பான வேறுபாடு. ஆண்களுக்கு நெய் நிறைந்த சாதம் என்றால் மகிழ்ச்சி, பெண்களுக்கு உணர்வுகளை மதிக்கும் ஒருவரின் அன்பு , ஆதரவு, தொடுதல், மற்றும் பாதுகாப்பு தான் அதிகபட்ச மகிழ்ச்சி. சாப்பாடு வயிற்றை நிரப்பும்; ஆனால் கவனமும் அன்பும் தான் மனதை நிரப்பும். பெண்களின் மனம் என்பது எல்லையற்ற ஆசைகளும் கனவுகளும் நிறைந்த ஒரு புத்தகம், மக்களே. ஒரு பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ளப் புறப்பட்ட அனைவரும், தாங்கள் வயதாகிவிட்டதாகக் கூறி, நரைத்த முடியுடன் திரும்பி வந்துள்ளனர்.

1 கருத்து:

தங்கதுரை சொன்னது…

இங்கே பெண்களை புரிந்துகொள்ள வேண்டுமெனில் அது படைத்த ஆண்டவனால் கூட முடியாதே, அப்புறம் என்ன வாக்குவாதம் ?

CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 5 - DEAD MEN TELL NO TALES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

PIRATES OF THE CARIBBEAN 5 - DEAD MEN TELL NO TALES - இந்தக் கதையில் ஜாக் ஸ்பேரோ தனது அதிர்ஷ்டத்தை இழந்து, மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கி...