Monday, December 24, 2018

CINEMATIC WORLD - 022 - HEIDI - TAMIL REVIEW - இன்னைக்கு நம்ம திரை விமர்சனம் !! [REGULATION-2024-00039]


நீ எதுக்கு தேடி புடிச்சு இந்த ஜெர்மன் படத்தை பார்க்கணும் ? உனக்கு பார்க்க வேற படம் இல்லையா ? என்று கேட்கலாம் ! ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் யாதும் ஊரே , யாவரும் சொந்தக்காரனே (சொத்துல பங்கு கேட்காத வரைக்கும் ) இங்கே டிவி , நெட் , கேம்ஸ் , கம்ப்யூட்டர் இது எல்லாம் இல்லாத காலத்தில் நடக்கும் ஒரு குட்டி பெண்ணின் கதையாக ஒரு காலத்தில் குழந்தைகளுக்கான புத்தகமாக வெளிவந்த ஹைடி என்ற கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஜெர்மனியில் 2015 ல் வெளிவந்தது , இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயமாக இருப்பது இந்த திரைப்படம் அவ்வளவு எதார்த்தமான கதையில் ஒரு சின்ன பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களை எல்லாம் சேர்த்து ஒரு சினிமா என்ற வகையில் அழகான சினிமா என்ற வகையில் ஆச்சரியமான கதைக்களமும் சேர்த்து நிறைய லொகேஷன்களை காட்டி இயற்கையுடன் இணைந்த ஒரு பயணமாக இந்த அனைவருக்கும் பிடித்த சரித்திர குழந்தை ஹைடி என்ற சிறுமியின் வாழ்க்கையில் நடக்கும் கதையை  சொல்கிறது . இந்த படமும் நிச்சயமாக பார்க்கவேண்டிய திரைப்படம்தான் . CHUTTI TV ல காலையில் 6:00 மணிக்கு HEIDI பார்த்த #தொண்ணூறுகளின் பசங்க !! இங்கே அஸேம்பல் ஆகவும். இன்னைக்கு மோட்டு பட்டுலு என்று முட்டாள்தனமான ஒரு மெச்சூரிட்டியே இல்லாத கதைகளை பார்க்கும் பசங்க எல்லோரும் நம்ம பழைய வாழ்க்கையை நிறையவே மிஸ் பண்ணுகிறார்கள். இந்த 90 களின் நினைவுகள் மட்டுமே தனி போஸ்ட் போடலாம். அணுக் ஸ்டீபன் குட்டி குழந்தையாக உள்ளம் கொள்ளையடித்து செல்கிறாள். ஒரு எளிமையான கிராமத்து பெண்ணாக பணக்கார குடும்பத்தில் வேலை பார்க்க அனுப்பப்பட்டதாலும் திரும்பவுமே வீட்டுக்கு வரும் காட்சிகள் நல்ல ரசனை !! நிறைய விருதுகளை கொடுத்து கௌரவம் பண்ண வேண்டிய படம். OSCAR எல்லாம் இந்த மாதிரி நல்ல படங்களை கண்டுகொள்ளாது போலவும் !!! இந்த படத்தில் அடுத்தடுத்த காட்சிகள் புத்தகங்களின் பக்கங்களை போல நிதானமான வேகத்தில் நகர்வது இந்த படத்தின் காட்சியமைப்புகள் இயற்கையான தன்மையை கொடுக்கிறது என்றே சொல்லலாம். திரைப்பட வரலாற்றில் ரொம்பவுமே முக்கியமான எல்லோருமே பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம். 



CINEMATIC WORLD - 021 - THE AVENGERS 2012 - BEST MOVIE EVER !!! - சிறப்பான தரமான சம்பவங்கள் இந்த படத்தில்தான் பார்க்க முடியும் !! [REGULATION-2024-00038]







இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ பிலிம் என்றால் அது ஒரு தனிப்பட்ட ஒருவரின் கதையாகத்தான் இருக்கும் . தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜேன்டில்மென் படத்துக்கு பின்னால் சூப்பர் பவர்ஸ் இருப்பவர்கள் சேர்ந்து உலகத்தை காப்பாற்றுவது போன்ற படங்கள் அவ்வளவாக இல்லை. பொதுவாக கடனில் எடுத்தாலும் அயர்ன் மேன் படம் கொடுத்த ஹிட்தான் அடுத்து அடுத்து மார்வேல் ஸ்டுடியோஸ்க்கு கேப்டன் அமெரிக்கா , தோர் போன்ற படங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்தது. ஆனால் அவெஞ்சர்ஸ் படம் மார்வேல் ஸ்டுடியோஸ் எடுத்ததில் பெரிய ரிஸ்க். 

காரணம் என்னன்னா டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூ , விஷுவல்லாக கொஞ்சம் கூட பிசிறு தட்டாத ஒரு பக்காவான வி ஏப் எக்ஸ் இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் மாயாஜால உலகத்தின் லோகி நிஜமாகவே பூமியின் மேலே ஒரு ஏலியன் படையெடுப்பை நடத்துவார். ஒரு ஒரு காட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டு இருந்த டோனி ஸ்டார்க் , ஸ்டீவ் ரோஜர்ஸ் , நடாஷா , கிளின்ட் பார்டன் புரூஸ் பேனர் போன்றவர்களை ஒன்றாக சேர்த்தது. பின்னால் மனிதர்கள் இதுவரையில் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு அட்டாக்கை அவர்களிடம் இருக்கும் எல்லா சக்திகளையும் கொடுத்தாவது தடுக்க வேண்டும் என்ற நிலைமை வருகிறது. இப்படித்தான் சூப்பர் ஹீரோக்களாக எல்லோருமே ஒன்று சேர்க்கின்றனர். 

ஹல்க் - கதாப்பத்திரம் தி இன்க்ரேடிபிள் ஹல்க் படத்தில் இருந்தே நேரடியாக கன்டினியூ ஆகிறது, இருந்தாலும் புதிதாக ரீ-கேஸ்ட் பண்ணப்பட்ட புரூஸ் பேனர் நடிகர் மார்க் ராப்பாலோ மிகவும் தெளிவான நடிப்பை கொடுத்துள்ளார். டோனி ஸ்டார்க்காக நடிக்கும் ராபர்ட் டோனி ஜூனியர் அவருடைய அயர்ன் மேன் கதாப்பத்திரத்தை சூப்பர்ராக பண்ணியிருப்பார். மேலும் நடாஷா , ஹாவ்க்கை , போன்ற லேஜெண்ட் சூப்பர் ஹீரோக்களுக்கும் நிறைய கெத்தான மாஸ் சண்டை காட்சிகள் படத்துக்குள் இருக்கிறது. படம் வேறு லெவல்லில் இருக்கிறது. இந்த படம் உங்களை சூப்பர் ஹீரோக்களின் உலகத்துக்கே கொண்டு போகும் : 16/9 ஆஸ்பெக்ட் ரேஷியோ எல்லாம் சினிமா படங்களுக்கு சரியாக வராது ஆனால் இந்த படத்துக்கு ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. ஒரு ஒரு காட்சியும் செதுக்கபட்டு இருப்பது போல இருக்கிறது. 

இந்த படம் எதனால் பிடிக்கும் என்றால் விஷுவல்லாக அந்த கிளைமாக்ஸ் ஃபைட் ஸீன்களை பிரமாதமாக பண்ணியிருப்பார்கள் . நூறுக்கும் மேற்பட்ட பலமான ஏலியன்களை வெறும் ஆறு சூப்பர் ஹீரோக்கள் அடித்து நொறுக்குவது பொதுவாக எல்லா படங்களிலும் பார்த்துவிட முடியாது. கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூ , டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூ , சினிமாட்டிக் பாயிண்ட் ஆஃப் வியூ என்ற மூன்று விஷயங்களிலும் ஆவேன்ஜெர்ஸ் ஒரு ஸ்ட்ராங்க்கான படம்  என்பதால் இந்த படம் அவதார் அளவுக்கு மக்களை டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணாமல் கமர்ஷியல்லாக ஹிட் கொடுத்து இருக்கிறது. 





CINEMATIC WORLD - 020 - THE PEANUTS MOVIE - TAMIL REVIEW - பள்ளிக்கூட காதல் கதை !! - [REGULATION-2024-00037]








உங்களுக்கு பள்ளிக்கூட காதல் கதைகள் நினைவில் இருக்கா ? அப்படின்னா இந்த படம் பாருங்களேன் ! சார்லி அவன் நேசிக்கும் அந்த ரெட் கேர்ள்ளை இம்ப்ரஸ் பண்ண ரொம்ப ரொம்ப அதிகமா முயற்சி பண்ணுவான் ஆனால் எல்லாமே சொதப்பல்லாக மட்டும்தான் முடியும். அனிமேஷன் ரொம்ப ரொம்ப கியூட்டாக இருக்கும் , எனக்கு தெரிஞ்சு இந்த படத்தில் மட்டும்தான் பெரியவர்களை இல்லாமல் வெறும் ஜூனியர் கத்தாப்பாத்திரங்களை கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார்கள் . சார்லஸ் எம் ஸ்கால்ஸ் என்ற கதை ஆசிரியரின் நியூஸ் பேபர் நெடுந்தொடர் (நம்ம ஊரு கன்னித்தீவு மாதிரி ) கதிகாப்பாத்திரங்களின் CGI வெர்ஷன்தான் இந்த படம். அமெரிக்க ஆடியன்ஸ்க்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கலாம். இந்த திரைப்படம் 2016 ல் வெளிவந்தது , இந்த திரைப்படம் ஒரு கலகலப்பான அனிமேஷன் திரைப்படம் , வாழ்க்கை முழுவதும் சின்ன சின்ன தோல்விகள் சந்தித்தாலும் ஒரு நல்ல  காரணத்துக்காக வெற்றியாளராக மாற ஆசைப்படும் குட்டி பையன் சார்லி ப்ரவுன் மேலும்  அவனுடைய நட்பு பெட் ஆக இருக்கும் ஸ்னுபியின் கலகலப்பான குறும்புகள்தான் இந்த படத்தின் திரைக்கதை என்பதால் கதையாக பார்த்தால் இதுவரைக்குமே நீங்க பார்த்த எந்த படத்திலும் இல்லாத ஒரு SCREENWRITING லெவல் இந்த படத்தில் இருப்பதால் இந்த திரைப்படமும் நீங்கள் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய திரைப்படம். அப்புறம் எப்போதும் போலத்தான் அந்த ஃபாலோ பட்டன் ப்ரெஸ் பண்ணுங்கள். #AD களை கிளிக் பண்ணினால் உங்களுக்கு புண்ணியமாக போகும் !! உங்களுடைய பள்ளிக்கூட காதல் கதைகளை கமெண்ட்டில் போடுங்கள் பார்க்கலாம் !! இந்த படம் ஒரு நியூஸ் பேபர் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கதை (நம்ம ஊரு தினத்தந்தியில் இருக்கும் கன்னித்தீவு கதையை போல வெளிநாட்டில் இருக்கும் ஒரு கதை ) தொடரை அடிப்படையாக கொண்டு வந்தது என்பதால் மொத்த படத்தையும் அந்த காமிக் கதைகளை எந்த ஸ்டைல்லில் வரைந்து இருக்கின்றார்களோ அதே ஸ்டைல்லில் வரைந்து இருக்கின்றார்கள். இந்த படத்துக்கு இதுவும் ஒரு பிளஸ் பாய்ண்ட் என்று அமைந்து இருக்கிறது.


Saturday, December 22, 2018

CINEMATIC WORLD - 019 - MEGAMIND (2010) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00036]










நகரத்தை கலக்கும் சூப்பர் வில்லன் மெகா மைண்ட் அவர்கிட்ட இருந்து எல்லோரையும் காப்பாற்றும் மெட்ரோ மேன் , ஒரு கட்டத்துல மெட்ரோ மேன் இல்லாம போகும்போது புது வில்லன்கிட்ட இருந்து எல்லோரையும் காப்பாத்தக்கூடிய பொறுப்பு சூப்பர் வில்லன் மெகா மைண்ட் கிட்ட வந்தா அடுத்து என்ன நடக்கும் அப்டிங்கறதுதான் இந்த திரைப்படம் ,  இந்த படம் 2010 ல வெளிவந்தது. மெகா மைண்ட் ஒரு ஃபைனஸ்ட் அனிமேஷன் ஃபில்ம் என்று சொல்லலாம். லைஃப்ல ஒரு மனிதன் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையால் நல்ல பாதை அல்லது மோசமான பாதையை தேர்ந்து எடுக்கும்போது நடக்கக்கூடிய பிரச்சினையை ரொம்பவே தெளிவாக எக்ஸ்பிளைன் செய்திருப்பார்கள்.. பிக் ஹீரோ 6 திரைப்படத்தின் கதைக்களம் சேர்த்து கம்பரிசன் செய்து பார்த்தால் ஒரு நல்ல சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றும் மெகா மைண்ட் திரைப்படத்தை சொல்லலாம். இந்த படம் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடி ஆக்சன் மூவி என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே வாழ்க்கையில் எல்லாமே கிடைச்சா சூப்பர் ஹீரோவாக வாழலாம் ஆனால் வாழ்க்கையில் எதுவுமே கிடைக்க வில்லை என்றால் சூப்பர் வில்லன்னாகத்தான் வாழ முடியும் அதுதான் MEGAMIND படத்துடைய CONCEPT . இந்த படம் நீங்க முதல் முறை பார்த்தால் அப்போதே நன்றாக இருக்கும், படத்தின் ஒரு சூப்பர் வில்லனாக இருந்தாலும் இந்த LOVE - ACTION - DRAMA  - எல்லாமே முடியும்போது MEGAMIND உங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரமாக மாறுவார். ஒரு சில பேரை மக்கள் காரணமே இல்லாமல் கொண்டாடி கதாநாயகராக மாற்றிவிடுவார்கள் இன்னொரு பக்கம் ஒரு சில பேரை ரிஜெக்ட் பண்ணி ரிஜக்ட் பண்ணி வெறுப்பாகவே நடத்துவார்கள் ஆனால் இந்த மாதிரி ஒரு மட்டமான ஆட்டிட்யூட்டை விட்டுத்தள்ளிவிட்டு எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும் , அப்படி பார்த்தால்தான் சக மனிதர்களிடம் எப்படி அன்பாக பழகவேண்டும் என்று ஒரு நல்ல மைண்ட்ஸெட் உங்களுடைய மண்டைக்குள் உருவாகும். இதுதான் நான் புரிந்துகொண்ட கான்செப்ட். இந்த மாதிரி நிறைய கருத்துக்களை கேட்டு வருங்கால சந்ததியினருக்கு கல்வெட்டில் செதுக்கி வைக்க நோட்ஸ் எடுத்த்துக்கொள்ள வேண்டும் என்றால் நம்ம வலைப்பூவுக்கு ஃபாலோ பண்ணிக்கொள்ளுங்கள் !!!

Saturday, December 8, 2018

இது என்ன மாதிரி BGM - பின்னி எடுக்கும் AVENGERS - END GAME முன்னோட்டம் !! - திரை விமர்சனம் ! - [REGULATION-2024-00035]



AVENGERS INFINITY WAR திரைப்படத்தை அடுத்ததாக மார்வேல் சினிமா யுனிவெர்ஸ் ஃபேன்ஸ் எல்லோருமே மிக மிக  அதிகமாக எதிர்பார்த்த அவென்ஜ்ர்ஸ் இன் அடுத்த திரைப்படத்தின் ட்ரைலர் அவென்ஜ்ர்ஸ் END GAME இன்று வெளியானது . இன்னைக்கு 08- DECEMBER -2018 - பொதுவாகவே அவெஞ்சர்ஸ் படங்களின் ஃபேன்ஸ்களுக்கு தெரியும். 

இந்த அளவுக்கு மார்வேல் சினிமா யுனிவெர்ஸ்க்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் காரணம் அவெஞ்சர்ஸ் படங்கள் நல்ல கதை அம்சத்துடன் DC படங்களை போல இல்லாமல் மிகவும் சிறப்பாக கதைகளை நகர்த்திக்கொண்டு இருக்கிறது. 

இன்பினிட்டி வார் படம் பார்த்தவர்களுக்கு கடைசி கிளைமாக்ஸ்ஸில் சூப்பர் ஹீரோக்கள் மட்டும் இல்லாமல் உலகத்தின் பாதி மக்கள் காற்றோடு காற்றாக கலந்து போகும்படி தானோஸ் மாயாஜாலம் செய்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால் முதல் முறையாக தியேட்டர்ரில் ஒரு படம் பார்ப்பவருக்கு இந்த கிளைமாக்ஸ் அல்லது கதைக்களம் புரிய வாய்ப்பே இல்லை. 

இன்பினிட்டி வார் படம் கிளைமாக்ஸ் பார்த்தால் அடுத்து என்ன நடக்கும் , என்ன நடந்து இருக்கும் ? ஸ்பேஸ்க்கு போய் மாட்டிக்கொண்டு இருக்கும் டோனி ஸ்டார்க் உயிரோடு வர முடியுமா ? கேப்டன் அமெரிக்கா என்ன ஆனார் ? தானோஸை தோற்கடிக்க முடியுமா ? என்ற கேள்வி இப்போது இருக்கிறது. 

இந்த டிரெய்லர் பார்த்ததும் எமோஷன் ஆகி கண்களில் கண்ணீர் வந்தால் கூட ஆச்சரியம் இல்லை. அப்படி ஒரு BGM. அப்படி ஒரு CINEMA காட்சிகள். குறிப்பாக இந்த முன்னோட்டம் தானோஸ் பண்ணிய விஷயங்களை மாற்றவே முடியாது என்பது போல இருக்கிறது !! - இன்டர்நெட்டில் செக் பண்ணி பார்க்கும்போது AUDIOMACHINE - SO SAY WE ALL . என்ற இந்த BGM தான் இந்த TRAILER பின்னணியில் பயன்படுத்தி இருக்கிறார்கள். டோனி ஸ்டார்க் கத்திக்குத்து முதல் கேப்டன் கண்கலங்கியது வரைக்கும் எல்லாமே இந்த TRAILER ஐ ரொம்பவுமே எமோஷனல்லாக மாற்றியுள்ளது. !! 

ஒரு சூப்பர் ஹீரோ படத்தின் TRAILER க்கு இவ்வளவு எமோஷனல்லாக நான் FEEL பண்ணியதே இல்லை. ஐ யம் ஜஸ்ட் ஸேயிங் வாவ்  !! 




Saturday, October 13, 2018

CINEMATIC WORLD - 018 - BATMAN BEGINS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00034]




BRUCE WAYNE அவர் வாழ்ந்துகொண்டு இருக்கும் GOTHAM CITY ல் நடக்கும் குற்றங்களை தடுக்க BATMAN என்ற அடையாளத்தை தேர்ந்தெடுக்கிறார் . LEAGUE OF SHADOWS என்ற அமைப்பின் முலமாக பெற்ற பயிற்சியின் உதவியுடனும் BATMAN SUIT, BAT-MOBILE CAR போன்ற நவீன சாதனங்களுடன் குற்றங்களை தடுக்கிறார் , ஆனால் ஒரு கட்டத்தில் அந்த LEAGUE OF SHADOWS அமைப்பு GOTHAM CITY ஐ அழிக்க முயற்சிக்கும்போது பேட்மேனால் GOTHAM நகரத்தை அவர்களிடம் இருந்து காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை , இந்த திரைப்படம் நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம் , 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. CHRISTOPHER NOLAN அவருடைய வழக்கமான கான்செப்ட்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த படத்தில் வொர்க் பண்ணியிருப்பார். இந்த படம் பேட்மேன்க்கு எப்படி இவ்வளவு சண்டை பயிற்சிகள் தெரிந்து இருக்கிறது என்பதற்க்கு PROPER ஆன காரணம் சொல்ல மிக மிக ஆரம்பத்தில் இருந்தே BRUCE இன் வாழ்க்கையை காட்டுகிறது. இங்கே மெச்சூரிட்டி என்பது அவனுடைய ஒருவனுடைய சந்தோஷத்துக்காக அப்பா அம்மாவை கொன்றவனை பழிவாங்க கொலை பண்ண செல்லும் BRUCE எப்படி அந்த மொத்த நகரத்தையுமே CORRUPT ஆன கெட்டவர்களின் நெட்வொர்க்கிடம் இருந்து தனி ஒரு ஆளாக காப்பாத்த போராடுகிறான் என்னும் அளவுக்கு DEVOLOP ஆகிறான் என்பதுதான். கண்டிப்பாக TIM BURTON இன் BATMAN படங்களை இன்ஸ்பிரேஷன் பண்ணி இருக்கிறார். மேலும் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று பார்த்தாலும் NOLAN நல்ல SCREENPLAY கொடுத்து இருக்கிறார். SCARECROW என்ற வில்லனை காட்டும்போது விஷுவல் EFFECTS க்கும் வேலை கொடுத்து இருக்கிறார். 

CINIMATIC WORLD - 017 - INCEPTION - TAMIL REVIEW - கனவு கனவு ! கனவு மேல கனவு ! [REGULATION-2024-00033]




DOM COBB மற்றும் அவரது கனவு ஆராய்ச்சி குழுவில் இருக்கும் இந்த புத்திசாலிகள் எல்லோரும் மற்றவர்களின் கனவுகளுக்குள் சென்று அவர்களின் நினைவுகளில் இருந்து குறிப்பிட்ட தனிப்பட்ட தகவல்கள் (பாங்க் பின் , பினாமி அக்கவுண்ட் , ஆதார் கார்ட் ஜெராக்ஸ் , எல் ஐ ஸி பாலிசி மாதிரியான தகவல்கள் )  எல்லாவற்றையும் எடுக்கும் சக்திகள் கொண்டவர்கள் , ஆனால் இதுபோல கனவுகளுக்குள் செல்லும்போது ஒரு முறை அந்த கனவில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது , அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இன்செப்ஷன் திரைப்படத்தின் திரைக்கதை , இந்த திரைப்படத்தின் விசுவல் எஃபக்ட்ஸ் மற்றும் திரைக்கதை சிறப்பாக இருப்பதால் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய திரைப்படம் ..2010 ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் அந்த ஆண்டு நான்கு அகாடமி AWARDS வென்றது.  இந்த படத்தில் கனவுக்குள் செல்லும் காட்சிகள், கனவு உலகம் உடைந்துபோகும் காட்சிகள் இந்த காட்சிகள் எல்லாமே மிகவும் சிறப்பாக காட்சியமைப்பு செய்யப்பட்டு இருக்கும். கதைக்களம் மிகவும் தெளிவாக எக்ஸ்பைளைன் செய்யப்பட்டு இருப்பதும் இந்த படத்தில் ஒரு பிளஸ் பாய்ண்ட் எனலாம். கண்டிப்பாக CLIMAX பற்றி சொல்லியே ஆக வேண்டும் இந்த படத்துடைய இறுதி காட்சி ரொம்பவே அருமையாக இருக்கும் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்க !! எனக்கும் இதே மாதிரி ஒரு கனவு வரும் , பாஸ் நீங்க சர்வீஸ் கொடுத்த ஃபோன் ரெடி ஆயிருச்சு நான் வேணும்னா கூரியர் போட்டு பார்சல் உங்க வீட்டுக்கு அனுப்பட்டுமா என்று ஒருவன் எனக்கு புது போனில் கால் பண்ணி கேட்பான் !! நானும் அந்த போனை அனுப்புங்க ப்ரோ ! என்று சொல்லிவிட்டு ஃபோன்னை வைத்துவிடுவேன் ! டேய்..கனவுல கூட வேலை பார்க்கும் கம்பெனிக்கு விசுவாசமா இருக்கியே ! உன்னை எல்லாம் என்னன்னு சொல்ல !! நீ நல்லா இருப்ப மச்சான் ! உன் நல்ல மனசுக்கு ஒண்ணும் ஆகாது !

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் :

CINIMATIC WORLD - 016 - THOR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00032]



கடவுளுக்கே பிரச்சனைன்னா என்னதான் பண்ண முடியும் ? இடி மின்னலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ள  இளவரசர் THOR ODINSON , அவருடைய தந்தை ODIN நிர்வாகத்தில் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தி இந்த படத்தில் சொல்வது போல ஒன்பது மண்டலங்களிலும் ஆதிக்கம் நிலைநாட்டி அமைதியை பாதுக்கக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் நம்ம THOR  கோபத்துக்கே பிறந்து கோபத்துக்கே வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் இவர் பூமிக்கு தண்டனைக்காக அனுப்பப்படுகிறார் இங்கே இன்னொரு திருப்பம்  இவருடைய மின்னல் சக்தியும் சுத்தியல் பறிக்கப்பட்டதால் போகிறது. செம்ம கடுப்பில் அப்பா ODIN இருப்பதால் வீட்டுக்கு போக சான்ஸ்ஸே இல்லாமல் போகும்போது ஒரு மாஸ்டர் பிளேன் போட்டு நம்ம THOR ன் இளைய  சகோதரர்  மற்றும் மாயாஜாலங்களில் சிறந்தவராக இருக்கும் LOKI மணிமுடியை எடுத்து அரசராக முயற்சி செய்கிறார். இப்போது காதல் , குடும்பம் , அன்பு என்று பூமியில் நிறைய விஷயத்தை கற்றுக்கொண்ட நம்ம THOR ஆல் LOKI ன் இந்த கொலை முயற்சியை தடுக்க முடிந்ததா ? என்பதுதான் திரைக்கதை , இந்த திரைப்படம் 2011 ல் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் THOR THE DARK WORLD - 2013 ல் வெளிவந்ததது. இது ஒரு கமர்ஷியல் படம் ஆனால் பார்க்க நன்றாக இருக்கும். ஒரு சூப்பர் ஹீரோ தன்னை பற்றி மட்டும் நினைத்து ஆணவமாக இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய மனது மாறுகிறது. மற்றவர்களுடைய உயிர் அவருடைய உயிரை விட முக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார். இதுதான் அன்புடைய மாயாஜாலம். இந்த படம் அவெஞ்சர்ஸ் படத்துக்காக THOR கதாப்பாத்திரத்தை INTRO கொடுக்க எடுக்கப்பட்ட படம் என்றாலும் இந்த படத்தின் நல்ல கருத்துதான் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது. 


CINIMATIC WORLD 015 - MARVEL : CAPTAIN AMERICA : THE FIRST AVENGER - [REGULATION-2024-00031]

Steve Rogers இரண்டாம் உலகப்போர் நடக்கும் 1942 ம் ஆண்டு Military Recruitment ல் சேர நினைக்கிறார் , ஆனால் சில காரணங்களால் Super Soldier Experiment மூலமாக வலிமையான ஒரு Superhuman ஆக மாறுகிறார் , Johann Schmidt என்பவர் Tesseract என்ற அதிசயமான ஒரு பொருளின் சக்திகளை பயன்படுத்தி அவருடைய Hydra என்ற அமைப்பின் உதவியுடன் உலகை கைப்பற்ற நினைக்கிறார் , அந்த அமைப்பை எதிர்க்கும்  Captain America (Steve Rogers )அந்த அமைப்பு மூலமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் போராட்டம்தான் இந்த Captain America திரைப்படத்தின் கதை , இந்த திரைப்படம் 2011 ல் வெளிவந்தது , இந்த திரைப்படத்தை தொடர்ந்து The Avengers திரைப்படம் வெளிவந்தது ..

CINIMATIC WORLD - 014 - MARVEL : IRON MAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - இரும்பில் இருதயம் முளைத்த கதை !! - [REGULATION-2024-00030]

TONY STARK ஒரு தொழில் அதிபர் , கண்டுபிடிப்பாளராக இருப்பவர் . ஒரு கட்டத்தில் இவரது தொழில்நுட்பம் மோசமானவர்களால் பயன்படுத்தப்பட்டு இந்த விஷயம் அவருக்கு தெரியும் முன்பே TEN RINGS என்ற மோசமானவர்களின் அமைப்பை சேர்ந்தவர்களால் கடத்தப்படுகிறார் . ஆனால் ஒரு வழியாக அவர்களிடம் இருந்து YINSEN என்ற நல்ல மனம் உள்ள மருத்துவரின் உதவியுடன் ELECTROMECHANICAL கவசம் தயாரித்து அதன் மூலமாக தப்பிக்கிறார் . மேலும் ELECTROMECHANICAL கவசங்களின் உதவியுடன் Iron Man என்ற அடையாளத்துடன் அந்த மோசமான அமைப்பை எதிர்த்து போராட நினைக்கிறார் .. அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் கதை . இந்த திரைப்படம் 2008 ம் ஆண்டு வெளிவந்தது . MCU என்ற திரைப்பட வரிசையில் (MARVEL CINEMATIC UNIVERSE) -  இந்த திரைப்படம் முதல் திரைப்படம்  ஆகும் . இந்த படம் வெளிவந்த வருடத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் 2008 , இந்த காலத்தில் இவ்வளவு எக்ஸ்பேன்ஸ் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இருக்கும் படம் பார்ப்பது அரிது. இந்த படம் மற்ற சூப்பர் ஹீரோ படங்களை போலவே போயிருக்கலாம் , ஆனால் கதையை ரொம்பவுமே அருமையாக கொடுத்து இருப்பார்கள் , டோனி ஸ்டார்க் யாரை பற்றியும் கவலைப்படாமல் தனி ஒரு மனிதனாக வாழும் ஒரு கோடீஸ்வரர், அவருடைய தொழில் நுட்பத்தால் ஆயுதங்களை பாதுகாப்பு துறைகளுக்கு கொடுக்கும்போது பயங்கரவாதிகளால் கடத்தப்படுகிறார், இருந்தாலும் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் அவருக்கு கிடைத்த ஒரே ஒரு நண்பரான யின்ஸேன் உதவியுடன் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மெட்டல் கவசத்தை செய்து உயிரை பணயம் வைத்து தப்பித்து அமெரிக்கா திரும்புகிறார். ஆயுதங்களை உருவாக்குவதை அடியோடு விட்டுவிட்டு அடுத்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு IRON MAN கவசத்தை உருவாக்குகிறார். இந்த படத்தில் ஒரு தனி மனிதனாக பயங்கரவாதிகளோடு சண்டை போடும் அந்த காட்சிதான் எனக்கு பிடித்து இருந்தது. அதாவது நிகழ்கால வன்முறையில் ஹெல்ப் பண்ண யாருமே வரமாட்டார்கள். ஆனால் ஒரு சூப்பர் ஹீரோவாக டோனி ஸ்டார்க் அவருக்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் அங்கே இருக்கும் அப்பாவி குடும்பங்களை காப்பாற்ற களத்தில் குதிக்கிறார். இதுதான் மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கும் டோனி ஸ்டார்க்குக்கும் இருக்கும் வித்தியாசம். அதுதான் இந்த IRON MAN படங்களை தனித்து காட்டுகிறது. அதனால்தான் ஹிட் அடிக்கிறது. 

Wednesday, October 10, 2018

CINIMATIC WORLD - 013 - HOTEL TRANSYLVANIA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00029]

COUNT DRACULA ஒரு ஹோட்டல் TRANSYLVANIA என்ற MONSTERS களுக்கான ஹோட்டலை நடத்துபவர் , இப்போது ஒரு புதிய பயணி JONATHAN தவறுதலாக MONSTERS களின் இந்த HOTEL கு வருகை தருகிறார் . இதனால் COUNT DRACULA ஒரு மனிதன் இங்கே வந்திருப்பதை யாருக்கும் சொல்லாமலே எப்படி எப்படியாவது சமாளிக்க முயற்சி செய்கிறார் .. இப்படியே போகும் திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் HOTEL TRANSYLVANIA ன் கதை . THE MUMMY , FRANKIENSTIEN , WEREWOLF , INVISIBLE MAN என ஒரு MONSTER பட்டாளமே நகைச்சுவையான கதாபாத்திரங்களாக இருப்பது இந்த திரைப்படத்தின் கலகலப்பான திரைக்கதையை அமைக்கிறது . இந்த திரைப்படம் 2012 ம் ஆண்டு வெளிவந்தது . பேஸிக்காக இது ஒரு வித்தியாசமான காதல் கதை. இந்த படம் வெளிவந்த காலத்தில் நல்ல விமரசங்களை பெற்றது என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் !!


CINIMATIC WORLD - 012 - MINIONS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00028]




மினியன்ஸ் ஒரு அசத்தலான நகைச்சுவை திரைப்படம் /DESPECABLE ME திரைப்படங்களில் வரும் குட்டி குட்டி மினியன்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா .. ? இந்த விமர்சனத்தில் இந்த படத்தின் கதையை தெரிந்துகொள்வதை விட படமாக பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்களேன் இங்கே அதற்காகவே ஒரு கலகலப்பான திரைப்படம் . KEVIN , BOB , STUART இருக்கும் மினியன்ஸ் குழு தலைவராக இருக்க ஒரு வில்லனை தேடுகிறது .. இந்த தேடலில் லண்டன் செல்லும் இவர்களுக்கு அறிமுகமாகும் கதாபாத்திரம்தான் SCARLETT. நிறைய கலகலப்பான சம்பவங்களுடன் அருமையான திரைக்கதையில் இந்த 3D திரைப்படம் அருமையாக உள்ளது .. நிச்சயம் மிஸ் பண்ணாமல் பார்க்கலாம் ..இன்னும் சொல்லப்போனால் வலைப்பூ கமிட்டியின் சார்பாக இந்த படம் ஒரு சிறப்பு #MOVIE_RECOMMENDATION. இந்த படம் எதனால் பேர்ஸனலாக பிடிக்கும் என்றால் ஒரு ஆரிஜின் ஸ்டோரியில் இருந்து நம்ம காதனாயாகர்களின் வாழ்க்கையை ஃபாலோ பண்ணிக்கொண்டு இருக்கிறோம். இப்படி ஒரு ஸ்மார்ட்டாக உருவாக்கப்பட்ட திரைக்கதையை நான் வேறு எந்த படங்களிலும் பார்த்தது இல்லை. இந்த படத்துக்கு நிறைய பிளஸ் பாயிண்ட்கள் உள்ளது அதுக்காக தனியாக கட்டுரையே போடலாம். இருக்கட்டும் ! இந்த வலைப்பூவை அனைத்து இதழ்களையும் பாருங்கள் !! உங்களுக்கு கண்டிப்பாக இந்த வலைப்பூ பிடிக்கும். 

CINIMATIC WORLD - 011 - SING - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - உங்களில் யார் அடுத்த சூப்பர் சிங்கர் !! - [REGULATION-2024-00027]




இந்த திரைப்படம் 2016 ல் வெளிவந்தது ..இந்த திரைப்படம் Music பிடித்தவர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் .. இந்த திரைப்படமும் ஒரு அருமையான அனிமேஷன் திரைப்படம்தான் .இப்போது இந்த திரைப்படத்தின் கதை .. " நஷ்டத்தில் இருந்தாலும் அவருடைய இசை அரங்கத்தை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் KOALA அவருடைய இசை நிகழ்ச்சியை நடத்த முயற்சி செய்கிறார் .. இருந்தாலும் ஒரு தவறுதலால் இசை நிகழிச்சியின் பரிசு தொகை ஆயிரம் டாலர்கள் என்பதற்கு பதிலாக லட்சம் டாலர்கள் என பதியப்பட்டுவிட்டது . இந்த உண்மை தெரியாமலே உரிமையாளர் KOALA இசை நிகழ்ச்சியை நடத்த நினைக்கிறார் .. இன்னும் நிறைய கனவுகளுடன் பங்குபெறும் போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரியவருகிறது .. இனிமேல் என்ன நடக்கும் என்பதுதான் SING திரைப்படத்தின் கதை .. ZOOTOPIA திரைப்படத்தில் இருப்பது போலவே இந்த திரைப்படத்திலும் Animals அனிமேஷன் கதாபாத்திரங்கள் அருமை .. மாயாஜாலங்களும், அறிவியல் விஷயங்களும் இல்லாமல் எதார்த்தமான திரைக்கதையும் இந்த திரைப்படத்தின் தனித்தன்மையாக . இந்த திரைப்படம் நிச்சயமாக எல்லோரும் பார்க்கலாம் . இல்லூமினேஷனின் மற்ற படங்கள் போல இந்த படம் இல்லை. இது ஒரு முழுக்க முழுக்க மியூசிக்கல் ஜெனர்க்கு அர்ப்பணிப்பு பண்ணப்பட்ட படம். கிளைமாக்ஸ்ல உங்களுக்கு அது புரியும். இந்த TROLLS படம் போல மியூசிக்தான் இந்த படத்தின் கதையின் ஆணிவேர். நம்ம ஊரு முகவரி படம் போல மியூசிக் மற்றும் பாடல் துறையில் சாதிக்க முனைவோருக்கு இந்த படம் இண்டரெஸ்ட்டிங்காக இருக்கலாம் மற்றபடி பொதுவாக ஆடியன்ஸ் பார்த்தாலும் கதை நன்றாகத்தான் இருக்கும். மொக்கை போட்டு இருக்க மாட்டார்கள். 

Tuesday, October 9, 2018

CINIMATIC WORLD - 010 - DESPICABLE ME 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00026]



2010 ஆண்டு வெளிவந்த DESPICABLE ME திரைப்படத்தின் அடுத்த பாகம்தான் இந்த DESPICABLE ME 2 . இந்த MOVIE ல GRU ஒரு வில்லனாக இருப்பதால் ANTI VILLAIN LEAGUE வில்லன்களை தடுக்கும் அமைப்பு ல இருக்கும் LUCY உடன் இணைந்து PX 41னு ஒரு பொருளை எப்பவுமே சொன்ன விஷயத்தை தவிர மற்ற எல்லா விஷயத்தையும் செய்யும் MINIONS உடன் சேர்ந்து தேடுறாங்க .. இப்போ புதிதாக உதயமாகும் வில்லன் EL MACHINO இடம் இருந்து GRU எல்லோரையும் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படத்தின் கதை .. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் MINIONS யின் கலாட்டாவுடன் கலகலப்பாக இருக்கும் இந்த படம் மிஸ் பண்ணாம பார்க்கவேண்டிய ஒரு நல்ல  திரைப்படம் இந்த திரைப்படம்  2013 ல் வெளிவந்தது .   இந்த படத்தில் GRU LOVES LUCY என்று ஒரு ரொமான்டிக் காமெடி எலிமெண்ட்ஸ் எல்லாம் நிறையவே இருக்கும் கூடவே மினியான்ஸ் காமேடியும் இருக்கும். என்னதான் ஒரு காலத்தில் ஊரையே உள்ளங்கையில் வைத்து இருந்த சூப்பர் வில்லனாக இருந்தாலும் இப்போது GRU வை மூன்று குழந்தைகளின் வளர்ப்பு அப்பாவாக பார்க்கும்பொது நன்றாகத்தான் இருக்கிறது. படம் முழுக்க நல்ல பாசிட்டிவ்வான விஷயங்கள் இருக்கிறது. EL MACHINO வரும் வரைக்கும்தான்.இங்கே  MINIONS பற்றி என்ன சொல்ல ? அடுத்து என்ன பண்ணும்ணு கொஞ்சம் கூட கணிக்க முடியாத இந்த மினியான்ஸ் ரொம்பவுமே புத்திசாலித்தனமா செயல்படக்கூடிய இவைகள் அடிப்படையில் ஒரு ஐஸ்கிரீம்க்கு ஆசைப்பட்டுக்கூட பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. மொத்தத்தில் இல்லுமினேஷன் ஸ்டுடியோவில் இருந்து இன்னொரு தரமான படைப்பு இந்த DESPICABLE ME 2. போன படத்துக்கு நல்ல இம்ப்ரூவ்மெண்ட். மினியான்ஸ்க்கு இன்னும் நிறைய சினிமா படங்கள் கொடுங்கள். கொஞ்சம் கூட யோசிக்காம முடிவுகளை எடுக்கும் நம்பிக்கையான இந்த குட்டி சொல்ஜெர்ஸ் இப்போது மக்களின் மிக விருப்பமான ஹீரோக்களாக மாறிவிட்டார்கள். 

Saturday, September 29, 2018

CINIMATIC WORLD - 009 - UP - DISNEY ANIMATED FILM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00025]




பார்க்க வேண்டிய அருமையான திரைப்படங்களின் பட்டியலில் இந்த திரைப்படத்தை நிச்சயமாக சேர்த்துக்கொள்ளலாம். தன்னுடைய மனைவி காலாமான பின்னால் அவருடைய நினைப்பில் வாழ்ந்துகொண்டு இருக்கும்  CARL ஐ அவருடைய வீட்டை இடிக்க வேண்டும் என்று சொல்லி நிறைய பேர் பிரச்சனையாக பண்ணிக்கொண்டு இருப்பதால் ஒரு கட்டத்தில் அவருடைய மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது வீட்டின் கூரை முழுவதும் ஹீலியம் பலூன்களை பயன்படுத்தி ஆகாயத்தில் பறக்க வைக்கிறார்.. (நிஜமாத்தான்)  ஆனால் கதை இங்கே முடியவில்லை. 


ஒரு தனி தீவை கண்டுபிடித்து தனியாக இருந்தால் யாருமே எதுவுமே பண்ண மாட்டார்கள் என்று முடிவெடுத்து பறந்து செல்லும் வீட்டில் பயணம் பண்ணிக்கொண்டு இருக்கிறார் நம்முடைய அன்பான கணவர் CARL . இருந்தாலும் அவரே எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் என்னவென்றால்  இந்த பயணத்தில் RUSSEL என்ற பள்ளிக்கூடம் போகும் சின்ன பையனும் இணைந்துவிட்டான். தென் அமெரிக்கா காடுகளில் வாழவேண்டும் என்று முடிவு பண்ணி செல்லும் இந்த பயணத்தில் எங்கேயோ இருந்து வந்த ஒரு அதிசயமான மிக மிக உயரமான பறவையை கண்டுபிடிக்கிறார்கள். !!

அந்த பறவைக்கு KEVIN என்று பெயர் வைக்கிறார்கள். இங்கே நிறைய நாட்கள் அந்த பறவையை கொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டுப்பகுதியில் அலைந்துகொண்டு இருக்கும்  CHARLES என்ற ADVENTURE HUNTER அந்த பறவையை வேட்டையாட நினைப்பதை அறிந்து அவரிடமிருந்து அந்த பறவையை காப்பாற்ற RUSSEL மற்றும் CARL எடுக்கும் முயற்சிகள்தான் இந்த படத்தின் கதை... இந்த அனிமேஷன் திரைப்படம் 2009 ம் ஆண்டு வெளிவந்தது. உங்களுக்கு LOGIC - கை தூரமாக போட்டுவிட்டு MAGIC காக ஒரு படம் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் இந்த படம் ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கலாம். 
 

Sunday, September 16, 2018

CINIMATIC WORLD 008 - GORGEOUS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00024]

TAIWAN ல் ஒரு சிறிய மீனவ கிராமத்தை சேர்ந்த கதாநாயகி  BU கு கடலில் மிதந்துவரும் ஒரு BOTTLE ல் இருந்து ஒரு LETTER கிடைக்கிறது ..அந்த LETTER ஐ தொடர்ந்து அதை  எழுதியவரை தேடி புறப்படுகிறார் BU , அங்கே எதிர்பாராத விதமாக சந்தித்த ஒரு RECYCLING COMPANY இன் முதல்வராக இருக்கும் CN CHAN ஐ காதலிக்கிறார் .. இதனை அடுத்து நடக்கும் சம்பவங்கள் கலந்த ஒரு ROMANTIC COMEDY பிலிம் தான் இந்த GORGEOUS. இந்த திரைப்படம் 1999 ம் ஆண்டு HONG KONG இல் வெளியானது . இந்த திரைப்படத்தை நீங்கள் தமிழில் காணலாம் . பொதுவாக JACKIE CHAN படங்களில் அமேஸிங்கான ஸ்டண்ட் காட்சிகளை எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உங்களுடைய மனதை கவரக்கூடியது. 

ஒரு ஸ்மார்ட்டான சமர்த்தான பணக்கார இளைஞராக ஜாக்கி சான் மனதை கவர்கிறார். இந்த படத்தில் இரண்டு காட்சிகள் மட்டுமே சண்டை காட்சிகள் என்றாலும் BRADLY JAMES ALLEN அவருடைய கதாப்பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். மற்றபடி ஜாக்கி சான் படங்களின் சிறப்பான மார்ஷியல் ஆர்ட்ஸ்களையும் மேலும் தரமான ஸ்டண்ட் காட்சிகளையும் இந்த படத்தில் எதிர்பார்க்கலாம். காதல் காட்சிகள் ரசனையுடன் காணப்படுகிறது. இன்றைய காலத்தில் கார்ப்பரேட் CEO க்கள் காதலில் விழுந்த கதை என்று சொல்லப்படும் கதைகளை பார்க்கும்போது மிகவும் தனித்துவமான ஒரு ரொமான்டிக் காமெடி ! ஒரு சில நேரங்களில் ஸ்லைஸ் ஆஃப் லைப் கதையாக மனதுக்குள் இருக்கிறது. இந்த படத்தின் ஒரு தரமான டிரெய்லர் கூட யுட்யூப் சேனல்களில் இல்லை. அதனால் இணைப்பை கொடுக்க முடியாவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தமிழ் டப்பிங்கில் ஒரு முறை பார்க்கவும். 

தமிழ் டப்பிங்கில் "அதிரடி காதலன்" என்ற பெயரில் MOSER BEAR வெளியீடு பண்ணி SUPER DVD ல் பார்த்ததாக எனக்கு நினைவு இருக்கிறது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். 





CINIMATIC WORLD - 007 - OCEANS ELEVEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00023]



இந்த திரைப்படத்தில் சிறையில் இருந்து வெளிவந்த DANNY OCEAN மிகப்பெரிய CASINO  ஐ கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் .. இதனால் அவரது நண்பர்கள் மற்றும் திறமை வாய்ந்த 11 பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்கிறார் .. மிகவும் அதிநவீனமான பாதுகாப்பு சிஸ்டம்களை கடந்து பாதுகாப்பு நிறைந்த அந்த பெட்டகத்தை கொள்ளையடிக்க முடிந்ததா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை இந்த திரைப்படம் 2001 ம் ஆண்டில் வெளிவந்தது .. இதன் அடுத்தடுத்த பாகங்கள் OCEANS 12 (2004) , OCEANS 13  (2007) ல் வெளிவந்தது .. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நான் இணைப்பில் கொடுக்கிறேன். இந்த படங்கள் எல்லாம் நம்ம காலத்து HEIST படங்கள் போல இருக்காது. வேற லெவல்லில் 1990 ஸ் களின் ஸ்டைல் மற்றும் 2000 ஸ்களின் ஸ்டைல் கலந்து இருக்கும். ஃபேமிலியோடு பார்க்கும் அளவுக்கு இல்லை என்றாலும் தனியாக பார்த்தால் இந்த படங்களை கண்டிப்பாக பார்க்கலாம். ஒரு பெரிய நடிகர்களின் பட்டியலே இந்த படத்தில் நடித்து இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிளேன் போட்டு பணத்தை எடுக்க நினைப்பார்கள். மொத்ததில் கொஞ்சம் பழைய ஸ்டைல் கொள்ளையடிக்கும் டெக்னிக்களை  காட்சிகளாக காட்டும் அளவுக்கு உங்களுக்கு ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் நன்றாக இருக்கும். ஒரு நல்ல சாய்ஸ்ஸாக இருக்கலாம். திரைக்கதை  மெதுவாக நகர்கிறது. எந்த அளவுக்கு மெதுவாக என்றால் CLIMAX வரைக்கும் கொள்ளையடிக்க PLAN போடுவது மட்டுமே சென்றுக்கொண்டு இருக்கும். CLIMAX ல்தான் கொஞ்சம் கொஞ்சமாக போட்டிருக்கும் பிளான்களை நடப்பில் கொண்டுவந்து வெற்றியடைந்து காட்டுவார்கள். இதனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் உங்களுக்கு நிறைய பொறுமை இருக்கும் பட்சத்தில் இந்த படங்களை பாருங்கள். உங்களுக்கு SIMPLE ஆன CINEMA பார்க்க வேண்டும் என்றால் இந்த படங்களை பாருங்கள். இந்த படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் பற்றி இன்னொரு போஸ்ட் போடுகிறேன். அதுவரைக்கும் காத்திருங்கள். 


CINEMATIC WORLD - 006 - THE FOUNDER TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00023]

 


இந்த திரைப்படம் 2017 ம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் கதை RAY KROC எனும் தொழில் அதிபரின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. 1954 ல்  RAY ஒரு  தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேன் ஆக பணிபுரிபவர் என்றாலும் RICHARD மற்றும் MARICE சகோதரர்களின் McDONALDS எனும் துரித உணவகத்தின் நிறுவனத்தின் செயல்படும் விதத்தை கண்டு வியக்கிறார் !! எப்புடியாவது MCDONALDS ல் வேலை பார்த்து பெரிய நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்று போராடுகிறார். 

இதனால் மிகவும் சிரமம் எடுத்து பணம் சேர்த்து இந்த நிறுவனத்தில் இணைந்து  இந்த நிறுவனத்தை இன்னும் விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகளும் அதனால் உருவாகும் துயரங்களையும் துன்பங்களையும் கடந்து விடமுயற்சியாக வேலைபார்த்துக்கொண்டு இருக்கும் இவருக்கு  கடைசி கடைசியாக இவருடைய முன்னேற்றத்துக்கான பலன் கிடைத்து இவரது முயற்சிகள் வெற்றியடைந்ததா ?- இதுதான் இந்த திரைப்படத்தின் கதை THE FOUNDER 2017 ம் ஆண்டு வெளிவந்தது. அவ்வளவுதான் HAPPY ENDING என்று நினைக்க வேண்டாம். உண்மை என்னன்னா RAY இந்த COMPANY யின் FOUNDER கிடையாது. வியாபாரத்தில் சாதிக்க போராடின ஒரு நல்ல மனிதர் இந்த RAY CROC.

வெயிட் , இது ரொம்ப சுமாரான கதையாக இருக்கிறதே ! நான் வேலை பார்க்கும் கம்பெனியில் என்னை அந்த மாதிரி நடத்த மாட்டார்களே ? என்ன பாஸ் கதை விடறீங்களா ? என்று கேட்கும் மைண்ட் வாய்ஸ் புரிகிறது. இன்னைக்கு தேதிக்கு MC DONALDS ஒரு பெரிய COMPANY யாக இருக்க MC DONALDS காரணமே இல்லை. இந்த RAY தான் காரணம். RAY பண்ணுண ஒரு ஒரு விஷயத்துக்கும் MAC BROTHERS முட்டுக்கட்டை போட்டார்கள். ஒரு மனுஷன் அவருடைய வீட்டை அடமானம் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த சாப்பாடு கம்பெனியை மேலே கொண்டு வந்தார் என்றால் அவரை கொஞ்சமாவது மதிக்க வேண்டும். ஆனால் MAC BROTHERS மதிக்கவில்லை. இங்கே RAY இன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஒரு நல்ல LAWYER கிடைத்து இருந்தார். இந்த காரணத்தால்தான் அடுத்த 10 வருடங்களில் RAY முதலாளியாக மாறுகிறார். 

Sunday, September 9, 2018

CINEMATIC WORLD - 005 - ARRIVAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00022]



பூமியில் எல்லாமே நன்றாக சென்றுக்கொண்டு இருக்கும்போது திடீரென்று  பூமியின் மேற்பரப்பில் நடுவானத்தில் புதிதாக 12 வேற்றுகிரக விண்கலங்கள் உருவாகின்றன . இது ஒரு இடத்தில் நடந்தால் பரவாயில்லை இப்படி ஏலியன்கள் உலகம் முழுவதும் தோன்றுவதால் மக்கள் எல்லோருமே பதட்டத்தில் இருக்கிறார்கள் . 

இப்படியாய் பூமிக்கு வந்த விண்கப்பலில் இருக்கும் வேற்றுகிரக வாசிகள் வட்டமாக வட்டமாக நிறைய எழுத்துக்களை எழுதி காட்டுகின்றனர். இவர்கள் பேசும் மொழி மர்மமாகவே இருக்க கோபக்காரராக இருக்கும் US ராணுவத்தில் பணியாற்றும் நம்முடைய COLONEL GT WEBER ஆரம்பத்தில் இந்த வேற்றுகிரக விண்கலங்கள் வந்ததற்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் ஆராய்ச்சி குழுவில் இருக்கும் DOCTOR IAN DONELLY மற்றும் LOUISE என்று மொழியியல் துறையில் ஆர்வமுடன் இருக்கும் கொஞ்சம் பேரை சேர்த்துககொள்கிறார். 

அந்த வேற்றுகிரகத்தினர் பேச முயற்சிக்கும் வட்ட வடிவத்தில் உள்ள சமிக்ஞை எழுத்து வடிவ மொழியின் மூலமாக வேற்றுகரகத்தினர் இந்த உலகத்துக்கு என்னதான் சொல்ல நினைக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும் என்ற காரணத்துக்காக அவர்கள் காட்டும் ஒரு ஒரு எழுத்து சிம்பல்களுக்கும் எப்படியாவது மொழிபெயர்ப்பு பண்ண வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். 

அதே சமயம் அவர்கள் ஆபத்தானவர்கள் என்று புரியும் பட்சத்தில் பாதுகாப்புக்காக சண்டை போட நிறைய படைகள் விமானங்கள் , கப்பல்கள் , ஏவுகணைகள் எல்லாமே தயாராக இருக்கிறது என்பதால் கிடைக்கும் கொஞ்சம் நாட்களுக்குள் இந்த ஆராய்ச்சி பண்ணும் ஆராய்ச்சியாளர்கள் மிக மிக வேகமாக TRANSLATE செய்ய எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படத்தின் கதை ..இந்த திரைப்படம் 2016 ம் ஆண்டு வெளிவந்தது ..இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நான் கொடுத்துள்ளேன். உங்களுக்கு ஏலியன் கதைகள் பிடிக்கும் என்றால் இந்த கதை உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். கிளைமாக்ஸ்ஸில் ஒரு உலகத்தின் பாதுகாப்புக்கு மொழிகளை பற்றிய படிப்புகளும் ரொம்பவுமே முக்கியம்தான் என்று நல்ல மெசேஜ் சொல்லி படத்தை முடித்துள்ளார்கள். இந்த படமே ஒரு கனவு போல இருக்கிறது. 

Friday, September 7, 2018

RISE AND FALL OF BUTTON PHONES - JUST TALKS - ஒரு நிஜவாழ்க்கை கருத்து பதிவு !! [REGULATION-2024-00021]




இந்த உலகத்தில் டெக்னாலஜி ரொம்பவே அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இணையதளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை கொடுக்கிறது, அதுவும் இல்லாமல் எண்ணற்ற சாத்தியங்களை கொடுக்கிறது, ஆனால் ஒரு காலத்தில் விஜய் அவர்களின் போட்டோவை என்னுடைய பட்டன் போனுக்கு வால் பேப்பராக வைக்க வேண்டும் என்றால் அதற்கு பாக்கெட் இன்டர்நெட்க்காக 10 ரூபாய் செலவு செய்து எட்ஜ் இணைய வேகத்துக்கு நெட் கார்டு போட வேண்டும். ஒரு வெப்சைட் ஓபன் ஆக குறைந்தது இரண்டு நிமிடங்கள் ஆகலாம், படங்கள் பதிவிறக்கம் செய்ய குறைந்தது ஐந்து நிமிடங்கள் கூட ஆகலாம், அப்போது எல்லாம் ஒரு பாட்டு ஒரு ஃபோன்ல் இருந்து இன்னொரு போனுக்கு அனுப்ப வேண்டும் என்றால் புளூடூத் வசதி மூலமாக போனை அருகில் அருகில் வைத்து அனுப்பிய காலம் என்றே சொல்லலாம், கடைசியாக விஜய் போட்டோ பதிவு இறக்கம் செய்யப்பட்டதும் நிறைய நண்பர்களுக்கு அனுப்பப்படும், அதன் பின்னால் அவருடைய நிழற்படம் ஃபோன் திரையில் வைக்கப்படும், இந்த உலகமே அப்போது எல்லாம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது, ரொம்பவுமே நன்றாக இருந்தது, அந்த பட்டன் ஃபோன்களின் நினைவுகள் கண்டிப்பாக மறக்க முடியாத அனுபவங்கள். நிறைய ஜாவா விளையாட்டுக்கள் மிகவும் சிறிய அளவில் டவுன்லோடு செய்யப்பட்டு விளையாடப்படும், அப்போது எல்லாம் முப்பரிமாண விளையாட்டுக்கள் ஃபோன்களில் கிடையாது. ஒரு தகவல் வேண்டும் என்றால் இணையத்தில் தேடப்பட்டு போனில் பார்த்து நோட்டில் குறிப்புக்களாக எடுக்கப்பட்டது. இந்த இணைய சேவையை கணினியில் சேர்த்தால் ஒரு நொடியில் இருநூறு எம் பி டேட்டா முடிந்துவிடும், இப்படிதான் இணையத்தின் முதல் அனுபவம் இருந்தது. ஒரு லேப்டாப் பிரவுசர் அப்போது எல்லாம் பதிவிறக்கம் செய்யப்படுவது இல்லை. வெறுமனே காப்பி செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டது. யாராவது ஃபோன் வைத்து இருந்தால் அதற்காக நிறைய பணம் செலவு செய்யப்பட வேண்டியிருந்தது. இன்னமுமே RECHARGE கூப்பன்கள் , நெட் கார்டுகள் , ரேட் கட்டர் கார்டுகள் எல்லாமே நன்றாக நினைவில் உள்ளது, அந்த நாட்களில் அவைகள் எல்லாமே மிகவும் புதுமையாக இருந்தது. டெக்னாலஜி இதனை கடந்தும் வளர்ந்துவிட முடியுமா என்று எல்லாம் யோசனைகள் இருந்தன ? அடுத்ததாக தொடுதிரைக்கு என்று தனித்தன்மை வாய்ந்த ஆன்ட்ராய்ட் கைபேசிகள் கிட்டத்தட்ட இந்த உலகத்தின் மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக இருந்தன, அப்போதும் கூட பட்டன் ஃபோன்கள் பயன்பட்டன. அப்போது பட்டன் ஃபோன்களில் புதிய வசதிகள் கூட கொண்டுவரப்பட்டன, ஸ்டோரேஜ் அதிகமாக கொடுக்கப்பட்டது, வை பை வசதி கூட கொண்டுவரப்பட்டது, ஆனால் ஆன்ட்ராய்ட் ஃபோன்கள் விலைக்கு 2015 களில் விலை அதிகமாக  விற்க்கப்பட்டது. நிறைய வசதிகள், பேட்டரி, மற்றும் வீடியோ பார்க்கும் வசதிகள், பாடல் கேட்கும் வசதிகள் இருந்தாலும் பட்டன் ஃபோன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கதான் செய்தது, ஆனால் பட்டன் ஃபோன்களுக்கு ஃபேன்ஸ் இருந்தாலும் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. எஸ் எம் எஸ் கார்டுகள் எல்லாம் போட்டு குட் மார்னிங் குட் நைட் அனுப்பிய காலங்கள், ஒரு ஹெட்செட் கனெக்ட்ஷன் செய்து எஃப் எம் ரேடியோ கேட்டு தூங்கிய காலங்கள் எல்லாம் கண்டிப்பாக மறக்கவே முடியாத காலங்கள் எனலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டெம், இன்டர்நெட், கேம்ஸ். நேட்டிவ் சோஷியல் மீடியா ஆப்கள், நிறைய சிறப்பு ஆபர்கள். என்று நிறைய வசதிகளை கொடுத்த அந்த காலத்தின் பட்டன் ஃபோன்களை கம்பேர் செய்தால் இந்த காலத்தில் அப்படிப்பட்ட நல்ல ஃபோன்கள் கிடைக்க சான்ஸ் இல்லை. ஆனால் ஜியோ ஃபோன் நன்றாகவே இருந்தது. இருந்தாலும் அந்த கால நினைவுகள் எல்லாம் கோல்டன் மெமரிஸ்.


 


Sunday, September 2, 2018

LET ME TELL A KUTTY STORY - SIMPLE TALKS ! - [REGULATION-2024-00020]





இந்த ஸ்டோரி நான் இணையதளத்தில் படித்தது, ஒரு நர்சரி பள்ளிக்கூடம் , அங்கே படித்துக்கொண்டு இருக்கும் ஒரு குழந்தை அங்கே வைக்கப்பட்டு இருந்த ஆப்பிள் கூடைய பார்த்தது. அந்த ஆப்பிள் கூடையில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது. "ஒரு ஆப்பிள்-கக்கு மேல் எடுக்க வேண்டாம். கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ", இந்த வார்த்தைகளை படித்ததும் பக்கத்தில் இருக்கும் சாக்லேட் நிறைந்த கூடையில் இவ்வாறு எழுதியது "எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள், கடவுள் ஆப்பிள் கூடையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்" என்று எழுதியது. இதுதான் வாழ்க்கை, இங்கே யாருக்குமே அன்பை கொடுக்க முடியாமல் போனாலும் வெறுப்பை கொடுக்காமல் இருப்போம், அதுவே நல்ல விஷயம்தான். அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய முயற்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்மைகள் நடக்க வாழ்த்துகிறோம். இந்த உலகத்தில் மோசமான விஷயங்களை செய்வது மிகவும் சுலபம் , ஆனால் நல்ல விஷயங்களை செய்வது மிகவும் கடினம், வாழ்க்கையின் முடிவில் எதுவுமே கொண்டு செல்லப்போவதில்லை எனும்போது வேறு எந்த காரணத்துக்காக இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டது என்று கொஞ்சமும் புரிவதே இல்லை. இந்த பிரிவுகள் அவசியமற்றது. ஒருவரிடம் "உன்னால் வெற்றி அடைய முடியாது " என்று அவருடைய மனதை உடைப்பது சுலபமானது. ஆனால் "உன்னுடைய வெற்றிக்கு நான் என்னால் முடிந்த முயற்சிகளை செய்கிறேன்" என்று உதவி செய்வது மிகவும் கடினமானது. வெற்றிகரமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று இந்த போஸ்ட் முடிக்கப்படுகிறது. LIFE IS VERY SHORT NANBA.. ALWAYS BE HAPPY.. 

 


 

WHO CARES - I AM LATE ANYWATS.. - OUT OF BOX THINKING - [REGULATION-2024-00019]




இந்த வாழ்க்கையில எப்போது அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே 50 சதவீத வெற்றியை அடைந்துவிட்டோம் என்று அர்த்தம். காரணம் என்னவென்றால் அறிவு என்பது கற்பனையான விஷயங்களுக்கு நேர் மாறானது. உங்களுக்கு சோசியல் மீடியாக்களில் ஒரு தகவல் கிடைக்கிறது என்றால் அந்த தகவலை உறுதிப்படுத்த இணையத்தை பயன்படுத்தினால் மட்டுமே அந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியும். இந்த உலகத்தில் யாரை வேண்டுமென்றாலும் குறை சொல்லலாம் எதை வேண்டுமென்றாலும் குறை சொல்லலாம். ஆனால் குறை சொல்வது சுலபம். சரி செய்வது கடினமானது. சரியான சூழ்நிலை அமைந்தவர்களால் வெற்றி அடைய முடிகிறது. ஆனால் மோசமான சூழ்நிலைககளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் வெற்றி அடைய முடிவது இல்லை. இதுதான் வாழ்க்கை. திரைப்படங்களில் காண்பது போல மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு அல்லது முற்றிலும் மாற்றப்பட்ட அறிவியலுக்கு எல்லாம் இங்கே வாழ்க்கையில் இடம் இல்லை. வாழ்க்கையில் கடினமான நிலைகள் யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். ஆனால் அந்த கடினமான நிலைகளை கடந்து வந்ததால்தான் இப்போது அவர்கள் வெற்றியை அடைந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூன்று மணி நேர தேர்வு முடிவுகள் உங்களின் தனிப்பட்ட திறனான அறிவுத்திறனை சொல்லிவிடாது. அறிவு என்பது அனுபவம் சார்ந்தது.

தேர்வு எழுதப்படும் நேரம் 6 மணி நேரம் என்று மாற்றப்பட்டால் இங்கே மிகப்பெரிய வெற்றியாளர்களை கூட பார்க்கலாம்.  கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை மொத்தமாக எழுத மூன்று மணி நேரம் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இப்படி ஒரு அவுட் ஆஃப் பாக்ஸ் மன நிலையில் இருந்து யோசிக்க வேண்டியதுதான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம்.  வெற்றி அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பவர்களுக்கு கிடைப்பது இல்லை. அந்த முடிவை சரியாக செயல்படுத்துவதன் மூலமாக அறிவுத்திறனை சரியாக பயன்படுத்தியவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 

Saturday, September 1, 2018

TOP 200 SONGS IN TAMIL [NOT IN RANKING ORDER] - [REGULATION-2024-00017]





1. Vennira Iravugal Kadhalin Mounangal - Pesu

2. Minnalgal Koothadum Mazhaikalam - Polladhavan

3.Nee Katru Naan Maram - Nilave Vaa

4. Vizhigalin Aruginil Vaanam - Azhagiya Theeye

5. Ennai Koncha Koncha - Aadhi

6. Jumbalakka Jumbalakka - En Swasa Katre

7. Ennavale Adi Ennavale - Kadhalan

8. Kuru Kuru Kannale - Vathikuchi

9. Adi Aathi - Sillunu Oru Sandhippu

10, Akkarai Cheemai - Priya

11. Angnyaade Angnyaade - Raja Rani

12. Annakili Nee Vaadi - Four Students

13. Ayyayo Nenchu Alaiyudhadi - Aadukalam

14. Azhagina Azhage Askava - Enakku 20 Unakku 18

15. Orassadha Usuraththaan - Vivek Mervin - 7up Madras Gig

16. Boomikku Velichamellam - Dishyum

17. Chillena Oru Mazhaithuli - Raja Rani

18. Chinnamma Chilakkamma - Sakkara Katti

19. Po Nee Po - 3

20. Asku Maaro - Album Song

21. Dilamo Dilamo - Dishyum

22. Devadhaiye Vaa - Mazhai Kottai

23. En Kadhal Solla Neramillai - Paiyaa

24. Enakku Piditha Paadal - July Ganapathy

25. Engirundhaai Nanan Mannil - Winner

26. Pudhu Vellai Mazhai - Roja

27. Ennai Thottu Allikonda 

28. Ethanai Kaalamdhaan Yematruvaar - LKG

29. Idhu Varai Illadha Unarvidhu - Goa

30. Thappellam Thappe Illai - Naan

31. Indha Chiru Pennai - Naam Iruvar Namakku Iruvar

32. Jal Jal Jal Osai - Manam Kothi Paravai

33. Uyire Uyire - Thangamagan

34. January Nilave Nalamdhaana - 

35. June Ponaa July Katre - Unnale Unnale

36. Edho Ondru Ennai Thaakka - Paiyaa

37. Mudhal Naal Indru - Unnale Unnale

38. Kadhal Siluvaiyil Araindhaan - Subramaiaburam

39. Theneeril Snegitham - Subramaniaburam

40. Kadhal Veithu Kadhal Veithu - Deepavali

41. Tamizhan Endru Solladaa - Bhoomi

42. Kaalam Kaligaalam - Amarkalam

43. Kanmoodi Thirakkumpodhu - Sachien

44. Kathadikudhu Kathadikkudhu - Ninaivirukkum Varai

45. Anbe Anbe Kolladhe - Jeans

46. Kurukku Vazhiyil Vaazhvu - Mahadevi

47. Malare Mounama - Karna

48. Manam Virumbuthe - Nerukku Ner

49. Manasellam Mazhaiye - Saguni

50. Manjal Poosum Vaaanam - Friends

51. Maram Kothiye - Anbe Aaruyire

52. Marana Mass- Pettai

53. Maayam Seidhaaiyo - Velaudham

54. Mazhai Mazhai - Ullam Ketkume

55. Mazhai Varum Arikuri - Veppam

56/ Merke Merke Merkedhaan - Kanda Naal Mudhal

57. Minsaaram En Meedhu Paaigindrathe - Run

58. Mudhal Kanave Mudhal Kanave - Majnu

59. Mukkala Mukkabla - Kadhalan

60. Mulumadhi Avaladhu Mugamagum - Jodha Akbar

61. My Name is Billa - Billa

62. Naan Yerikkara Melirundhu - 

63. Ooru Sanam Thoongiruchu - 

64. Needhane Endhan Ponvasandham

65. Nenje Nenje Nee Enge - Ayan

66. Vizhi Moodi Yosidhaan - Ayan

67. Oyaayiye Thoovum Poomazhai - Ayan

68. Noorandukku Orumurai - Thaayin Manikkodi

69. Oh BabyGirl - Maazhai Pozhuthin Mayakathile

70. Oh Penne Penne - Vanakkam Chennai

71. Oh Butterfly Butterfly - Meera

72. Ondraa Rendaa Asaigal - Kaakka Kakka 

73. Ooru Vittu Ooru Vandhu - Karagattakaran

74. Oru Dhevadhai Paarkum - Vaamanan

75. Chikku Bukku Chikku - Madhagajaraja

76, Oru Nadhi Oru Pournami - Samurai

77. Aagaia Suriyanai - Samurai

78. Oru Pani Thuli - Kanda Naal Mudhal

79. Panivizhum Malarvanam - Ninaivellam Nithya

80. Sandhikkadha Kangalil - 180

81. Per Vechalum Vekkama Ponalum - U1 - Dikkilona

82. Perundhil Nee Enakku - Sivappadhikaram

83. Pesadhe Paarvaigal Veesadhe - Thirudan Poilice

84. Pinapple Vannadhodhu - Samuthiram

85. Poopola Theepola Vaan Pola Mazhai Pola - Vaseegara

86. Poosu Manjal - Kanave Kalaiaadhe

87. Poove Sempoove - Solla Thudikkudhu Manasu

88. Poove Unnai Nesithen - 

89. Poraada Ava Poraada - Aranmanai 2

90. Rasave Unnai Vidamatten - Aranmanai Kili

91. Samikitta Solliputten - Dass

92. Samba Naathu Saaral Kathu - Seran Pandian

93. Sandhana Katre Sendhamil Patte - Thanikatu Raja

94. Satrumun Kidaitha Thagavalpadi -

95. Sembaruthi Poove Sembaruthi Poove - Kadhal Solla Vandhen

96. Senyoreeta Senyoreeta - Poovellam Kettuppar

97. Sillendra Theepori - Thithikkudhe

98. Siragugal Vandhathu - Sarvam

99. Sollividu Velli Nilave - Amaidhipadai

100. Tajmagal Oviya Kadhal

101. Thalattum Poongatru - Gopura Vaasalile 

102. Thalattum Katre Vaaa - Poovellam Unvasam

103. Thirudia  Idhaiaththai Thiruppi Koduthuvidu - 

104. Thirumba Thirumba Paarthu Paarthu

105. Thottu Thottu Pesum Sultana - 

106. Thuli Thuliaai Kottum Mazhai - 

107. Un Marbil Vizhi Moodi - Ninaithen Vandhaai

108. Vaa Vaa Vaa Nee Varangatti - Dass

109. Venmadhi Venmadhie Nillu - Minnale

110. Vizhiyile Mani Vizhiyil Mouna Mozhi - Nooravadhu Naal

111. Yaaro Yarukkul Ingu Yaaro - Chennai -28

112. Yeh Aatha - Malaikottai

113. Yela Yela - Arindhum Ariaamalum

114. En Iniya Pon Nilaave - Moodupani

115, Enna Solla Yedhu Solla - Manam Kothi Paravai

116. Thendral Varum Vazhiai Pookal - Friends

117. Vennilaa Velie Varuvaaiaa - Unakkaga Ellam Unakkaga 

118. Aasai Adhigam Vechu - Marupadium

119. What a Karuvad - VIP

120. Vaseegara En Nenchinikka - Minnale

121. Manjal Poosum Vaanam - Friends

122. Vaadi Pulla Vaadi - Meesaia Murukku

123. Kannukkul Pothi Veipen - Thirumanam Enum Nikkah

124. En Thaara En Thaara - Thirumanam Enum Nikkah

125. So Baby - Doctor

126. Naan Paarthathile - Anbe Vaa

127. Ulaginil Miga Uyaram - Naan

128. Azhagu Kutti Chellam - Satham Podathe

129. Theni Kaathoram - Vanakkam Chennai

130. Vaazhkai Oru Porkalam - Aadukalam

131. Madai Thirandhu Remix - Vallavan - Unreleased

132. Engeium Eppodhum - Polladhavan

133. Aavi Parakkum Tea Kadai - Rajini Murugan

134. Sendhoora Poove Ingu Then

135. Sempoove Poove - Siraichalai

136. Kanavellam Needhane - Album

137. Gumbalathaan Suthuvom - Album

138. Irava Pagala Kulira Veiala - Poovellam Kettuppar

139. May Madha Megam - Shajahan

140. Rukku Rukku Rubikya - Friends

141. Megamai Vandhu Pogiren - 

142, Thakkudhe Kan Thakkudhe

143. En Kannukulla - Appuchi Gramam

144. Darling Darling - Priya

145. Hey , I Love You - Unnai Naan Sandhithen

146. Naanoru Sindhu - Sindhu Bhairavi

147. Anbe Anbe Ellam Anbe - Idhu Kadhirvelan Kadhal

148. Narumugaie Narumugaie - Iruvar

149. Vaa Vaa Nilava Pudichu - Naan Mahan Alla

150. Varaan Varaan Poochandi - Album

151. Mannarkudi Kalakalakka - Sivappadhikaram

152. Makkayala - Naan

153. Raja Raja Chozhan - Rettai Vaal Kuruvi

154. Engenge Engenge - Nerukku Ner

155.  Asku Maaro - Album

156. Ennavale Ennai Marandhathu Yeno - Album

157. Takkaru Takkaru - Hip Hop Tamizha

158. Kanavellam Neethane - Album

159. Endi Ippadi Enakku - Enakkul Oruvan

160. Indha Iravuthaan Poguthe Poguthe - Easan'

161. Thappellam Thapppe Illai - Naan

162. Nirpathuve Nadappathuve - Bharathi

163. Oru Ponnai Paarthen - India Pakisthan

164. April Madhathil - Vaali

165. Sithakathi Pookale Suthivara Paakudhe

166. Uyirai Tholaithen Unnil Thaano - Album

167. Matuthavani To Manhattan - Madan Gowri - Atti-Culture

168. Poraada Ava Poraadaa - Aranmanai 2

169. Therku Seemaila Ennapathi Kelu - Attagasam

170. My Name is Billa - Billa

171. June Ponaal - Unnale Unnale

172. Vaa Vaa Vaa Nee Varangatti Po Po - Dass

173. Dilamo - Dishyum

174. Kutty Pattas - Album

175. Karuppu Nilaa - En Aasai Machan

176. Dhimu Dhimu Dhim Dhim - Engeium Kadhal

177. Lolita - Engeium Kadhal

178. Latchavathie Enna Asathura Nathie - Four Students

179. Unnal Unnal Un Ninaivaal - MS Dhoni Tamil 

180. Kathu Adikkuthu Kathu Adikkuthu - Manadhai Thirudivittai

181. Single Pasanga - Natpe Thunai

182. Idhu Enna Idhu Enna Pudhu Ulaga - Sivagasi

183. Iru Kangal Sollum Kadhal Seidhi - Kadhal Samrajyam

184. Vetrikkodikattu Malaigalai - Padaiappa

185. Guruvaaiurappa - Pudhu Pudhu Arthangal

186. Narumugaie Narumugaie Nee Oru Naaligai Nillai - Iruvar

187. Sempoove Poove Oru Then Vandhaal - Siraichalai

188. Whose The Hero Whose The Hero - Manmadhan Ambu

189. Nilalindri Nijamum - Raam

190. Adi Penne Oru Murai Nee Sirithaal - Album Song [Naam - Web Series]

191. Oh I Like You - Citizen

192. Vizhile Mani Vizhiyil Mouna Mozhi Pesum Annam - Nooravadhu Naal

193. Mellisaie En Idhaiathin Mellisaie - Mr. Romeo

194. Oru Aayiram Paarvaiyile - Vallavan Oruvan

195. Darling Darling Darling - Priya

196. Chikku Bukku Chikku Railu Vandi - Madhagajaraja

197. Ondra Renda Aasaigal - Kaaka Kaaka

198. Mulumadhi Avaladhu Mugamagum - Jodha Akbar

199. Nee Asaindhu Nadakkum Alagai Rasikka - Vaikundhapuram 

200. Kanne Kanne - 7up Madras Gig

TO BE CONTINUED.. 


GENERAL TALKS - இந்த உலகத்தின் மிகப்பெரிய ரகசியம் - [REGULATION-2024-00017-2]



வணக்கம் மக்களே.. நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது உங்களுக்கு விருப்பமான NICE TAMIL BLOG.. பேசிக்கொண்டு இருப்பது நான் உங்களுடைய WRITEROFTHEDREAMS.. இந்த உலகத்தை பொறுத்த வரைக்கும் ரொம்பவே முக்கியமான விஷயம் என்னவென்றால் வெற்றிகள் அப்படின்னு ஒரு விஷயம் இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. உண்மையில் யோசிச்சு பாருங்க.. ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் 48 பேர் இருக்கிறார்கள் என்றால் இவர்களில் 20 பேர் பாஸ் ஆனார்கள் என்றால் வெறும் 3 பேர் முதல் மூன்று மதிப்பெண்களை எடுப்பது முக்கியமா ? இல்லையென்றால் 48 பேரும் சிறப்பான படிப்பு படித்து மதிப்பெண்கள் எடுத்து வெற்றி அடைவது முக்கியமா ? யெஸ்.. 48 பெரும் வெற்றி அடைவதுதான் முக்கியம்.. உதாரணத்துக்கு அந்த வெற்றி அடைந்த 48 பேரும் நிறைய துறைகளில் சாதித்து நிறைய நிறுவனங்களை உருவாக்கினால் நிறைய உணவு உடை இருப்பிடம் என்று எல்லோருக்கும் நிறைய புதிய விஷயங்கள் கிடைக்கும். அப்படி இருக்கும்போது இந்த வெற்றி தோல்வி எல்லாம் எங்கே இருந்து வந்துது ? சிம்பிள்தான்.. போட்டியும் பொழுதுபோக்கும்.. போட்டி இருக்கவேண்டும் என்று ராங்கிங் சிஸ்டம் கொண்டுவந்தால் இந்த போட்டி அடுத்த கட்டத்துக்கு சென்று பொறாமையாக மாறிவிட்டது. ஒரு மேஜிக் நடந்து தோல்வி அடையும் எல்லோருக்கும் 2000 நாணயங்கள் இலவசமாக கொடுத்தால் வெற்றியை விட தோல்விகளுக்கு அதிகமாக மதிப்பு இருக்கும்.. அப்படின்னா இந்த பிரச்சனை எல்லாம் எப்படி சரி பண்ணலாம் ? ஒரே விஷயம் அறிவு.. இந்த உலகத்தில் அறிவுப்பூர்வமான நிறைய விஷயங்கள் பிரச்சனைகளை நிறைய முறை சரி செய்துள்ளது.. அதனால் எப்போதுமே அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.. வெற்றிகளும் தோல்விகளும் இல்லை. இங்கே பொருள் சேர்த்தலும் இழத்தலும் மட்டுமே உள்ளது. - WRITER OF THE DREAMS

Friday, August 31, 2018

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - கார் ரேஸ் மட்டும்தான் இவருடைய உலகம் !! - PEGASUS TAMIL REVIEW ! - [REGULATION-2024-00016]




இன்டர் நேஷனல் கார் ரேஸ் நிகழ்ச்சிகளில் அடுத்து அடுத்து தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகளை அடைந்த வெற்றி கார் ரேஸ் வீரர் ஒரு கட்டத்தில் ஒரு மோசமான சம்பவத்தால் அவருடைய லைசன்ஸ் கேன்ஸல் செய்யப்பட்டு இனி வரும் இன்டர்நேஷனல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையை அடைகிறார், அது மட்டுமே இல்லாமல் அவருடைய ஸ்பான்சர் செய்த நிறுவனங்களால் கடனுக்கு உள்ளாக்கப்பட்டு அவருடைய பேர் புகழ் பணம் என்று எல்லாவற்றையும் இழக்கிறார், இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் சந்திக்கும் அனைவரிடமும் கிடைத்த உதவிகளால் மறுபடியும் ரேஸ் இல் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்று வாழ்வா சாவா என்ற நிலையில் அவர் காலந்துகொஉள்ளும் இந்த போட்டியில் வெற்றியை அடைகிறாரா என்பதுதான் ஸ்வரஸ்யமான இந்த திரைப்படத்தின் திரைக்கதையாக இருக்கிறது, இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி கடைசியில் மனதை தொடுகிறது, வாழ்க்கையில் தோல்விக்களை சந்திக்கும் சராசரி நடுத்தர மனிதனின் மனநிலையை கொஞ்சம் வேறு ஒரு பரிமாணத்தில் இந்த படத்தின் திரைப்படம் கொடுத்து இருப்பது இன்னமும் ஒரு சிறப்பம்சம் என்றே சொல்லலாம். இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக அதிக தொலைவு மலைப்பகுதி கார் ரேஸ் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக நிஜத்தில் எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு எனலாம். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நிறைய ஸ்போர்ட்ஸ் படங்களை பார்க்கலாம் ஆனால் இந்த படம் ரொம்பவுமே வித்தியாசமாக இருக்கும். படத்துடைய கிளைமாக்ஸ் சாபம் !! இந்த படத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை. அது என்ன கிளைமாக்ஸ் சாபம் என்று கேட்கிறீர்களா ? CLIMAX CURSE ஒரு பெரிய TOPIC கண்டிப்பாக தனியாக FUTURE ல  - ஒரு கட்டுரை போடுகிறேன். இந்த BLOG ஐ சப்ஸ்க்ரைப் பண்ணுங்க !!



SIMPLE TALKS - LIFE IS AWSOME [REGULATION-2024-00016]




"சரித்திரத்தை ஒரு நிமிஷம் திரும்பி பாருங்க. அது நமக்கு கத்துக்கொடுத்தது ஒண்ணுதான். HISTORYன்னு ஒரு விஷயம் உருவாக யாராவது ஏதாவது பதிவு பண்ணியிருக்க வேண்டும்.. இங்கதான் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். 2013 களில் பட்டன் ஃபோன்கள் வைத்து இருப்பது அரிது, ஆன்ட்ராய்ட் ஃபோன்கள் அதனினும் அரிது, அப்போதுதான் இந்த கேம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது,. அதுதான் CANDY CRUSH SAGA.. நண்பர்கள் இந்த விளையாட்டை விளையாடும்போது ஒரு ஒரு லெவலாக முடிக்க நிறையவே கஷ்டப்பட வேண்டியிருந்தத்து. இந்த ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டு அந்த காலத்தில் அவ்வளவு பிரபலமாக இருந்தது. அப்போது எல்லாம் EDGE இணையதளம். அதிகபட்ச இணைய வேகமே 30 முதல் 40 கிலோபைட் வரைக்கும்தான். (ஃபேஸ்புக்கில் ப்ரோஃபைல் பிக்சர் அப்லோட் பண்ணவே 15 நிமிடங்கள் தேவைப்படலாம்) - இந்த இணைய வேகத்தில் யு ட்யூப் காணொளிகள் எல்லாம் கனவில் கூட நடக்காத விஷயம். ஆனால் ஆன்ட்ராய்ட் சரித்திரத்தை மாற்றிய இன்னொரு விளையாட்டு CLASH OF CLANS. அந்த காலத்தில் வாட்ஸ்ஆப் அறிமுகத்தை கடந்து இன்டர்நெட் பயன்படுத்த இன்னொரு காரணம் இருந்தது என்றால் அது இந்த CLASH OF CLANS-தான், இந்த விளையாட்டு. அருமையான கிராபிக்ஸ் அமைப்பு மற்றும் அட்டகாசமான கேம்-பிளே வசதிகளுடன் ஆன்லைன் விளையாட்டுகளின் உலகத்தில் ஒரு மைல்கல்லை உருவாக்கிய விளையாட்டு என்றால் மிகையாகாது. 2013 - 2014 காலங்களில் மறக்க முடியாத ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டுக்கள் என்று இந்த விளையாட்டுக்களை கண்டிப்பாக சொல்லலாம். ஃபேஸ்புக் அக்கவுண்ட் அல்லது ஜிமெய்ல் அக்கவுண்ட் உருவாக்க வேண்டும் என்றால் ஒரு ஸ் டேட் பாங்க் அக்கவுண்ட் உருவாக்குவது போல அவ்வளவு கடினமானது என்று நினைத்துக்கொண்டு இருந்த காலம் அது. ஃபோன்க்கு RINGTONE வெக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு பாடல் பதிவிறக்கம் செய்ய நெட் பேக் மொத்தமும் முடிந்துவிடும் மாயாஜாலங்கள் அந்த காலத்தில் நடக்கும். அதெல்லாம் வேற லெவல் நினைவுகள். இன்றைக்கும் யோசித்து பார்க்கவே அதிசயமாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு எல்லாம் எல்லைகளை கடந்துவிட்டது. " IMAGE CREDITS ; NATILIA SLASTIKOVA - PEXELS

LOOK FOR ANSWER INSIDE YOUR QUESTION- SIMPLE TALKS ! - [REGULATION-2024-00015]



பள்ளிக்கூடத்திலே சயின்ஸ் ப்ராஜக்ட் எக்ஸிபைசன் நடக்கும். ஒரு பையன் பேகிங் சோடா வல்கானோ (BAKING SODA VOLCANO) செஞ்சு இந்த உலகத்தையே மாற்றக்கூடிய ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியதாக சந்தோஷமாக இருப்பான். இன்னொரு பையன் ஒரு சிறிய மோட்டார், மின்கல இணைப்பு, பிளாஸ்டிக் விசிறி இறக்கைகள், அட்டை இருந்தால் ஒரு குட்டி காற்றாலை (WINDMILL) மாடல் செய்து வருங்காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத மின்சாரத்தை உருவாக்க ஒரு மைல் கல்லை கடந்துவிட்டதாக நினைப்பான். ஆனால் உண்மையில் கனவுகள் காண்பது மிகவும் அவசியமான ஒரு விஷயம். ஒரு வார்த்தையை புரிந்துகொள்ள வேண்டும். செமெண்ட் நிறுவனத்தின் விளம்பர காட்சியில் இடம்பெற்ற இந்த வாரத்தை மிகவும் இன்ஸ்பிரேஷன் ஆன வார்த்தைகள் என்று சொல்லலாம். "பெரிய கனவுகளுக்காக கவனமாக இருங்கள்" என்பதுதான். உங்களுடைய கனவு "ஒரு கம்பெனி இன்டர்வியூவில் வெற்றி அடைந்தது ஐந்து இலக்க சம்பளம் வாங்க வேண்டும் என்றால் அந்த கணவுக்காக செய்யவேண்டிய செயல்கள் அதிகம். அதே போல உங்களுடைய கனவு ஒரு மிகப்பெரிய கம்பெனியை உருவாக்க வேண்டும் என்றால் அதற்காக செய்ய வேண்டிய முயற்சிகள் அதனை விடவும் அதிகம், ஆனால் கனவுகள்தான் இந்த உலகத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. இங்கே எந்த துறையை தேர்வு செய்தாலும் துறையை சார்ந்த போட்டிகள் நிச்சயமாக இருக்காதான் போகிறது, அந்த போட்டிகளை எப்போதுமே எதிர்கொள்ள தயாராக இருங்கள், உங்களுக்காக வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும் என்று நினைக்கவேண்டாம். வெற்றிகரமான வாழ்க்கையை எடுத்துக்கொள்ளுங்கள். 


Thursday, August 30, 2018

HOW TO FAIL IN LIFE - TAMIL - EXPLAINED IN TAMIL ! - [REGULATION-2024-00014]


வாழ்க்கையில் தோல்வி அடைவது எப்படி ? - HOW TO FAIL IN THIS LIFE - EXPLAINED IN TAMIL





இங்கே எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியடைவது எப்படி என்று கட்டுரை எழுதுவார்கள் ? ஆனால் நான் கொஞ்சம் DIFFERENT ஆக வாழ்க்கையில் தோல்வி அடைவது எப்படி என்று ஒரு சின்ன நகைச்சுவையான கட்டுரை எழுதுகிறேன் - இந்த கட்டுரையின் நோக்கம் வாழ்க்கையில் வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் ஒரு பொசிட்டிவிடியுடன் சந்திக்க வேண்டும் என்பதே - அதுதான் காரணம். 


1. பயனற்ற விஷயங்களில் நேரத்தை செலவு செய்யுங்கள் : 

வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் நேரமாக இருந்தாலுமே வேஸ்ட் பண்ண கூடாது. ஆனால் இன்னைக்கு காலையில் எழுந்து கண் விழித்ததும் ஸ்மார்ட்ஃபோன் பார்க்கும் உலகம். வீடியோ கேம்களில் அதிகமாக டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். வீடியோ கேம்ஸ் நல்ல விஷயம்தான் ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் விளையாடினாலும் சலிப்பு தெரியாமல் இருப்பதால் கடைசியில் நீங்களே யோசிச்சு பார்க்கும்போது கொஞ்சம் அதிகமாவே நேரத்தை ஸ்பெண்ட் பண்ணிட்டேனோ அப்படின்னு உங்களுக்கே மனதுக்குள் தோன்றும். இன்னொரு விஷயம் சீரியல்ஸ் - கொஞ்சம் கொஞ்சம் நல்ல சீரியல்கள் - நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் - ஃபேமஸ் ஆன நிகழ்ச்சிகள் கூட இருக்கிறது. தொலைக்காட்சி தொடர்கள் எனக்கும் கொஞ்சம் பிடிக்கும் என்பதால் சமீப காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் எப்போதாவது புதிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சம் நல்ல கருத்துக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சி சீரியல்கள் பொழுதுபோக்குதான். குறைவான செலவில் அதிகமாக நேரத்தை செலவு செய்ய இது எல்லாமே பெஸ்ட் ஐடியா !!


2. பயனற்ற காணொளிகளை பாருங்கள் 

OKEY.. இந்த பயனில்லாத காணொளிகள் எல்லாம் வேண்டாம் என்றால் நிறைய பயனுள்ள விஷயங்கள் யுட்யூப் இணையத்தளத்தில் இருக்கிறது. உதாரணமாக சாதித்தவர்களின் இன்டர்வியூக்கள். நிறைய இடங்களை சுற்றிப்பார்க்கும் VLOGS, புது புது TOPICS பற்றிய பேச்சு, நியூஸ் சேனல்கள். இன்டர்நெட் கோர்ஸஸ் - LANGUAGE SPEAKING - தகவல்கள் - TED ED - DOCUMENTRY - INFOTAINMENT என்று நிறைய பயனுள்ள விஷயங்கள் இருக்கிறது. ஒரு இன்டர்வியூ பார்க்கும்போது வெற்றி அடைந்தவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் எப்படி சாதித்தார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்- அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்லும்போது இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் . இன்னொரு நல்ல விஷயம் ஆடியோபுக்ஸ் கூட கேட்கலாம். இல்லையென்றால் இணையதளங்களில் பயனுள்ள கட்டுரைகள் படிக்கலாம். 

3. LONG TERM PLANS - இருக்க வேண்டாம் - இன்னும் சொல்லப்போனால் PLANS - இருக்கவே வேண்டாம். 

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் - உதாரணத்துக்கு உங்களுக்கு பிடித்த ஒரு துறையை அதாவது DEPARTMENT -ஐ தேர்ந்தெடுக்கும்போது கண்டிப்பாக போட்டிகள் நிறைய இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இந்த போட்டியும் பொறாமையும் இருக்கும் உலகத்தை நாம் பார்த்துதான் ஆகவேண்டும். பொதுவாக வெற்றி அடைபவர்கள் எல்லோருமே அடுத்து என்ன பண்ணலாம் ? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருக்க மாட்டார்கள். இங்கே சொல்லை விட செயலுக்குதான் அதிக மதிப்பு இருக்கும். வாழ்க்கையில் எதிர்காலம் சார்ந்த கனவுகளையும் கற்பனைகளையும் நிறைய சேர்த்துக்கொண்டாலும் அந்த கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக செயல்கள் இருக்க வேண்டும். போதுமான திட்டம் இல்லாமல் அனுபவம் சார்ந்த முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும் இருந்தாலும் திட்டமிடல் எப்போதுமே நல்லது. 

4. மனதுக்குள் மாற்றங்களை உருவாக்குவதை பற்றி கனவில் கூட நினைக்க வேண்டாம் 

வாழ்க்கையில் நம்முடைய மனதை எப்போதுமே நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த விஷயம் எனக்கு பிடிக்கும் - இந்த விஷயம் எனக்கு பிடிக்காது என்று மனதுக்குள் நிறைய விஷயங்களை விருப்பு வெறுப்புகளாக கொண்டிருந்தாலும் வெற்றி அடைந்த மனிதர்களை கேட்கும்போது மனதை மாற்றிக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றியை அடைந்து இருப்பார்கள். ஒரு படம் பார்க்கிறோம். அந்த படத்தின் காட்சிகள் சோகமாக இருப்பதால் அந்த படம் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது. வாழ்க்கையும் அப்படிதான். உண்மையான வாழ்க்கையை பாருங்கள் இங்கே ஒரு ஒரு மனிதருக்கும் ஏதாவது பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பிரச்சனையை சரிசெய்ய முடிவில்லை என்பதாலோ அல்லது அந்த பிரச்சனையை சரிசெய்ய விருப்பம் இல்லை என்பதாலோ அப்படியே விட்டுவிட்டால் பின்னாளில் பிரச்சனை பெரியதாக மாறிவிடும். இதனால்தான் வாழ்க்கை உங்களுக்கு ஒரு செயலை கொடுத்தால் அந்த செயலை செய்துவிடுங்கள். இல்லையென்றால் பிரச்சனைதான். மனதை எப்போதுமே மாற்றிக்கொள்ளுங்கள். 

5. இங்கே ஒருஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும் 

கொஞ்சம் யோசித்து பாருங்கள் வாங்கும் சம்பளத்தை விட கடன் தொகை அதிகமாக இருக்கும் நிலையில் அடுத்த ஸ்டெப் எடுக்க வேண்டும் என்றால் கவனமாகததான் எடுக்க வேண்டும். ஒரு திரைப்பட இயக்குனராக முயற்சிக்கும் ஒருவர் பேப்பர் பேனா எடுத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதும்போது ஒரு கிரியேட்டிவான கதைக்களத்தை உருவாக்க முடியவில்லை என்றால் அங்கே அவர் தெரிந்துகொள்ள வேண்டியது கதைகளை எழுதுவதில் வெற்றியை அடைய முடியவில்லை என்றால் இன்னும் நிறைய துறைகள் இருக்கிறது , வேறு துறைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக செயல்பட்டாலும் சாதிக்க முடியும் என்பதுதான். மோட்டிவேஷன் என்று ஆயிரம் கருத்துக்கள் சொல்லலாம் ஆனால் உண்மையான வாழ்க்கையில் ஃபாலோ செய்வது மிகவும் கடினமானது. உதாரணத்துக்கு பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் ஒரு ஒருவருடைய தனிப்பட்ட செயலால் மட்டுமே முடியாது. நிறைய பேருடைய செயல்களும் சேர்ந்ததுதான். வாழ்க்கையில் எப்போதும் பொசிட்டிவிடி இருக்க வேண்டும். 

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...