Saturday, October 13, 2018

CINIMATIC WORLD - 014 - MARVEL : IRON MAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - இரும்பில் இருதயம் முளைத்த கதை !! - [REGULATION-2024-00030]

TONY STARK ஒரு தொழில் அதிபர் , கண்டுபிடிப்பாளராக இருப்பவர் . ஒரு கட்டத்தில் இவரது தொழில்நுட்பம் மோசமானவர்களால் பயன்படுத்தப்பட்டு இந்த விஷயம் அவருக்கு தெரியும் முன்பே TEN RINGS என்ற மோசமானவர்களின் அமைப்பை சேர்ந்தவர்களால் கடத்தப்படுகிறார் . ஆனால் ஒரு வழியாக அவர்களிடம் இருந்து YINSEN என்ற நல்ல மனம் உள்ள மருத்துவரின் உதவியுடன் ELECTROMECHANICAL கவசம் தயாரித்து அதன் மூலமாக தப்பிக்கிறார் . மேலும் ELECTROMECHANICAL கவசங்களின் உதவியுடன் Iron Man என்ற அடையாளத்துடன் அந்த மோசமான அமைப்பை எதிர்த்து போராட நினைக்கிறார் .. அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் கதை . இந்த திரைப்படம் 2008 ம் ஆண்டு வெளிவந்தது . MCU என்ற திரைப்பட வரிசையில் (MARVEL CINEMATIC UNIVERSE) -  இந்த திரைப்படம் முதல் திரைப்படம்  ஆகும் . இந்த படம் வெளிவந்த வருடத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் 2008 , இந்த காலத்தில் இவ்வளவு எக்ஸ்பேன்ஸ் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இருக்கும் படம் பார்ப்பது அரிது. இந்த படம் மற்ற சூப்பர் ஹீரோ படங்களை போலவே போயிருக்கலாம் , ஆனால் கதையை ரொம்பவுமே அருமையாக கொடுத்து இருப்பார்கள் , டோனி ஸ்டார்க் யாரை பற்றியும் கவலைப்படாமல் தனி ஒரு மனிதனாக வாழும் ஒரு கோடீஸ்வரர், அவருடைய தொழில் நுட்பத்தால் ஆயுதங்களை பாதுகாப்பு துறைகளுக்கு கொடுக்கும்போது பயங்கரவாதிகளால் கடத்தப்படுகிறார், இருந்தாலும் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் அவருக்கு கிடைத்த ஒரே ஒரு நண்பரான யின்ஸேன் உதவியுடன் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மெட்டல் கவசத்தை செய்து உயிரை பணயம் வைத்து தப்பித்து அமெரிக்கா திரும்புகிறார். ஆயுதங்களை உருவாக்குவதை அடியோடு விட்டுவிட்டு அடுத்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு IRON MAN கவசத்தை உருவாக்குகிறார். இந்த படத்தில் ஒரு தனி மனிதனாக பயங்கரவாதிகளோடு சண்டை போடும் அந்த காட்சிதான் எனக்கு பிடித்து இருந்தது. அதாவது நிகழ்கால வன்முறையில் ஹெல்ப் பண்ண யாருமே வரமாட்டார்கள். ஆனால் ஒரு சூப்பர் ஹீரோவாக டோனி ஸ்டார்க் அவருக்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் அங்கே இருக்கும் அப்பாவி குடும்பங்களை காப்பாற்ற களத்தில் குதிக்கிறார். இதுதான் மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கும் டோனி ஸ்டார்க்குக்கும் இருக்கும் வித்தியாசம். அதுதான் இந்த IRON MAN படங்களை தனித்து காட்டுகிறது. அதனால்தான் ஹிட் அடிக்கிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...