Monday, December 24, 2018

CINEMATIC WORLD - 022 - HEIDI - TAMIL REVIEW - இன்னைக்கு நம்ம திரை விமர்சனம் !! [REGULATION-2024-00039]


நீ எதுக்கு தேடி புடிச்சு இந்த ஜெர்மன் படத்தை பார்க்கணும் ? உனக்கு பார்க்க வேற படம் இல்லையா ? என்று கேட்கலாம் ! ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் யாதும் ஊரே , யாவரும் சொந்தக்காரனே (சொத்துல பங்கு கேட்காத வரைக்கும் ) இங்கே டிவி , நெட் , கேம்ஸ் , கம்ப்யூட்டர் இது எல்லாம் இல்லாத காலத்தில் நடக்கும் ஒரு குட்டி பெண்ணின் கதையாக ஒரு காலத்தில் குழந்தைகளுக்கான புத்தகமாக வெளிவந்த ஹைடி என்ற கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஜெர்மனியில் 2015 ல் வெளிவந்தது , இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயமாக இருப்பது இந்த திரைப்படம் அவ்வளவு எதார்த்தமான கதையில் ஒரு சின்ன பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களை எல்லாம் சேர்த்து ஒரு சினிமா என்ற வகையில் அழகான சினிமா என்ற வகையில் ஆச்சரியமான கதைக்களமும் சேர்த்து நிறைய லொகேஷன்களை காட்டி இயற்கையுடன் இணைந்த ஒரு பயணமாக இந்த அனைவருக்கும் பிடித்த சரித்திர குழந்தை ஹைடி என்ற சிறுமியின் வாழ்க்கையில் நடக்கும் கதையை  சொல்கிறது . இந்த படமும் நிச்சயமாக பார்க்கவேண்டிய திரைப்படம்தான் . CHUTTI TV ல காலையில் 6:00 மணிக்கு HEIDI பார்த்த #தொண்ணூறுகளின் பசங்க !! இங்கே அஸேம்பல் ஆகவும். இன்னைக்கு மோட்டு பட்டுலு என்று முட்டாள்தனமான ஒரு மெச்சூரிட்டியே இல்லாத கதைகளை பார்க்கும் பசங்க எல்லோரும் நம்ம பழைய வாழ்க்கையை நிறையவே மிஸ் பண்ணுகிறார்கள். இந்த 90 களின் நினைவுகள் மட்டுமே தனி போஸ்ட் போடலாம். அணுக் ஸ்டீபன் குட்டி குழந்தையாக உள்ளம் கொள்ளையடித்து செல்கிறாள். ஒரு எளிமையான கிராமத்து பெண்ணாக பணக்கார குடும்பத்தில் வேலை பார்க்க அனுப்பப்பட்டதாலும் திரும்பவுமே வீட்டுக்கு வரும் காட்சிகள் நல்ல ரசனை !! நிறைய விருதுகளை கொடுத்து கௌரவம் பண்ண வேண்டிய படம். OSCAR எல்லாம் இந்த மாதிரி நல்ல படங்களை கண்டுகொள்ளாது போலவும் !!! இந்த படத்தில் அடுத்தடுத்த காட்சிகள் புத்தகங்களின் பக்கங்களை போல நிதானமான வேகத்தில் நகர்வது இந்த படத்தின் காட்சியமைப்புகள் இயற்கையான தன்மையை கொடுக்கிறது என்றே சொல்லலாம். திரைப்பட வரலாற்றில் ரொம்பவுமே முக்கியமான எல்லோருமே பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம். 



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...