Saturday, October 13, 2018

CINIMATIC WORLD - 016 - THOR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00032]



கடவுளுக்கே பிரச்சனைன்னா என்னதான் பண்ண முடியும் ? இடி மின்னலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ள  இளவரசர் THOR ODINSON , அவருடைய தந்தை ODIN நிர்வாகத்தில் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தி இந்த படத்தில் சொல்வது போல ஒன்பது மண்டலங்களிலும் ஆதிக்கம் நிலைநாட்டி அமைதியை பாதுக்கக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் நம்ம THOR  கோபத்துக்கே பிறந்து கோபத்துக்கே வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் இவர் பூமிக்கு தண்டனைக்காக அனுப்பப்படுகிறார் இங்கே இன்னொரு திருப்பம்  இவருடைய மின்னல் சக்தியும் சுத்தியல் பறிக்கப்பட்டதால் போகிறது. செம்ம கடுப்பில் அப்பா ODIN இருப்பதால் வீட்டுக்கு போக சான்ஸ்ஸே இல்லாமல் போகும்போது ஒரு மாஸ்டர் பிளேன் போட்டு நம்ம THOR ன் இளைய  சகோதரர்  மற்றும் மாயாஜாலங்களில் சிறந்தவராக இருக்கும் LOKI மணிமுடியை எடுத்து அரசராக முயற்சி செய்கிறார். இப்போது காதல் , குடும்பம் , அன்பு என்று பூமியில் நிறைய விஷயத்தை கற்றுக்கொண்ட நம்ம THOR ஆல் LOKI ன் இந்த கொலை முயற்சியை தடுக்க முடிந்ததா ? என்பதுதான் திரைக்கதை , இந்த திரைப்படம் 2011 ல் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் THOR THE DARK WORLD - 2013 ல் வெளிவந்ததது. இது ஒரு கமர்ஷியல் படம் ஆனால் பார்க்க நன்றாக இருக்கும். ஒரு சூப்பர் ஹீரோ தன்னை பற்றி மட்டும் நினைத்து ஆணவமாக இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய மனது மாறுகிறது. மற்றவர்களுடைய உயிர் அவருடைய உயிரை விட முக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார். இதுதான் அன்புடைய மாயாஜாலம். இந்த படம் அவெஞ்சர்ஸ் படத்துக்காக THOR கதாப்பாத்திரத்தை INTRO கொடுக்க எடுக்கப்பட்ட படம் என்றாலும் இந்த படத்தின் நல்ல கருத்துதான் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது. 


No comments:

Post a Comment

MUSIC TALKS - POO MAALAIYE YENGUM IRU THOL SERA VAA - ILAIYA MANADHU INAIYUM POLUDHU - POOJAI MANI OSAI POOVAI MANADHASAI PUTHIYATHOR ULAGILE PARANTHATHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

பூமாலையே ஏங்கும் இரு தோள் தோள் சேரவா இளைய மனது இணையும் பொழுது … பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே ! நான் உன்னை நினைக்காத நாள...