இந்த ஸ்டோரி நான் இணையதளத்தில் படித்தது, ஒரு நர்சரி பள்ளிக்கூடம் , அங்கே படித்துக்கொண்டு இருக்கும் ஒரு குழந்தை அங்கே வைக்கப்பட்டு இருந்த ஆப்பிள் கூடைய பார்த்தது. அந்த ஆப்பிள் கூடையில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது. "ஒரு ஆப்பிள்-கக்கு மேல் எடுக்க வேண்டாம். கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ", இந்த வார்த்தைகளை படித்ததும் பக்கத்தில் இருக்கும் சாக்லேட் நிறைந்த கூடையில் இவ்வாறு எழுதியது "எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள், கடவுள் ஆப்பிள் கூடையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்" என்று எழுதியது. இதுதான் வாழ்க்கை, இங்கே யாருக்குமே அன்பை கொடுக்க முடியாமல் போனாலும் வெறுப்பை கொடுக்காமல் இருப்போம், அதுவே நல்ல விஷயம்தான். அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய முயற்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்மைகள் நடக்க வாழ்த்துகிறோம். இந்த உலகத்தில் மோசமான விஷயங்களை செய்வது மிகவும் சுலபம் , ஆனால் நல்ல விஷயங்களை செய்வது மிகவும் கடினம், வாழ்க்கையின் முடிவில் எதுவுமே கொண்டு செல்லப்போவதில்லை எனும்போது வேறு எந்த காரணத்துக்காக இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டது என்று கொஞ்சமும் புரிவதே இல்லை. இந்த பிரிவுகள் அவசியமற்றது. ஒருவரிடம் "உன்னால் வெற்றி அடைய முடியாது " என்று அவருடைய மனதை உடைப்பது சுலபமானது. ஆனால் "உன்னுடைய வெற்றிக்கு நான் என்னால் முடிந்த முயற்சிகளை செய்கிறேன்" என்று உதவி செய்வது மிகவும் கடினமானது. வெற்றிகரமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று இந்த போஸ்ட் முடிக்கப்படுகிறது. LIFE IS VERY SHORT NANBA.. ALWAYS BE HAPPY..
No comments:
Post a Comment