Monday, December 24, 2018

CINEMATIC WORLD - 021 - THE AVENGERS 2012 - BEST MOVIE EVER !!! - சிறப்பான தரமான சம்பவங்கள் இந்த படத்தில்தான் பார்க்க முடியும் !! [REGULATION-2024-00038]







இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ பிலிம் என்றால் அது ஒரு தனிப்பட்ட ஒருவரின் கதையாகத்தான் இருக்கும் . தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜேன்டில்மென் படத்துக்கு பின்னால் சூப்பர் பவர்ஸ் இருப்பவர்கள் சேர்ந்து உலகத்தை காப்பாற்றுவது போன்ற படங்கள் அவ்வளவாக இல்லை. பொதுவாக கடனில் எடுத்தாலும் அயர்ன் மேன் படம் கொடுத்த ஹிட்தான் அடுத்து அடுத்து மார்வேல் ஸ்டுடியோஸ்க்கு கேப்டன் அமெரிக்கா , தோர் போன்ற படங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்தது. ஆனால் அவெஞ்சர்ஸ் படம் மார்வேல் ஸ்டுடியோஸ் எடுத்ததில் பெரிய ரிஸ்க். 

காரணம் என்னன்னா டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூ , விஷுவல்லாக கொஞ்சம் கூட பிசிறு தட்டாத ஒரு பக்காவான வி ஏப் எக்ஸ் இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் மாயாஜால உலகத்தின் லோகி நிஜமாகவே பூமியின் மேலே ஒரு ஏலியன் படையெடுப்பை நடத்துவார். ஒரு ஒரு காட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டு இருந்த டோனி ஸ்டார்க் , ஸ்டீவ் ரோஜர்ஸ் , நடாஷா , கிளின்ட் பார்டன் புரூஸ் பேனர் போன்றவர்களை ஒன்றாக சேர்த்தது. பின்னால் மனிதர்கள் இதுவரையில் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு அட்டாக்கை அவர்களிடம் இருக்கும் எல்லா சக்திகளையும் கொடுத்தாவது தடுக்க வேண்டும் என்ற நிலைமை வருகிறது. இப்படித்தான் சூப்பர் ஹீரோக்களாக எல்லோருமே ஒன்று சேர்க்கின்றனர். 

ஹல்க் - கதாப்பத்திரம் தி இன்க்ரேடிபிள் ஹல்க் படத்தில் இருந்தே நேரடியாக கன்டினியூ ஆகிறது, இருந்தாலும் புதிதாக ரீ-கேஸ்ட் பண்ணப்பட்ட புரூஸ் பேனர் நடிகர் மார்க் ராப்பாலோ மிகவும் தெளிவான நடிப்பை கொடுத்துள்ளார். டோனி ஸ்டார்க்காக நடிக்கும் ராபர்ட் டோனி ஜூனியர் அவருடைய அயர்ன் மேன் கதாப்பத்திரத்தை சூப்பர்ராக பண்ணியிருப்பார். மேலும் நடாஷா , ஹாவ்க்கை , போன்ற லேஜெண்ட் சூப்பர் ஹீரோக்களுக்கும் நிறைய கெத்தான மாஸ் சண்டை காட்சிகள் படத்துக்குள் இருக்கிறது. படம் வேறு லெவல்லில் இருக்கிறது. இந்த படம் உங்களை சூப்பர் ஹீரோக்களின் உலகத்துக்கே கொண்டு போகும் : 16/9 ஆஸ்பெக்ட் ரேஷியோ எல்லாம் சினிமா படங்களுக்கு சரியாக வராது ஆனால் இந்த படத்துக்கு ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. ஒரு ஒரு காட்சியும் செதுக்கபட்டு இருப்பது போல இருக்கிறது. 

இந்த படம் எதனால் பிடிக்கும் என்றால் விஷுவல்லாக அந்த கிளைமாக்ஸ் ஃபைட் ஸீன்களை பிரமாதமாக பண்ணியிருப்பார்கள் . நூறுக்கும் மேற்பட்ட பலமான ஏலியன்களை வெறும் ஆறு சூப்பர் ஹீரோக்கள் அடித்து நொறுக்குவது பொதுவாக எல்லா படங்களிலும் பார்த்துவிட முடியாது. கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூ , டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூ , சினிமாட்டிக் பாயிண்ட் ஆஃப் வியூ என்ற மூன்று விஷயங்களிலும் ஆவேன்ஜெர்ஸ் ஒரு ஸ்ட்ராங்க்கான படம்  என்பதால் இந்த படம் அவதார் அளவுக்கு மக்களை டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணாமல் கமர்ஷியல்லாக ஹிட் கொடுத்து இருக்கிறது. 





No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...