Sunday, September 9, 2018

CINEMATIC WORLD - 005 - ARRIVAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00022]



பூமியில் எல்லாமே நன்றாக சென்றுக்கொண்டு இருக்கும்போது திடீரென்று  பூமியின் மேற்பரப்பில் நடுவானத்தில் புதிதாக 12 வேற்றுகிரக விண்கலங்கள் உருவாகின்றன . இது ஒரு இடத்தில் நடந்தால் பரவாயில்லை இப்படி ஏலியன்கள் உலகம் முழுவதும் தோன்றுவதால் மக்கள் எல்லோருமே பதட்டத்தில் இருக்கிறார்கள் . 

இப்படியாய் பூமிக்கு வந்த விண்கப்பலில் இருக்கும் வேற்றுகிரக வாசிகள் வட்டமாக வட்டமாக நிறைய எழுத்துக்களை எழுதி காட்டுகின்றனர். இவர்கள் பேசும் மொழி மர்மமாகவே இருக்க கோபக்காரராக இருக்கும் US ராணுவத்தில் பணியாற்றும் நம்முடைய COLONEL GT WEBER ஆரம்பத்தில் இந்த வேற்றுகிரக விண்கலங்கள் வந்ததற்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் ஆராய்ச்சி குழுவில் இருக்கும் DOCTOR IAN DONELLY மற்றும் LOUISE என்று மொழியியல் துறையில் ஆர்வமுடன் இருக்கும் கொஞ்சம் பேரை சேர்த்துககொள்கிறார். 

அந்த வேற்றுகிரகத்தினர் பேச முயற்சிக்கும் வட்ட வடிவத்தில் உள்ள சமிக்ஞை எழுத்து வடிவ மொழியின் மூலமாக வேற்றுகரகத்தினர் இந்த உலகத்துக்கு என்னதான் சொல்ல நினைக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும் என்ற காரணத்துக்காக அவர்கள் காட்டும் ஒரு ஒரு எழுத்து சிம்பல்களுக்கும் எப்படியாவது மொழிபெயர்ப்பு பண்ண வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். 

அதே சமயம் அவர்கள் ஆபத்தானவர்கள் என்று புரியும் பட்சத்தில் பாதுகாப்புக்காக சண்டை போட நிறைய படைகள் விமானங்கள் , கப்பல்கள் , ஏவுகணைகள் எல்லாமே தயாராக இருக்கிறது என்பதால் கிடைக்கும் கொஞ்சம் நாட்களுக்குள் இந்த ஆராய்ச்சி பண்ணும் ஆராய்ச்சியாளர்கள் மிக மிக வேகமாக TRANSLATE செய்ய எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படத்தின் கதை ..இந்த திரைப்படம் 2016 ம் ஆண்டு வெளிவந்தது ..இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நான் கொடுத்துள்ளேன். உங்களுக்கு ஏலியன் கதைகள் பிடிக்கும் என்றால் இந்த கதை உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். கிளைமாக்ஸ்ஸில் ஒரு உலகத்தின் பாதுகாப்புக்கு மொழிகளை பற்றிய படிப்புகளும் ரொம்பவுமே முக்கியம்தான் என்று நல்ல மெசேஜ் சொல்லி படத்தை முடித்துள்ளார்கள். இந்த படமே ஒரு கனவு போல இருக்கிறது. 

No comments:

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

  ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்...