Sunday, September 16, 2018

CINIMATIC WORLD - 007 - OCEANS ELEVEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00023]



இந்த திரைப்படத்தில் சிறையில் இருந்து வெளிவந்த DANNY OCEAN மிகப்பெரிய CASINO  ஐ கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் .. இதனால் அவரது நண்பர்கள் மற்றும் திறமை வாய்ந்த 11 பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்கிறார் .. மிகவும் அதிநவீனமான பாதுகாப்பு சிஸ்டம்களை கடந்து பாதுகாப்பு நிறைந்த அந்த பெட்டகத்தை கொள்ளையடிக்க முடிந்ததா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை இந்த திரைப்படம் 2001 ம் ஆண்டில் வெளிவந்தது .. இதன் அடுத்தடுத்த பாகங்கள் OCEANS 12 (2004) , OCEANS 13  (2007) ல் வெளிவந்தது .. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நான் இணைப்பில் கொடுக்கிறேன். இந்த படங்கள் எல்லாம் நம்ம காலத்து HEIST படங்கள் போல இருக்காது. வேற லெவல்லில் 1990 ஸ் களின் ஸ்டைல் மற்றும் 2000 ஸ்களின் ஸ்டைல் கலந்து இருக்கும். ஃபேமிலியோடு பார்க்கும் அளவுக்கு இல்லை என்றாலும் தனியாக பார்த்தால் இந்த படங்களை கண்டிப்பாக பார்க்கலாம். ஒரு பெரிய நடிகர்களின் பட்டியலே இந்த படத்தில் நடித்து இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிளேன் போட்டு பணத்தை எடுக்க நினைப்பார்கள். மொத்ததில் கொஞ்சம் பழைய ஸ்டைல் கொள்ளையடிக்கும் டெக்னிக்களை  காட்சிகளாக காட்டும் அளவுக்கு உங்களுக்கு ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் நன்றாக இருக்கும். ஒரு நல்ல சாய்ஸ்ஸாக இருக்கலாம். திரைக்கதை  மெதுவாக நகர்கிறது. எந்த அளவுக்கு மெதுவாக என்றால் CLIMAX வரைக்கும் கொள்ளையடிக்க PLAN போடுவது மட்டுமே சென்றுக்கொண்டு இருக்கும். CLIMAX ல்தான் கொஞ்சம் கொஞ்சமாக போட்டிருக்கும் பிளான்களை நடப்பில் கொண்டுவந்து வெற்றியடைந்து காட்டுவார்கள். இதனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் உங்களுக்கு நிறைய பொறுமை இருக்கும் பட்சத்தில் இந்த படங்களை பாருங்கள். உங்களுக்கு SIMPLE ஆன CINEMA பார்க்க வேண்டும் என்றால் இந்த படங்களை பாருங்கள். இந்த படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் பற்றி இன்னொரு போஸ்ட் போடுகிறேன். அதுவரைக்கும் காத்திருங்கள். 


No comments:

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

  ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்...