Friday, September 7, 2018

RISE AND FALL OF BUTTON PHONES - JUST TALKS - ஒரு நிஜவாழ்க்கை கருத்து பதிவு !! [REGULATION-2024-00021]




இந்த உலகத்தில் டெக்னாலஜி ரொம்பவே அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இணையதளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை கொடுக்கிறது, அதுவும் இல்லாமல் எண்ணற்ற சாத்தியங்களை கொடுக்கிறது, ஆனால் ஒரு காலத்தில் விஜய் அவர்களின் போட்டோவை என்னுடைய பட்டன் போனுக்கு வால் பேப்பராக வைக்க வேண்டும் என்றால் அதற்கு பாக்கெட் இன்டர்நெட்க்காக 10 ரூபாய் செலவு செய்து எட்ஜ் இணைய வேகத்துக்கு நெட் கார்டு போட வேண்டும். ஒரு வெப்சைட் ஓபன் ஆக குறைந்தது இரண்டு நிமிடங்கள் ஆகலாம், படங்கள் பதிவிறக்கம் செய்ய குறைந்தது ஐந்து நிமிடங்கள் கூட ஆகலாம், அப்போது எல்லாம் ஒரு பாட்டு ஒரு ஃபோன்ல் இருந்து இன்னொரு போனுக்கு அனுப்ப வேண்டும் என்றால் புளூடூத் வசதி மூலமாக போனை அருகில் அருகில் வைத்து அனுப்பிய காலம் என்றே சொல்லலாம், கடைசியாக விஜய் போட்டோ பதிவு இறக்கம் செய்யப்பட்டதும் நிறைய நண்பர்களுக்கு அனுப்பப்படும், அதன் பின்னால் அவருடைய நிழற்படம் ஃபோன் திரையில் வைக்கப்படும், இந்த உலகமே அப்போது எல்லாம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது, ரொம்பவுமே நன்றாக இருந்தது, அந்த பட்டன் ஃபோன்களின் நினைவுகள் கண்டிப்பாக மறக்க முடியாத அனுபவங்கள். நிறைய ஜாவா விளையாட்டுக்கள் மிகவும் சிறிய அளவில் டவுன்லோடு செய்யப்பட்டு விளையாடப்படும், அப்போது எல்லாம் முப்பரிமாண விளையாட்டுக்கள் ஃபோன்களில் கிடையாது. ஒரு தகவல் வேண்டும் என்றால் இணையத்தில் தேடப்பட்டு போனில் பார்த்து நோட்டில் குறிப்புக்களாக எடுக்கப்பட்டது. இந்த இணைய சேவையை கணினியில் சேர்த்தால் ஒரு நொடியில் இருநூறு எம் பி டேட்டா முடிந்துவிடும், இப்படிதான் இணையத்தின் முதல் அனுபவம் இருந்தது. ஒரு லேப்டாப் பிரவுசர் அப்போது எல்லாம் பதிவிறக்கம் செய்யப்படுவது இல்லை. வெறுமனே காப்பி செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டது. யாராவது ஃபோன் வைத்து இருந்தால் அதற்காக நிறைய பணம் செலவு செய்யப்பட வேண்டியிருந்தது. இன்னமுமே RECHARGE கூப்பன்கள் , நெட் கார்டுகள் , ரேட் கட்டர் கார்டுகள் எல்லாமே நன்றாக நினைவில் உள்ளது, அந்த நாட்களில் அவைகள் எல்லாமே மிகவும் புதுமையாக இருந்தது. டெக்னாலஜி இதனை கடந்தும் வளர்ந்துவிட முடியுமா என்று எல்லாம் யோசனைகள் இருந்தன ? அடுத்ததாக தொடுதிரைக்கு என்று தனித்தன்மை வாய்ந்த ஆன்ட்ராய்ட் கைபேசிகள் கிட்டத்தட்ட இந்த உலகத்தின் மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக இருந்தன, அப்போதும் கூட பட்டன் ஃபோன்கள் பயன்பட்டன. அப்போது பட்டன் ஃபோன்களில் புதிய வசதிகள் கூட கொண்டுவரப்பட்டன, ஸ்டோரேஜ் அதிகமாக கொடுக்கப்பட்டது, வை பை வசதி கூட கொண்டுவரப்பட்டது, ஆனால் ஆன்ட்ராய்ட் ஃபோன்கள் விலைக்கு 2015 களில் விலை அதிகமாக  விற்க்கப்பட்டது. நிறைய வசதிகள், பேட்டரி, மற்றும் வீடியோ பார்க்கும் வசதிகள், பாடல் கேட்கும் வசதிகள் இருந்தாலும் பட்டன் ஃபோன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கதான் செய்தது, ஆனால் பட்டன் ஃபோன்களுக்கு ஃபேன்ஸ் இருந்தாலும் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. எஸ் எம் எஸ் கார்டுகள் எல்லாம் போட்டு குட் மார்னிங் குட் நைட் அனுப்பிய காலங்கள், ஒரு ஹெட்செட் கனெக்ட்ஷன் செய்து எஃப் எம் ரேடியோ கேட்டு தூங்கிய காலங்கள் எல்லாம் கண்டிப்பாக மறக்கவே முடியாத காலங்கள் எனலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டெம், இன்டர்நெட், கேம்ஸ். நேட்டிவ் சோஷியல் மீடியா ஆப்கள், நிறைய சிறப்பு ஆபர்கள். என்று நிறைய வசதிகளை கொடுத்த அந்த காலத்தின் பட்டன் ஃபோன்களை கம்பேர் செய்தால் இந்த காலத்தில் அப்படிப்பட்ட நல்ல ஃபோன்கள் கிடைக்க சான்ஸ் இல்லை. ஆனால் ஜியோ ஃபோன் நன்றாகவே இருந்தது. இருந்தாலும் அந்த கால நினைவுகள் எல்லாம் கோல்டன் மெமரிஸ்.


 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...