DOM COBB மற்றும் அவரது கனவு ஆராய்ச்சி குழுவில் இருக்கும் இந்த புத்திசாலிகள் எல்லோரும் மற்றவர்களின் கனவுகளுக்குள் சென்று அவர்களின் நினைவுகளில் இருந்து குறிப்பிட்ட தனிப்பட்ட தகவல்கள் (பாங்க் பின் , பினாமி அக்கவுண்ட் , ஆதார் கார்ட் ஜெராக்ஸ் , எல் ஐ ஸி பாலிசி மாதிரியான தகவல்கள் ) எல்லாவற்றையும் எடுக்கும் சக்திகள் கொண்டவர்கள் , ஆனால் இதுபோல கனவுகளுக்குள் செல்லும்போது ஒரு முறை அந்த கனவில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது , அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இன்செப்ஷன் திரைப்படத்தின் திரைக்கதை , இந்த திரைப்படத்தின் விசுவல் எஃபக்ட்ஸ் மற்றும் திரைக்கதை சிறப்பாக இருப்பதால் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய திரைப்படம் ..2010 ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் அந்த ஆண்டு நான்கு அகாடமி AWARDS வென்றது. இந்த படத்தில் கனவுக்குள் செல்லும் காட்சிகள், கனவு உலகம் உடைந்துபோகும் காட்சிகள் இந்த காட்சிகள் எல்லாமே மிகவும் சிறப்பாக காட்சியமைப்பு செய்யப்பட்டு இருக்கும். கதைக்களம் மிகவும் தெளிவாக எக்ஸ்பைளைன் செய்யப்பட்டு இருப்பதும் இந்த படத்தில் ஒரு பிளஸ் பாய்ண்ட் எனலாம். கண்டிப்பாக CLIMAX பற்றி சொல்லியே ஆக வேண்டும் இந்த படத்துடைய இறுதி காட்சி ரொம்பவே அருமையாக இருக்கும் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்க !! எனக்கும் இதே மாதிரி ஒரு கனவு வரும் , பாஸ் நீங்க சர்வீஸ் கொடுத்த ஃபோன் ரெடி ஆயிருச்சு நான் வேணும்னா கூரியர் போட்டு பார்சல் உங்க வீட்டுக்கு அனுப்பட்டுமா என்று ஒருவன் எனக்கு புது போனில் கால் பண்ணி கேட்பான் !! நானும் அந்த போனை அனுப்புங்க ப்ரோ ! என்று சொல்லிவிட்டு ஃபோன்னை வைத்துவிடுவேன் ! டேய்..கனவுல கூட வேலை பார்க்கும் கம்பெனிக்கு விசுவாசமா இருக்கியே ! உன்னை எல்லாம் என்னன்னு சொல்ல !! நீ நல்லா இருப்ப மச்சான் ! உன் நல்ல மனசுக்கு ஒண்ணும் ஆகாது !
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் :
No comments:
Post a Comment