Sunday, September 2, 2018

WHO CARES - I AM LATE ANYWATS.. - OUT OF BOX THINKING - [REGULATION-2024-00019]




இந்த வாழ்க்கையில எப்போது அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே 50 சதவீத வெற்றியை அடைந்துவிட்டோம் என்று அர்த்தம். காரணம் என்னவென்றால் அறிவு என்பது கற்பனையான விஷயங்களுக்கு நேர் மாறானது. உங்களுக்கு சோசியல் மீடியாக்களில் ஒரு தகவல் கிடைக்கிறது என்றால் அந்த தகவலை உறுதிப்படுத்த இணையத்தை பயன்படுத்தினால் மட்டுமே அந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியும். இந்த உலகத்தில் யாரை வேண்டுமென்றாலும் குறை சொல்லலாம் எதை வேண்டுமென்றாலும் குறை சொல்லலாம். ஆனால் குறை சொல்வது சுலபம். சரி செய்வது கடினமானது. சரியான சூழ்நிலை அமைந்தவர்களால் வெற்றி அடைய முடிகிறது. ஆனால் மோசமான சூழ்நிலைககளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் வெற்றி அடைய முடிவது இல்லை. இதுதான் வாழ்க்கை. திரைப்படங்களில் காண்பது போல மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு அல்லது முற்றிலும் மாற்றப்பட்ட அறிவியலுக்கு எல்லாம் இங்கே வாழ்க்கையில் இடம் இல்லை. வாழ்க்கையில் கடினமான நிலைகள் யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். ஆனால் அந்த கடினமான நிலைகளை கடந்து வந்ததால்தான் இப்போது அவர்கள் வெற்றியை அடைந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூன்று மணி நேர தேர்வு முடிவுகள் உங்களின் தனிப்பட்ட திறனான அறிவுத்திறனை சொல்லிவிடாது. அறிவு என்பது அனுபவம் சார்ந்தது.

தேர்வு எழுதப்படும் நேரம் 6 மணி நேரம் என்று மாற்றப்பட்டால் இங்கே மிகப்பெரிய வெற்றியாளர்களை கூட பார்க்கலாம்.  கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை மொத்தமாக எழுத மூன்று மணி நேரம் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இப்படி ஒரு அவுட் ஆஃப் பாக்ஸ் மன நிலையில் இருந்து யோசிக்க வேண்டியதுதான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம்.  வெற்றி அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பவர்களுக்கு கிடைப்பது இல்லை. அந்த முடிவை சரியாக செயல்படுத்துவதன் மூலமாக அறிவுத்திறனை சரியாக பயன்படுத்தியவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...