Saturday, December 22, 2018

CINEMATIC WORLD - 019 - MEGAMIND (2010) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00036]










நகரத்தை கலக்கும் சூப்பர் வில்லன் மெகா மைண்ட் அவர்கிட்ட இருந்து எல்லோரையும் காப்பாற்றும் மெட்ரோ மேன் , ஒரு கட்டத்துல மெட்ரோ மேன் இல்லாம போகும்போது புது வில்லன்கிட்ட இருந்து எல்லோரையும் காப்பாத்தக்கூடிய பொறுப்பு சூப்பர் வில்லன் மெகா மைண்ட் கிட்ட வந்தா அடுத்து என்ன நடக்கும் அப்டிங்கறதுதான் இந்த திரைப்படம் ,  இந்த படம் 2010 ல வெளிவந்தது. மெகா மைண்ட் ஒரு ஃபைனஸ்ட் அனிமேஷன் ஃபில்ம் என்று சொல்லலாம். லைஃப்ல ஒரு மனிதன் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையால் நல்ல பாதை அல்லது மோசமான பாதையை தேர்ந்து எடுக்கும்போது நடக்கக்கூடிய பிரச்சினையை ரொம்பவே தெளிவாக எக்ஸ்பிளைன் செய்திருப்பார்கள்.. பிக் ஹீரோ 6 திரைப்படத்தின் கதைக்களம் சேர்த்து கம்பரிசன் செய்து பார்த்தால் ஒரு நல்ல சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றும் மெகா மைண்ட் திரைப்படத்தை சொல்லலாம். இந்த படம் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடி ஆக்சன் மூவி என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே வாழ்க்கையில் எல்லாமே கிடைச்சா சூப்பர் ஹீரோவாக வாழலாம் ஆனால் வாழ்க்கையில் எதுவுமே கிடைக்க வில்லை என்றால் சூப்பர் வில்லன்னாகத்தான் வாழ முடியும் அதுதான் MEGAMIND படத்துடைய CONCEPT . இந்த படம் நீங்க முதல் முறை பார்த்தால் அப்போதே நன்றாக இருக்கும், படத்தின் ஒரு சூப்பர் வில்லனாக இருந்தாலும் இந்த LOVE - ACTION - DRAMA  - எல்லாமே முடியும்போது MEGAMIND உங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரமாக மாறுவார். ஒரு சில பேரை மக்கள் காரணமே இல்லாமல் கொண்டாடி கதாநாயகராக மாற்றிவிடுவார்கள் இன்னொரு பக்கம் ஒரு சில பேரை ரிஜெக்ட் பண்ணி ரிஜக்ட் பண்ணி வெறுப்பாகவே நடத்துவார்கள் ஆனால் இந்த மாதிரி ஒரு மட்டமான ஆட்டிட்யூட்டை விட்டுத்தள்ளிவிட்டு எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும் , அப்படி பார்த்தால்தான் சக மனிதர்களிடம் எப்படி அன்பாக பழகவேண்டும் என்று ஒரு நல்ல மைண்ட்ஸெட் உங்களுடைய மண்டைக்குள் உருவாகும். இதுதான் நான் புரிந்துகொண்ட கான்செப்ட். இந்த மாதிரி நிறைய கருத்துக்களை கேட்டு வருங்கால சந்ததியினருக்கு கல்வெட்டில் செதுக்கி வைக்க நோட்ஸ் எடுத்த்துக்கொள்ள வேண்டும் என்றால் நம்ம வலைப்பூவுக்கு ஃபாலோ பண்ணிக்கொள்ளுங்கள் !!!

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...