சனி, 29 ஜூலை, 2023

CINEMATIC WORLD - 080 - THE 36 TH CHAMBER OF SHAOLIN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 000113]



இந்த காலத்தின் பறந்து பறந்து அடிக்கும் ரோபோட் சண்டை காட்சிகளை விட்டுவிடுங்கள். ஒரு கம்ப்யூட்டர் கேம் போன்ற கணினி வரைகலை சண்டை காட்சிகளை விட்டுவிட்டு நிஜமாக அமைக்கப்பட்ட  நிறைய குங்ஃபூ சண்டை காட்சிகள் நிறைந்த படம் உங்களுக்கு வேண்டும் என்றால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். இந்த படத்தின் கதை : ஒரு கொடிய அரசாங்க அமைப்பின் கும்பலால் தன்னுடைய குடும்பம் , நண்பர்கள் மாறும் ஆசிரியர்கள் என அனைவரையும் இழந்து நிற்கும் சான் டே தப்பித்து கடைசியாக உயிர் பிழைத்து ஷாவோலின் கோவிலுக்குள் தஞ்சம் செல்கிறார். அங்கே தற்காப்பு கலையாக குங்ஃபூ சண்டை கலையை நிறைய வருடங்கள் செலவு செய்து கற்றுக்கொள்ளும் சான் டே பின்னால் ஒரு துறவியாக சொந்த ஊருக்கு வந்து மக்களை காப்பாற்றுவதுதான் இந்த படத்தின் கதை, இந்த படத்துக்கு Return to the 36th Chamber மற்றும் Disciples of the 36th Chamber. என்ற அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். இந்த படம் ஒரு அருமையான KUNGFU படம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. இந்த படம் ஒரு மனுஷன் தன்னுடைய கஷ்டங்களை எல்லாமே கடந்து வெற்றி அடையனும் என்றால் எந்த அளவுக்கு போராட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் படம். உங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம். இங்கே நிறைய படங்களில் ஒரு அமைதியான வாழ்க்கைக்கும் ஒரு கோபமான வாழ்க்கைக்கும் இருக்கும் அடிப்படையான வித்தியாசம் என்ன என்று சொல்லி இருக்க மாட்டார்கள் , ஆனால் இந்த படத்தில் நன்றாகவே சொல்லியிருப்பார்கள். உங்களுக்கு எதனால் இந்த படத்தை ரெகமண்ட் செய்கிறேன் என்றால் பொழுதுபோக்கு அம்சங்களை விட்டுவிடுங்கள் , இந்த படத்தில் இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கலாம். தனித்த செயல்பாடு , கடின உழைப்பு , நம்பிக்கை , விடாமுயற்சி , உடல் பலம், மன உறுதி மற்றும் கட்டுப்பாடு என்று நிறைய நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே மையப்படுத்தி எடுத்த படம் இல்லை. இந்த படம் தற்காப்பு கலைகளுடைய மரியாதையை கண்டிப்பாக காப்பாற்றும் அளவுக்கும் ஒரு தற்காப்பு கலை என்பது எந்த அளவுக்கு அடிப்படையாயனது என்றும் ரொம்ப ரொம்ப நன்றாகவே சொல்லி இருக்கிறது.  இந்த மாதிரி படங்களை நான் நிறையவே இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கிறேன். வேறு என்ன சொல்ல ? இந்த படத்தை உங்கள் வாட்ச் லிஸ்ட்டில் போட்டுவிட்டு இந்த வலைப்பூவை உங்கள் புக் மார்க்கில் போட்டுவிடுங்கள் ! உங்களுக்கு புண்ணியமாக போகும் !

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

🎬 10/10 திரைப்படப் பரிந்துரைகள் 🧵
விளம்பரங்களோ, பில்டப்போ கிடையாது. நிஜமாகவே அந்த ஹைப்-பிற்கு முற்றிலும் தகுதியான படங்கள். ஒரு சீன் கூட ஸ்கிப் செய்ய முடியாது. பலவீனமான கிளைமாக்ஸ் கிடையாது. பியூர் சினிமா👇

---

1. தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்
ஒரு சிறைச்சாலை கதை. ஆனால், அது நமக்குள்ளே ஒரு நம்பிக்கையையும், உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மறக்க முடியாத ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

2. இன்டர்ஸ்டெல்லார்
விண்வெளி, காலம், காதல், வாழ்வாதாரப் போராட்டம். படம் முடிந்து லைட் போட்ட பிறகும், உங்களை அப்படியே திகைத்துப்போய் கூரையைப் பார்க்க வைக்கும் படம்.

3. தி டார்க் நைட்
திரையுலக வரலாற்றிலேயே உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த வில்லன்களில் ஒருவர் இதில் உண்டு. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக இருக்கும்.

4. பாராசைட்
ஆரம்பத்தில் ஒரு காமெடி படம் போல நகரும். ஆனால் மெல்ல மெல்ல நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு பாதையை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.

5. ஃபைட் கிளப்
இந்தப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வளவு குறைவாகத் தெரிந்து கொண்டு பார்க்கிறீர்களோ, அவ்வளவு நல்லது.

6. விப்லாஷ்
மன அழுத்தம், நெருக்குதல், பெர்ஃபெக்ஷன். இந்தப் படம் நகரும் வேகம் உங்கள் இதயத் துடிப்பை அப்படியே எகிற வைக்கும்.

7. செவன்
இருண்ட, உங்களை உலுக்கிப்போடும் கதைக்களம். உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ்.

8. தி ப்ரெஸ்டீஜ்
மனிதனின் அதீத வெறியைப் பற்றிய கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை ஏமாற்றி, உங்கள் புத்திசாலித்தனத்தோடு விளையாடும் ஒரு மேஜிக்.

9. இன்செப்ஷன்
கனவுக்குள் கனவு, அதற்குள் இன்னொரு கனவு. இவ்வளவு குழப்பமான விஷயத்தைக்கூட மிகத் தெளிவாக, புரியும்படி சொல்லியிருக்கும் திரைக்கதை விந்தை.

10. குட் வில் ஹண்டிங்
ஆரவாரம் இல்லாமல், அமைதியாக உங்களை அழ வைக்கக்கூடிய, மிக நேர்த்தியாக எழுதப்பட்ட ஆகச்சிறந்த உணர்ச்சிப்பூர்வமான படம்.

GENERAL TALKS - வேலையை முடிக்கும் நவீன மெஷின் ?

இந்த நவீன சிஸ்டம் இயங்குவதே மனிதர்களின் ‘பயத்தையும் ஆசையையும்’ மூலதனமாகக் கொண்டுதான். ஈஸி இஎம்ஐ (EMI), கிரெடிட் கார்டுகள், வீட்டுக் கடன்கள் ...