Saturday, July 29, 2023

CINEMATIC WORLD - 078 - THE BAD GUYS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 000111]


ட்ரீம்வொர்க்ஸ் ஸ்டுடியோ அனிமேஷன் படங்கள் 2000 களில் வெளிவந்து ஹிட்டான பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்கள் ஒரு பக்கம் இருக்க சோனியின் ஸ்பைடர் மேன் இன் டூ ஸ்பைடர் வேர்ஸ்  படத்தின் அனிமேஷன் ஸ்டைல்தான் இப்போதைய டிரெண்ட்டாக இருக்கும் அந்த வகையில் ட்ரீம்வொர்க்ஸ் வெளியீட்டில் வெளிவந்து நல்ல வசூல் குவித்த திரைப்படம் தி பேட் காய்ஸ் - இந்த படத்துடைய கதை என்னவென்றால் மிகவும் திறமையான  கொள்ளைகளை செய்யும் ஒரு குழுவினருக்கு மன்னிப்பு கொடுத்து மறுமுறை வாழ ஒரு வாய்ப்பும் கொடுக்கப்படும்போது அவர்கள் செய்யாத ஒரு கொள்ளைக்கு அவர்களை மாட்டிவிடுகிறார்கள் இந்த நிலையில் அடுத்து அவர்கள் சென்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் அடுத்த சக்ஸஸ்புல் ஃபிரான்சைசாக ஸ்டுடியோவுக்கு இருக்கலாம். இந்த படம் நன்றாக உள்ளது. கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூக்கு சரியாக உள்ளது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கவும். DREAMWORKS இன்னுமே GAME லதான் இருக்கு என்று சொல்ல ஒரு தரமான படத்தை ஸ்டுடியோ கொடுத்து இருக்கிறது. புதிதாக அறிமுகம் பண்ணும் இந்த பிலிம் அடுத்தடுத்த பார்ட்ஸ் வெளியிடப்பட்டு இன்னொரு புது ஃபிரான்சைஸ்ல கொண்டுவந்து ஸ்டுடியோவுக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் அட்வாண்டேஜ் கொடுக்கலாம் என்று என்னுடைய கருத்து. இப்போ எல்லாம் TROLLS மாதிரி டிஸப்பாயிண்ட்மென்ட் பண்ணும் படங்களை என்னால் அக்சப்ட் பன்னிக்கவே முடியவில்லை. எந்த காரணத்தால் மியூஸிக்கல் படங்கள் எல்லாம் 500 மில்லியன்னை அசால்ட்டாக தாண்டி சென்று 1 பில்லியன்னை தொட்டுவிடுகிறது என்று தெரியவில்லை. இந்த படத்தை நீங்கள் பேசும் பொருளாக எடுத்துக்கொண்டால் இந்த படம் ஒரு கமர்ஷியல் படம்தான். நானும் நிறைய படங்களை பார்த்துவிட்டேன் இந்த மியூசிக்கல் படங்களில் என்ன மாயம் இருக்கிறது என்று தெரியவே இல்லை. இந்த மாதிரி கமர்ஷியல் படங்களுக்கு இன்டர்நேஷனல் ஆடியன்ஸ்தான் சப்போர்ட் கொடுக்க வேண்டும். எதுக்கு என்று கேட்கிறீர்களா ? இது போன்ற படங்கள்தான் எனக்கு பிடிக்கும் என்ற சுயநலம்தான் வேறு என்ன ?  இவ்வளவுதான் இந்த படத்துக்கான என்னுடைய கருத்துகள். இந்த படத்தை பற்றிய உங்களின் கருத்துக்கள் என்ன ? கமெண்ட் போடுங்கள் !! இந்த வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி !! மீண்டும் வருக !! 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...