Saturday, July 29, 2023

CINEMATIC WORLD - 077 - THE POST - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



1970 களில் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட அரசாங்க ஆவனங்களால் பத்திரிக்கை நிறுவனத்தின் மீது தொடங்கப்பட்ட வழக்கு ஒரு நடப்பு அரசியல் பிரச்சனையாக இருக்கும்போது தன்னுடைய கணவரின் மரணத்துக்கு பின்னால் தி வாஷின்ங்டன் போஸ்ட் நாளிதழின் நிறுவன உரிமையாளராக பதவியேற்கும் பெண்மணி காதெரின் கிரகாம் மற்றும் நிறுவனத்தின் தலைமை எடிட்டர் பேன் பிராட்லே இப்போது சர்ச்சைக்கு காரணமான அரசாங்க ஆவணங்களின் முழு தொகுப்புக்கான கட்டுரைகளை வெளியிட வேண்டிய நிலையில் அடுத்து என்ன நடந்தது என்பதை சொல்லும் கதைதான் இந்த போஸ்ட். பொதுவாக பிரஸ் மற்றும் மீடியாக்களின் கருத்து சுதந்திரம் குறித்த படங்கள் கொஞ்சம்தான், ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் பயோகிராபி படங்களை மிக சிறப்பாக எடுப்பதில் திறன்மிக்க இயக்குனர் என்பதற்கு கேட்ச் மீ இப் யு கான் படம் சிறந்த உதாரணம் , அந்த படத்தின் மாஜிக் நிச்சயமாக இந்த படத்திலும் வெளிப்பட்டு இருக்கிறது. கதை நன்றாக இருப்பதால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவும். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் மக்களே ! பத்திரக்கை சுதந்திரம் என்பது ரொம்ப முக்கியமானது . நிர்வாக ஆட்சிக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பத்திரிகைகள் சார்ந்து இருக்க கூடாது. மக்களுக்கு சரியான நியூஸ் கொடுத்தே ஆக வேண்டும். இந்த படம் உங்களுக்கு TIMES OF INDIA V. SCAM 1992 வை நினைவுபடுத்தலாம். இங்கே எல்லோருமே சேர்ந்து வொர்க் பண்ணினால்தான் நாடு முன்னேறும். அப்படி வொர்க் பண்ணவில்லை என்றால் கட்டிடம் இருக்காது , உணவு இருக்காது , வசதிகள் இருக்காது, இங்கே கடைநிலையில் இருப்பவர்கள் கஷ்டப்படாமல் இருந்தால் கொஞ்சம் கூட முன்னேற்றமே இருக்காது. உண்மைகளை தெரிந்துகொள்வது ரொம்பவுமே அடிப்படை உரிமை. அதனால்தான் வாஷிங்டன் போஸ்ட் மட்டுமே இல்லாம நிறைய செய்தித்தாள் நிறுவனங்கள் நிறைய ஆதரவு கொடுத்து ஒரு நல்ல வரலாறு எழுத அந்த காலத்தில் சப்போர்ட் பண்ணியிருந்தார்கள். இந்த மாதிரி அமெரிக்க வரலாற்றில் ரொம்ப ரொம்ப முக்கியமான நாட்களை ஒரு படமாக எடுத்து இந்த உண்மை சம்பவத்தை இந்த உலகத்துக்கு சொன்ன ஸ்டீவன் ஸ்பியல்பேர்க்குக்கு ரொம்ப பெரிய பாராட்டு கொடுக்க வேண்டும்.   இவ்வளவுதான் இந்த படத்துக்கான என்னுடைய கருத்துகள். இந்த படத்தை பற்றிய உங்களின் கருத்துக்கள் என்ன ? கமெண்ட் போடுங்கள் !! இந்த வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி !! மீண்டும் வருக !! iஇந்த வளைப்பூ எங்கேயும் கால முளைத்து சேந்துவிடாது. கண்டிப்பாக அனைத்து கருத்துக்களையும் பகிரவும் !

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...