Friday, July 28, 2023

CINEMATIC WORLD - 076 - DEATH ON THE NILE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 000109]


இந்த படத்தை என்னை போன்று அகாதா கிறிஸ்டி நாவல்களை படிக்கும் ஆடியன்ஸ் என்று இருந்தாலும் அல்லது நாவல்கள் படிக்கும் ஆடியன்ஸ் இல்லை என்றாலும் ரொம்ப ரசித்து பார்க்க முடியும்.  பணக்கார தொழில் அதிபர் பெண்மணியான "லின்னேட்" அவருடைய திருமண நிச்சயத்துக்காக ஆடம்பர கப்பலான எஸ். எஸ். கார்னக் என்ற கப்பலில் விருந்துடன் கூடிய ஒரு பயணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் சைமனின் முன்னால் காதலி ஜாக்வலின் உட்பட பலர் அந்த கப்பலில் பயணம் செய்வதால் அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற காரணத்தால் பிரைவேட் டிடெக்டிவ் ஹேர்குல் பைரேட்டை உதவி கேட்டுள்ளார், ஆனால் ஹேர்குல் எவ்வளவோ கவனமாக இருந்தாலும் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பின்னால் லின்னேட் கொல்லப்படவே இந்த கொலையை செய்தது யார் என்ற விசாரணையும் அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே இந்த படத்தின் கதை. இந்த படம் 1930 களின் காலத்தின் பிரதிபலிப்பை அப்படியே கொண்டுவந்து இருக்கிறது. ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் படத்தின் திரைக்கதையோடு சேர்த்து பார்க்கும்போது இன்னும் சினிமாட்டிக் ஆன இன்னும் எமோஷனலான படமாக இருக்கிறது. கப்பல் பயணத்தின் காட்சிகள் பிரமிப்பாக இருக்கிறது, விஷுவல் எஃபக்ட்ஸ் இந்த படத்தின் கிளாசிக் ஆன கதையின் மின்னோட்டத்தை மிக சரியாக புரிந்துகொண்டுள்ளது எனலாம். இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கவும்.  கால் கடோட் , கென்னத் பேர்காம் மிக சிறப்பான நடிப்பு திறனை கொடுத்துள்ளனர். இனிமேலும் நிறைய MYSTERY படங்கள் இந்த அமெரிக்க சினிமாவில் வந்தாலும் இந்த படத்தின் விஷுவல் ஸ்டைல் மற்றும் கதைக்கு கொடுத்த போயட்டிக் லெவல் சினிமா ஸ்கிரீன் பிரசன்டேஷன்னை வேறு ஒரு படம் கொடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. இந்த படம் ஒரு ரொம்ப நல்ல மிஸ்டரி நாவலை ஒரு ரசிக்கும்படியான காட்சித்தொகுப்பாக கொடுத்துள்ளது. இந்த படம் இந்த படத்துடைய ப்ரொடக்ஷன் வேல்யூவுக்கு நல்ல ஜஸ்டிஸ் கொடுத்து உள்ளது. இப்போது எல்லாமே நிறைய படங்கள் அப்படி பண்ணுவது இல்லை. [2.0]


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...