Thursday, June 29, 2023

CINEMATIC WORLD - 075 - THE GENTLEMEN 2020 - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - [REGULATION 2024 - 000108]

 


இந்த படத்துடைய கதையை பார்க்கலாம்  கெட்டவர்களின் நெட்வொர்க்கில்  மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வேலைகளின் தலைவனாக இருக்கும் ஒரு கோபக்கார காங்ஸ்ஸ்டர்தான் மைக்கேல் , ஒரு கட்டத்தில் இவரோடு சேர்ந்து வேலை செய்ய மறுத்ததால் ஒரு இன்னும் கோபக்கார எதிரியாக மாறிவிட்ட ஒரு மனிதார்தான் இந்த தொழிலில் நிறைய அனுபவமிக்க இன்னொரு காங்ஸ்ட்டர்ரான பேர்ஜெர் , இங்கே ஒரு பக்கம் சொன்ன வேலைகளை தவறு இல்லாமல் முடிக்கும் அனுபவமுள்ள கார்டியன்தான்  இவருடைய நம்பிக்கையான வேலையாளர் ரேமண்ட் , ஒரு அதிசயமான நாளில் இவரை நேரில் சந்திக்கும் ஒரு பத்திரிக்கை நிருபரான பிளேட்சர் இப்போது போதுமான ஆதாரங்களை கொண்டு இவர்கள் என்னென்ன காரியங்களை செய்துள்ளனர் என்பதை ஒரு கதை போல நேரேஷன் பண்ணி சொல்லிவிட்டு பணம் கேட்டு மிரட்டும்போதுதான் இந்த படத்தின் கதையே வெளிப்படுகிறது , மேலும்  இவ்வளவு கலவரத்துக்கு நடுவே எங்கேயோ ஒரு பகுதியில் தற்காப்பு பயிற்சி சொல்லிக்கொடுக்கும் இருக்கும் கோச் என்று மட்டும் அறியப்படும்  ஜிம் டிரைனரும் அவருடைய  குழுவில் இருப்பவர்களும் எப்படி இந்த  பெரிய லெவல் காங்வாரில் மாட்டிக்கொண்டார்கள் என்று ஒரு கதை, மேலும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி இந்த பழிவாங்கும் சண்டைகளில் இருந்து  எப்படியாவது கவனமாக வெளியே கொண்டுவர வேண்டும் என்று போராடும்  நல்ல மனுஷனான கோச் பண்ணும் சம்பவங்கள் , இன்னொரு பக்கம் புதிதாக முளைத்த டிரை ஐய் என்னும் பெயருள்ள கடத்தல் தலைவனின் கொலைகார சதிகளை நம்ம பெரும் தலைகள் முறியடிக்கும் காட்சிகள் என வழக்கமான மோதல் கதையையே கொஞ்சம் வித்தியாசமாக ப்ரெசெண்ட் செய்து அசத்தியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் காய் பியர்ஸ் , இவருடைய ஷெர்லாக் ஹோம்ஸ் படங்கள் ஸ்பெஷல் காட்சியமைப்புகளுக்காக நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த படத்தில் கதாப்பாத்திரங்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்ததக்கது. மொத்ததில் லோகேஷ் கனகராஜ் படங்களின் ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்க வாய்ப்பு உள்ளது. போதை பொருட்கள் விற்பனையில் நடக்கும் மோசமான ஆட்களின் மோதல்களை இந்த படம் நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறது. நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். 

CINEMATIC WORLD - 074 - CASINO ROYALE - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - [REGULATION 2024 - 000107]

 


CASINO ROYALE - உலக அளவில் தேடப்படும் ஒரு கொடிய குற்றவாளியாக கருதப்படும் லீ செப்ஃபேயை ஜேம்ஸ் பாண்ட். மிகக்கடினமாக போராட்டத்தில் தேடி கண்டுபிடிக்கிறார் இருந்தாலும் இந்த கொடிய லீ செப்ஃபே தவறான வழியில் சேர்த்த அவனுடைய மொத்த பணத்தையும் உலக அளவில் நடைபெறும் ஒரு கடினமான காஸினோ சீட்டாட்ட பந்தயம் நடக்கும் இடமான காஸினோ ராயல் கட்டிடத்தில் பந்தயமாக கட்டிவிடுகிறார், இப்போது ஜேம்ஸ் பாண்ட் அரசின் அனுமதி பெற்று அரசாங்கத்தில் இருந்து கொடுக்கப்படும் பணத்தை கொண்டு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் அந்த கட்டிடத்தில் போக்கர் சீட்டாட்டம் ஆடினால்தான்  அந்த நூறு கோடிகளுக்கும் மேற்பட்ட பணத்தை மீட்டு கொடுக்க முடியும் , எப்போது வேண்டும் என்றாலும் பாண்ட் மற்றும் அவருடைய உதவியாளர் வேஸ்பரை கொன்றுவிடலாம் என்ற உயிரை பணயம் வைக்கும் சோதனையில் பாண்ட் வெற்றியடைந்தாரா ? அடுத்து என்ன நடந்தது ? என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் ஹாலிவுட் வரலாற்றில் சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கிறது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய ஸ்பை திரைப்படம் இதுவாகும். கதை என்ற வகையிலும் காட்சியமைப்பின் வகையிலும் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பத்திரத்துக்கு 2005 களில் புதிதாக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்  டேனியல் க்ரெய்க் இந்த படத்தில் ஒன் ஆஃப் லைப்டைம் பெஸ்ட் நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பாராட்டாமல் இருக்க முடியாது, ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சமாக இருந்தாலும் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் நெருக்கமாக காதலித்தால் என்ன நடக்கும் என்பதை இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டுவிஸ்ட்டாக வைத்துள்ளார்கள். இந்த படம் என்னுடைய ஃபேவரேட் திரைப்படம். இந்த படத்துக்கு ஜேம்ஸ் பாண்ட்டாக நம்ம டேனியல் நடிக்க ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்பு வந்தது என்றும் ஆனால் படம் வெளிவந்த பின்னால் இந்த படம் வேற லெவல்லில் ஹிட் கொடுத்து கெத்து காட்டியதும் இங்கே நான் பதிவு பண்ண வேண்டிய விஷயமாக கருதுகிறேன். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். 

CINEMATIC WORLD - 073 - MURDER ON THE ORIENT EXPRESS - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - [REGULATION 2024 - 000106]


  

MURDER ON THE ORIENT EXPRESS -  "எப்போதுமே எல்லாமே சரியாகவே நடக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் ஒரு உலக புகழ் பெற்ற டிடெக்டிவ் ஹேர்க்குல் பைரேட் , இவருடைய வாழ்க்கையில் விடுமுறையை நன்றாக நேரம் செலவிட செல்லும் ஒரு ரயில் பயணம் அவருடைய வாழ்க்கையையே மாற்றுகிறது, அந்த ரயில் பயணத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை விசாரணை செய்யும் பொறுப்பை ஹேர்க்குல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் வரும்போது அவரால் கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை என்றால் தவறு செய்யாத ஒருவர் தண்டனைக்காக தூக்கில் போடப்படுவார் என்ற நிலைமை அங்கே இருப்பதால் இந்த கேஸை எடுத்துக்கொண்டு விசாரணைகளுடன் சில நாட்களுக்குள் முடிக்க நினைக்கிறார், அவரால் என்ன கண்டுபிடிக்க முடிந்தது, உண்மையில் அந்த ரயில் பெட்டியில் நடந்த கொலையை செய்தது யார் என்ற திருப்பங்களுடன் படம் நன்றாக செல்கிறது, கண்டிப்பாக ஒரு முறை பார்க்கவும். இந்த படத்தின் அடுத்த  பாகம் டெத் ஆன் தி நைல் நல்ல விமர்சனங்களை பெற்றது. எழுத்தாளர் அகாதா கிறிஸ்டி  எழுதிய மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் என்ற கதையின் திரைப்பட அடாப்ஷன் என்று  தொடங்கப்பட்ட இந்த படம் இப்போது அகதா கிறிஸ்டி சினிமாட்டிக் யுனிவெர்ஸ்ஸின் ஒரு பகுதியாக உள்ளது..  இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்பது ENSAMBLE CAST தான் என்றால் மைனஸ் பாயிண்ட் என்பதும் அதேதான், டிடெக்டிவ்வாக வரும் கென்னத் ரொம்ப நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளார். ஒரு சில நேரம் மெச்சூரிட்டியான ஆடியன்ஸ் மட்டும்தான் இந்த படத்தில் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடியும் என்பது போல காம்ப்ளிகேடட் ஆன திரைக்கதை இந்த படத்தில் இருக்கிறது. மற்றபடி குறைஎன்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். 

Saturday, June 17, 2023

CINEMATIC WORLD - 072 - PONNIYIN SELVAN - 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - [REGULATION 2024 - 000105]

கடந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருந்து இந்த கதை தொடங்குகிறது, இளவரசர் பொன்னியின் செல்வனை கொல்ல போட்ட திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதால் புதிதாக அரசராக ஆசைப்படும் மதுராந்தாகரால் நாட்டில் நிலவும் குழப்பத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு மிக சரியான திட்டம் பகைவரால் போடப்படுகிறது, ஆதித்ய கரிகாலன் எதனால் நந்தினியின் காதலை பிரிய நேர்ந்தது என்பது முதல் இந்த சதிதிட்டங்கள் முறியடிக்கப்பட்டதா என்பது வரையில் சென்ற படத்துக்கு ஒரு பெர்பெக்ட் தொடர் பாகமாக இந்த படம் அமைந்துள்ளது. காட்சிகள் மற்றும் வசனங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. புத்தக கதையில் செய்யப்பட்ட மாற்றம் அவசியமானதுதான். காரணம் என்னவென்றால் ஆதித்தன் - நந்தினி போன்று ஒரு அபூர்வமான எமோஷனல்லான உண்மையான  ஒரு காதல் கதையின் உயிரோட்டத்தில் மட்டமான மாற்றங்களை கொடுக்காமல் இருப்பது பற்றி யோசித்ததால்தான் இந்த டுவிஸ்ட்டை கொடுத்து நந்தினியை நிஜமாகவே காதலித்தாலும் இந்த காதல் கடைசிவரைக்கும் போராடி தோற்றுதான் போனது என்று கிளைமாக்ஸ் வரைக்கும் காட்டி இந்த கதையை ஒரு படமாக பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல கதையாக  ரசிக்கும்படியாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். பொழுது போக்கு அம்சங்களுக்காக ஒரு பெரிய கௌரவமான சோழ வரலாற்றின் கதையமைப்பை மாற்றாமல் இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் 2  படத்துடைய கிளைமாக்ஸ் ஒரு நியர் பெர்பெக்ட் கிளைமாக்ஸ் என்றே சொல்லலாம். பார்க்கும் அனைவருக்கும் இந்த படம் பெஸ்ட்டா அல்லது முந்தைய படம் பெஸ்ட்டா என்று கேட்டால் இந்த இரண்டு படங்களும் சரிசமமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குறையாக பார்த்தால்  இந்த படம் நான் பார்க்கும்பொது முதல் படத்தில் இருப்பது போல நிறுத்தி நிதானமாக காட்சிகளை நகரத்த போதுமான அட்வாண்டேஜ் இந்த படத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. DIRECTORS CUT இருந்தால் கண்டிப்பாக 8 மணி நேரத்துக்கு மேல் கூட இருந்து இருக்கலாம். நிறைய காட்சிகளை 3 மணி நேரத்துக்குள் நெருக்கமாக அமைத்து இருப்பார்கள்.  அதனால்தான் என்னமோ இந்த படத்தில் முதல் படம் போல ஒரு நிறைவான காட்சி அமைப்பு இல்லை. ஒரு சில காட்சிகள் விட்டுபோனது போல இருக்கிறது ஆனால் கதை நன்றாகவே சொல்லப்பட்டு இருக்கிறது. நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். 

CINEMATIC WORLD - 071 - PONNIYIN SELVAN - 1 TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 000106]

பொன்னியின் செல்வன் 1 - கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது, புத்தகத்தில் இருந்து சினிமாவுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் இருந்தாலும் ஒரு கதையாக வரலாற்றின் ஒரு பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்க ஒரு டிக்கெட் கொடுக்கிறது இந்த பொன்னியின் செல்வன். நான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தது இல்லை. இப்போது இந்த படம் என்னுடைய பெர்சனல் ஃபேவரெட் திரைப்படமாக மாறிவிட்டது. இளவரசன் ஆதித்த கரிகாலனுக்கு நண்பராக இருக்கும் வந்திய தேவன் இலங்கையில் தற்போது இருக்கும் இளவரசன் பொன்னியின் செல்வனை அவருக்கு வரப்போகும் பேராபத்தில் இருந்து காப்பாற்ற போராடுவதுதான் படத்தின் கதைக்களம், கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, கிஷோர், பார்த்திபன், சரத் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராய் என்று பெர்பெக்ட் செலெக்ஷன்னாக படத்தின் கதாப்பத்திரங்கள் இருப்பதோடு கலை அமைப்பு , கட்டிடங்கள் , சண்டை காட்சிகள் , திருப்பங்கள் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை இந்த படம் நிறைவாக கொடுத்துள்ளது எனலாம். இந்த படம் ஒரு சகாப்தம் போன்றது, நம்ம தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான ஒரு பிரம்மாண்டமான படத்தை நான் பார்த்ததே இல்லை. ஒரு சில படங்கள் மட்டும்தான் காமிரா வொர்க் உலகத்தரம் என்று அடித்து சொல்ல முடியும் அந்த மாதிரி ஒரு படம்தான் இந்த பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியில் பொன்னியின் செல்வன் V. வந்தியத்தேவன் என்று ஒரு மோதல் காட்சி எனக்கு ரொம்பவுமே பிடித்தமான காட்சியாக இருந்தது. 10 முறையாவது அந்த காட்சியை பார்த்து இருப்பேன். ஒரு பழங்கால பேரரசர்களின் காலத்து படம் என்பதால் கலை மற்றும் கட்டிட அமைப்புகள் மிக மிக சிறப்பாக இந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள். நூறுக்கும் மேற்பட்ட பின்னணி நடிகர்கள் இருந்தாலும் காட்சியும் காமிரா வொர்க்கும ஒரு செகண்ட்க்கு கூட சொதப்பவில்லை. கடைசியாக ஒரு விஷயம் மட்டும் சொல்லவேண்டும் என்றால் இந்த படம் நம்ம சினிமா வரலாற்றை  இன்னொரு மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுபோன படம் என்றுதான் நான் சொல்லவேண்டும் நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். 

CINEMATIC WORLD - 070 - FARZI - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - [REGULATION 2024 - 000104]

இந்த வெப் சீரிஸ் கதைக்களம் : சிறிய வயதில் அவருடைய பெற்றோரை இழந்த பையனாக இருக்கும் சன்னி அவருடைய நண்பன் பிரோஸ் உதவியுடன் எப்படியாவது கடன்களில் மூழ்கப்போக்கும் அவருடைய தாத்தாவின் நியூஸ் பேப்பர் நிறுவனத்தை காப்பாற்ற போராடுகிறார், கடன்களை எல்லாம் அடைக்கவே முடியாது என்ற ஒரு நிலை வந்தபோது கள்ள நோட்டுகளை போலியாக அச்சிடுவதை செய்ய ஆரம்பிக்கிறார், இந்த செயலால் அவருடைய நியூஸ் பேபர் நிறுவனத்தை காப்பாற்றினாலும் தொடர்ந்து நடத்தவும் மேலும் பணம் சம்பாதிக்கவும் போலியான நோட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்கிறார். நிறைய பணம் கிடத்தபோதுதான் ஒரு பெரிய போலி கரன்சி நெட்வொர்க்கின் கொலைகார தலைவனுக்கு சன்னியை பற்றி தெரியவருகிறது, கொலை மிரட்டல் செய்து சன்னியை அச்சு அசலாக பணம் என்னும் மெஷின்களில் கூட கண்டுபிடிக்க முடியாத பணத்தை அச்சு செய்து இந்திய பொருளாதாரத்ததையே பேராபத்துக்கு கொண்டுவரப்போகும் செயலை செய்கிறார், ஆர்டிஸ்ட் என்ற கோட் நேம் உடன் இவர்கள் செய்யும் காரியம் என்ன ? இந்த சம்பவத்தை தடுக்க நினைக்கும் காவல் துறையின் திறன்மிக்க  அதிகாரிகள் நிறைந்த விஜய் சேதுபதியின் குழுவினர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ? என்பதை ஸ்வரஸ்யமாக சொல்லியுள்ளனர், கதாநாயகருக்கு தமிழில் வாய்ஸ் கொடுத்து இருக்கும் நடிகர் ஜீவா அவர்களின் வாய்ஸ் சிறப்பாகவே அமைந்துள்ளது, ஒரு மிடில் கிளாஸ் மனிதனாக சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த வசனங்களில் தொடங்கி பணம் கிடைத்தவுடன் பேசும் வசனங்கள் வரை கதையை நன்றாக கொண்டு செல்ல உதவியுள்ளது. இந்த வெப் சீரிஸ் உடைய பெரிய பிளஸ் பாயிண்ட் நடிகர்களான ஷாகித் , ராஷி கண்ணா , விஜய் சேதுபதி, கே கே மேனன் அவர்களின் நடிப்புதான், தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸ்ஸின் யுனிவெர்ஸில் அமைக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்ஸின் அடுத்த பாகம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால்  வெப் சீரிஸ் வரலாற்றில் நல்ல சினிமாட்டிக் ஆக சொல்லப்பட்ட பெஸ்ட் வெப் சீரிஸ் இந்த ஃபார்ஸி , கண்டிப்பாக தமிழில் பாருங்கள். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - KGF FILM SERIES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! KGF CHAPTER 1 & 2 - வேற லெவல் !! [REGULATION 2024 - 000103]

 

இந்த KGF 1 - KGF 2 - சமீபத்தில் வெளிவந்த ஆக்ஷன் படங்களில் மிகவும் அதிகமான அளவு வெற்றியை அடைந்த கன்னட திரைப்பட வரிசை இதுதான். இந்த படத்துடைய கதை : கதாநாயகர் ராக்கி சிறிய வயதில் இருந்தே பெற்றோரை இழந்து பணத்துக்காக அதிகமாக போராடியிருக்கிறார். இந்த போராட்டம் அவர் வளர்ந்த பகுதியில் அவரை யாராலும் தோற்கடிக்க முடியாத ஒரு வன்முறை நிறைந்த மனிதனாக மாற்றிவிட்டது. ஒரு கட்டத்தில் கோலார் தங்க சுரங்கத்தில் இருந்து அனுமதியற்ற தங்கத்தை எடுத்தல் மற்றும் விற்பனையால் பெரிய அளவில் பணம் பார்க்கும் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியம் இருப்பதை கண்டறிகிறார், இந்த தங்க சுரங்கத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள தனி மனிதனாக போராடிய ராக்கி அங்கே வேலை செய்யும் அனைவரின் நம்பிக்கையை பெற்று உலக அளவில் அதிக பணம் படைத்த மனிதராக மாறுகிறார், ஒரு கமர்ஷியல் படமாக மாஸ் நிறைந்து சொல்லப்பட்ட இந்த கதையின் அடுத்த பாகம் மாஸ் லெவலை ஹாலிவுட் படங்களின் விஷுவல் ஸ்டைலுக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்த பாகத்தில் அரசாங்கத்தால் கோலார் தங்க சுரங்க பகுதியில் ஒரு மறைக்கப்பட்ட மாநகரத்தையே ராக்கி உருவாக்கி இருப்பதை கண்டறிந்து அரசாங்கத்தின் வகையில் ஒரு பக்கம் போர் என்றால் இன்னொரு பக்கம் வில்லன்களின் கொலைசெய்யும் திட்டங்கள் என உயிரை பணயம் வைத்து ராக்கி போராடிய நாட்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.


இந்த படத்தின் மிகச்சிறந்த விஷயம் ஒரு கமர்ஷியல் படமாக பார்க்கும்போது நிறைவான ஸ்கிரீன் ப்ரெசெண்ட்டேஷன் இந்த படத்தில் உள்ளது. கதையாக எழுதப்பட்ட மற்றும் விவரிக்கப்பட்ட காட்சிகள் நிறைய படங்களில் காட்சியாக எடுக்கும்போது சரியாக வராமல் போகலாம் ஆனால் இந்த படம் கதையின் கற்பனை வளத்தை மிக சிறப்பாக திரையில் கொண்டுவந்துள்ளது. நடிப்பு, தயாரிப்பு, காட்சியமைப்பு என்று அனைத்து துறைகளும் மிக சிறப்பாக செயல்பட்ட இந்த படம் வெற்றிகளை அடைந்தத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை, மிகவும் ஸ்மார்ட்டாக எடுக்கப்பட்ட இந்த படம் மற்ற கமர்ஷியல் படங்களில் இருந்து தனித்து வெற்றியடைந்து இருக்கிறது. கேமரா வொர்க் அப்பறம் ப்ரொடக்ஷன் வேல்யூ ரொம்ப நன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்டர்நேஷனல் லெவல்லில் ஒரு படத்தின் கிளைமாக்ஸ்ல கெத்து காட்டியிருப்பது உண்மையில் வேறு லெவல். இப்போ எல்லாம் ஒரு சில படங்கள் இதுதான் மாஸ் என்று காட்ட முயற்சி பண்ணி சோதப்பிவிடுவார்கள் ஆனால் இந்த படம் ஒரு கமர்ஷியல் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சட்டப்புத்தகமே எழுதும் அளவுக்கு செம்ம டீடெயில் கொடுத்து எடுத்த படம். ரொம்ப பெஸ்ட்டான படம். கிளைமாக்ஸ்ல ஃபைட் காட்சிகள் இன்னும் கொஞ்சம் பெட்டர்ராக இருந்து இருக்கலாம் !! கொஞ்சம் கதையில் வொர்க் பண்ணி இருக்கலாம். கிளைமாக்ஸ்ல ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி முடிச்சது போல ஒரு திருப்பு முனை இருக்கிறது , ராக்கியின் காதலை கல்லறைக்கு அனுப்பி போன படத்தின் ரொமான்ஸ்ஸை அப்புடியேt காற்றில் பரக்கவிட்ட திருப்புமுனையாக கதாநாயகியை காலி பண்ணிவிட்டார்கள். இது எல்லாமே கதையாக பார்க்கும்போது கிளைமாக்ஸ்க்கு பொருத்தமாக இல்லை. ஆனால் இந்த படத்தின் நிறைய பிளஸ் பாயிண்ட்கள் இருக்கும் மைனஸ் பாயிண்ட்களையும் காலி பண்ணிவிடும். இந்த படம் பெஸ்ட் ஆஃப் பிரசன்டேஷன். கமர்ஷியல் படங்களின் பாதையில் ஒரு மைல் ஸ்டோன். கே.ஜி.எஃப் படத்தில் நான் ரசிச்ச ஒரு டீ-டெய்ல்லின்க் என்னவென்றால் இந்த படத்தில் ராக்கி எப்போது குழந்தையாக பிறக்கிறானோ அந்த நொடியில்தான் கே.ஜி.எஃப் என்ற இடத்தில் தங்கம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ராக்கி எப்போது கடைசி நொடியில் இருக்கிறாரோ அந்த நொடியில்தான் கே.ஜி. எஃப் -ன் கடைசி நொடியாக இருக்கிறது. இதுக்கு மீனிங் என்னவென்றால் ராக்கி பாய் பிறக்கும்போதே கோலார் தங்க சுரங்கத்துடன் வரலாற்று பாதையில் ஆட்சியாளராக வாழவேண்டும் என்பது டெஸ்டினியாக காலத்தால் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதுவே ரொம்ப ஸ்பெஷல்லான விஷயம்தான். இந்த படத்தை சமீபத்தில் வந்த சிலை கடத்தல் டைனோஸார்கள் படத்தோடு கம்பேர் பண்ணி பாருங்கள் இந்த படத்தின் அருமை உங்களுக்கு புரியும் !!  

Friday, June 16, 2023

CINEMATIC WORLD - 069 - MINIONS RISE OF THE GRU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 000102]

 இந்த படம் DESPECABLE ME படங்களுக்கு பரீக்வல் ஆகவும் MINIONS படங்களுக்கு சீக்வல் ஆகவும் அமைந்துள்ளது, இளம் வயதில் வில்லனாக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும் GRU வின் வீட்டில் அவருடனே தங்கி வேலை செய்துகொண்டு இருக்கின்றனர் வில்லங்களுக்கு அசிஸ்டண்ட்ஸ் ஆக இருப்பதேயே முழு நேர வேலையாக பார்க்க ஆசைப்படும் MINIONS. இந்த நிலையில் விஷியஸ் சிக்ஸ் என்ற வில்லன் குழுவில் மெம்பர் ஆக செல்லும் GRU அங்கே போதுமான மரியாதை கிடைக்காததால் கோபப்பட்டு மாயாஜாலமான ஒரு சீன பாரம்பரிய பதக்கத்தை எடுத்துக்கொண்டு தப்பி விடுகிறார், ஆனால் அந்த மாயாஜால மேடலும் தொலைந்து போகவே GRU மற்றும் MINIONS அடுத்தடுத்த பிரச்சனைகளில் இருந்து எப்படித்தான் தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை, படம் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் ஒரு நல்ல அனிமேஷன் படமாக இருக்கிறது. பொதுவாக இல்லுமினேஷன் கண்டிப்பாக எந்த ஒரு படத்திலும் அவர்களுக்கு என்று என்னமோ ஒரு மேஜிக் பண்ணி வைத்துவிடுகிறார்கள். அந்த மேஜிக் கண்டிப்பாக இந்த படத்திலும் சூப்பர்ரோ சூப்பர்ராக வொர்க் அவுட் ஆகியுள்ளது. கிளைமாக்ஸ் வரைக்கும் மினியான்ஸ் இந்த படத்தை தோளில் தாங்கி கரைசேர்த்துவிடுகிறது. ஃப்ளைட் ஹேஜாக் பண்ணும் காட்சி முதல் குங்-ஃபூ கற்றுக்கொள்ளும் காட்சி வரைக்கும் ஒரு ஒரு காட்சியிலும் கிரேயடிவ்வான நிறைய விஷயங்களை பண்ணிக்கொண்டே இருக்கிறது மினியான்ஸ். அதனாலேயே இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை. நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

Thursday, June 15, 2023

CINEMATIC WORLD - 068 - SCAM 1992 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 000101]

தொழில் செய்து சம்பாதிக்க முயற்சிக்கும் இளைஞராக இருக்கும் ஹர்ஷத் மேத்தாவும் அவருடைய சகோதரரும் 1988 களில் மும்பை மாநகரத்தில் ஷேர் மார்க்கெட்ஸ் துறையில் வேலை செய்து அடிப்படைகளை கற்றுக்கொண்டு சொந்தமாக முதலீடு செய்கின்றனர், ஆரம்பத்தில் சிறப்பாக சென்றாலும் ஒரு கட்டத்தில் கடுமையான நஷ்டத்தால் ஹர்ஷத் பாதிக்கப்படுகிறார், அடுத்த கொஞ்சம் வருடங்களில் நிறைய தொழில் முறை நுணுக்கங்களுடன் களம் இருக்கும் ஹர்ஷத் சகோதரர்கள் கம்பெனி ஷேர்ஸ்களின் விலையை தீர்மானிக்கும் அளவுக்கு மிக பெரிய இன்வெஸ்ட்மென்ட் மெனுப்லேஷன் தனியார் நிறுவனமாக உயர்ந்து இருக்கின்றனர், ஆனால் பாங்க் மற்றும் செக்யூரிட்டி பாண்ட்ஸ் வகையில் ஒரு பணத்தை பயன்படுத்தும் செயலை செய்யும்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையை சேர்ந்த சுசீதா தலால் என்ற மிகச்சிறந்த ஃபினான்ஷியல் பத்திரிக்கை நிரூபரால் இந்த ஃபைனான்ஸியல் செயல்கள் வெளியே வரும்போது அடுத்து என்ன நடந்தது என்ற விறுவிறுப்பான உண்மை சம்பவங்களை இந்த வெப் சீரிஸ் மிக தெளிவாக சொல்லியுள்ளது. இது நிஜமாகவே நடந்த ஷேர் மார்க்கெட் செயல்களை அடைப்படையாக கொண்ட வெப்சீரிஸ் என்பதால் கண்டிப்பாக ஒரு முறை தமிழில் பார்க்கவும். இந்த ஒரு குறிப்பிட்ட வெப் சீரிஸ் வந்து எல்லா தரப்பில் இருந்தும் எல்லோருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நியாயமாக நேர்மையாக கொடுக்கப்பட்டு உள்ளது. ரொம்ப அருமையான இணைய தொடர். குறிப்பாக நம்ம இந்தியாவில் இருக்கும் ஒரு ஒரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய சம்பவம். நம்ம நாட்டுடைய பொருளாதாரத்துல ஒரு பெரிய பூகம்பமே நிகழப்போகும் அளவுக்கு நிலைமை மோசமான அளவுக்கு போகாமல் எப்படி பத்திரிக்கைத்துறை தடுத்து நிறுத்தியது என்று ரொம்ப நன்றாகவே சொல்லி இருப்பார்கள். இதனால் இன்றைக்கு வரைக்கும் இந்த WEBSERIES பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக நம்ம TAMIL DUBBING -ல பாருங்கள் ! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 067 - WEDNESDAY SEASON ONE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 000100]

இந்த வெப் சீரிஸ் ரொம்ப பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் இன்டர்நேஷனல் ஹிட் என்றே சொல்லலாம். ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் 12 மாதங்களுமே மற்றவர்களிடம் எப்போதுமே  வெறுப்பாகவும் , கடுமையாகவும், கோபமாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வாழ்நாள் பாலிசியாக கொண்டுள்ள ஆடம்ஸ் ஃபேமிலியை சேர்ந்த ஒரே மகள் வெட்னஸ்டே ஆடம்ஸ் மாயாஜால சக்திகள் நிறைந்த ஒரு ஃபேண்டஸி பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படுகிறார், ஆரம்பத்தில் அங்கே இருந்து வெளியே தப்பி செல்ல திட்டங்களை தீட்டும் வெட்னஸ்டேவுக்கு எதிர்காலம் காட்டும் கனவுகளின் சக்தியால் அங்கே ஒரு பேராபத்து நிகழவிருப்பதாக மனது சொல்கிறது, தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து கொலைகளை செய்யும் ஒரு கொடிய மான்ஸ்டரை தடுக்க போராடும் வெட்னஸ்டே வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களும் மர்மமான சம்பவங்களும் நிறைந்த ஒரு பிரமாதமான வெப் சீரிஸ்தான் இந்த வெட்னஸ்டே - கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். கதையே ரொம்ப சீரியஸ்ஸாக சென்றுக்கொண்டு இருந்தாலும் நிறைய இடங்களில் ஆடம்ஸ் ஃபேமிலி படங்களை போலவே டார்க்கான ஹூயூமர் அண்டர்டொன்ஸ் இருக்கிறது. எனக்கு தெரிந்து இந்த புதுமையான திரைக்கதை பாணிதான் இன்டர்நேஷனல் அளவில் இந்த வெப் சீரிஸ்க்கு இவ்வளவு அருமையாக வரவேற்பு கிடைக்க காரணம் என்று நம்புகிறேன். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 066 - UNCHARTED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00099]

 இளம் வயதில் புதையல் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள இளைஞராக இருக்கும் நெதன் டிரெக் ஒரு மிகப்பெரிய புதையலை கண்டுபிடிக்க வேண்டும் என்ற  பணக்கார கொள்ளையாராக இருக்கும் விக்டர் சுலைவனுடன் சேர்ந்து புதையல் தேடலை தொடங்குகிறார், உலகம் முழுவதும் பயணிக்கும் இந்த கதையில் அடுத்தடுத்து என்னென்ன நடக்கும், அந்த புதையலை அடைய போராடும் வில்லன் குழுக்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லியுள்ளது இந்த படத்தின் திரைக்கதை, ஒரு வீடியோகேம் அடாப்ஷன் என்று இல்லாமல் கதை ஸ்வாரஸ்யமாக நகர்வதால் இந்த படத்தை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்கலாம். ரொம்ப அட்வென்சர்ரான கதை. வீடியோகேம் ரசிகர்களுக்கு கணக்கே இல்லாமல் சர்ப்ப்ரைஸ்களை கொடுத்து இருக்கிறார்கள். அசாஸ்ஸின்ஸ்  கரீட் என்ற படம் பார்த்தால் அந்த படம் கண்டிப்பாக புரியவே புரியாது. வீடியோ கேம் ரசிகர்களுக்கு மட்டுமே அந்த படம் புரியும் என்பது போல எடுத்து இருப்பார்கள் ஆனால் இந்த படம் கண்டிப்பாக இன்டர்நேஷனல்லாக எங்கே வேண்டும் என்றாலும் வெளியிடலாம் என்றும் எல்லா தரப்பு ஆடியன்ஸ்க்கும் பிடிக்கும் என்றும் திரைக்கதை கொடுத்து இருப்பது பாராட்டுக்கு உரிய விஷயம் என்றே சொல்லலாம். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 065 - THE BATMAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00098]

நடப்பு டி சி யுனிவெர்ஸ்களில் பொதுவாக பேட்மேன் திரைப்படங்கள் என்றால் அல்டிமேட் டேக் சாதனங்கள், சூப்பர் சூட் , கேட்ஜேட்ஸ், கார்கள், மேஜிக், ஆன்ட்ராய்ட், ரோபோட்ஸ், வில்லன்கள் என பல சூப்பர் ஹீரோ அம்சங்கள் நிறைந்த ஒரு ஆக்ஷன் படமாக பார்த்திருப்போம், ஆனால் ராபர்ட் பாட்டின்சன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பேட்மேன் கதாப்பாத்திரத்துக்காக மிகவும் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார், நிஜவாழ்க்கையில் பேட்மேன் கதாப்பத்திரத்தையே கண் முன்னாள் காட்டியுள்ளார். இந்த படத்துடைய கதை. புரூஸ் வெயின் கடந்த இரண்டு வருடங்களாக பேட்மேன் என்ற அடையாளத்துடன் ஒரு பெரிய கிரிமினல் நெட்வொர்க்கையே எதிர்த்து தனி ஒரு மனிதனாக சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார், இப்போது விடுகதைகளை விட்டுவிட்டு செல்லும் ஒரு கொலைகாரனாக அவதாரம் எடுத்து இருக்கும் தி ரிடில்லர் என்ற கொடியவனால் பெர்சனலாக நிறையவே பாதிக்கப்படுகிறார், பேட்மேன் போலவே முகமூடி அணிந்து கிரிமினல்களை எதிர்க்கும் கேட் வுமன் வாழ்க்கையின் மர்மம் என்ன ? ரிடில்லர் எதற்காக கொலை செய்கிறான் ? என்று ஸஸ்பென்ஸ் நிறைந்து செல்கிறது திரைக்கதை, சூப்பர் பவர்ஸ் இல்லாமல் நிஜ வாழ்க்கை கதாப்பாத்திரங்களாக நிறைந்த இந்த படம் கண்டிப்பாக ஒரு முறை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம். இந்த உலகத்துக்கு வயலன்ஸ் தேவையா ? நேரடியாக பழிவாங்குதல் என்பது எவ்வளவு மோசமான விஷயம் என்று கிளைமாக்ஸ்ஸில் அவ்வளவு மெசேஜ்களை சொல்லி இருக்கிறார்கள். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - SNOWDEN (ENGLISH) - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - [REGULATION 2024 - 00096]





ஸ்னோடேன் , இராணுவத்தில் பயிற்சியின்போது  காயம்பட்ட காரணத்தால் புதிதாக என் எஸ் ஏ என்ற அரசாங்க பாதுகாப்பு துறையில் 2007 களில் வேலைக்கு சேரும் எட்வர்ட் ஸ்னோடேன் கணினி புரோகிராம்களை தயாரிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார், பாதுகாப்பு காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள கணினி , செல்போன் , இ மெயில் , மெசேஜ் மற்றும் காமிரா தகவல்களை எடுக்கும் சிறப்பு ப்ரோக்ராம்களை ஸ்னோடேன் உருவாக்குகிறார் மேலும் அந்த புரோகிராம்களை பாதுகாப்பு அமைப்புகளுக்கு கொடுக்கிறார், ஒரு கட்டத்தில் 2013 களில் சில மோசமான அதிகாரிகளால் இந்த புரோகிராம் அப்பாவி மக்களை எல்லாம் சந்தேகப்பட்டு கைது செய்வதில் இருந்து தேர்தல் அரசியல் வெற்றிகளை உருவாக்குதல் வரை எல்லா கெட்ட காரியங்களுக்கும் ஸ்னோடேன் தயாரிப்புகள் காரணமானதை கண்டுபிடிக்கிறார். இப்போது அவர் நடக்கப்போகும் ஆபத்தை என்ன செய்தார் ? இவருடைய முயற்சியால் இவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன என்பதை தெளிவாக சொல்லியுள்ளது. என்பதுதான் இந்த கதை, இது உண்மையாகவே நடந்த ஒரு விஷயம் என்பதால் மனதுக்கு கடினமாக உள்ளது. எட்வர்ட் ஸ்னோடேன் ஒரு உண்மையான வாழ்க்கை ஹீரோ, இந்த பட குழுவினர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். டிஜிட்டல் ப்ரைவசி என்பது எவ்வளவு அவசியமானது என்பதை இந்த படம் பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம்.

Tuesday, June 13, 2023

HOW TO WATCH A MOVIE ? - படம் பார்ப்பது எப்படி ? - இதுவுமே முக்கியமான பதிவு [REGULATION 2024 - 00095]

ஒரு சினிமா படத்தை எப்படி பார்க்க வேண்டும் ? ஒரு படம் தியேட்டர்ல பார்க்கும்போது நல்ல ஸீன்கள் வந்துச்சுனா கண்டிப்பாக கைதட்டனும் , உங்களுக்கு பிடித்து இருந்தால் அந்த ரசனையை கண்டிப்பாக வெளிப்படுத்தனும் , ஆனால் டிஜிட்டல் முறையில் படம் பார்க்க ஒரு சில விஷயங்கள் கண்டிப்பாக இருக்கிறது, இப்போது இருக்கும் கலாச்சாரத்தில் படம் என்பது குறைந்த பட்சம் 1 மணி 35 நிமிடம் ரன்னிங் லெந்த் இருக்கலாம் அதிகபட்சம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ரன்னிங் லெந்த் இருக்கலாம், ஆனால் படங்களை வெறும் சுருக்கப்பட்ட விமர்சனம் , பாடல்களை தவிர்த்துவிட்டு படம் மட்டும் பார்த்தல் போன்ற வகைகளில் பார்ப்பதால் நேரம் உங்களுக்கு மிச்சம் ஆகலாம் ஆனால் சினிமா என்பது உங்களுக்காக ஒரு ஒரு காட்சியாக எடுக்கப்பட்டது என்றால் முழுமையாக பாருங்கள், ஒரு சில காட்சிகளை விட்டுவிட்டு படம் பார்த்துவிட்டு நானும் படம் பார்த்துவிட்டேன் என்று சொல்ல கூடாது, சில படங்கள் பார்க்க பார்க்க இண்டரெஸ்ட்டுடன் கதை சென்றுக்கொண்டு இருக்கும், இன்னும் சில படங்கள் போர் அடிக்கும் ஆனால் நான் சொன்ன நிபந்தனை நல்லதோ கெட்டதோ அந்த படத்தை முழுமையாக பார்க்க உங்களுக்கு நன்றாக இருக்கும், இது அவசரமான காலம், என்னால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பொறுக்க முடியாது என்ற வகையில் இருந்தால் கண்டிப்பாக மறுமுறை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிடுவார்கள், அடிப்படையில் நிறைய யுட்யூப் சேனல்கள் சுமாரான தூங்கவைக்கும் படங்களுக்கு கூட சுருக்கமான விவரிப்புகள் கொடுக்கின்றனர், சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்கலாம் இருந்தாலும் ரெகமண்ட் பண்ணக்கூடிய விஷயம் என்னவென்றால் அந்த படம் உங்களுக்கு சினிமா படமாக பார்த்தாலே நல்லது, சுருக்கமான விவரிப்பு பார்த்தவர்கள் அந்த படத்தை பார்க்காமல் பார்த்துவிட்டதாக சொல்லிக்கொண்டு இருக்க வேண்டாம், ஒரு படம் என்பது ஒரு பெரிய உழைப்பு அதனால் அந்த உழைப்பு காலத்துக்கும் நிற்க வேண்டும் என்றால் படத்தின் தயாரிப்பு குழுவுக்கு இலாபகரமான வகையில் ஒரு படத்தை பாருங்கள், கதையை புரிந்து கொள்ளுங்கள் , கதை சுருக்கம் கதையாக ஆகாது, கதை சுருக்கம் முழு நாவலாக ஆகாது, ஆகவே சுருக்கமாக படம் பார்ப்பதை ஒரு ஆப்ஷன் என கருதுங்கள், கிளைமாக்ஸ் வரை சுருக்கமாக படம் பார்த்துவிட்டால் அதன் பின்னால் முழுமையாக படம் பார்க்கவே மனதுக்குள் தோன்றாது, மனது அடுத்த கதை சுருக்கத்தை தேடி செல்ல ஆரம்பித்துவிடும், ஒரு படம் என்பதை அந்த படத்தின் ரன்னிங் லெந்த் மொத்தமாக செலவு செய்யும் வகையில் காலத்தை கொடுத்துதான் பார்க்க வேண்டும் வேறு வழி இல்லை. இது எல்லாமே நினைவுகளை ஹாண்டில் செய்யும் மூளையின் கெமிக்கல் இம்பேலன்ஸ் மட்டும்தான், ஆனால் சினிமா என்பது கதைகளை காட்சிகளாக ரசிப்பதற்காக தானே !

இணைப்பு : தி டைட்டன் [டிரெய்லர்]






Monday, June 12, 2023

CINEMATIC WORLD - 064 - BATMAN & BATMAN RETURNS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 00096]

  "புரூஸ் வெயின் தன்னுடைய பெற்றோர் இறப்புக்கு பின்னால் கையில் இருக்கும் மொத்த டெக்னாலஜியையும் மொத்த செல்வத்தையும் களம் இறக்கி பேட் மேன் என்ற அடையாளத்தை உருவாக்கி கிரிமினல்ஸ்களுடன் சண்டை போடுகிறார். இப்போது புதிதாக உருவான ஜோக்கர் என்ற ஜாக் நேப்பியர் இன்னு, ம் கொடிய குற்றங்களை செய்கிறார், இவரை தடுக்க என்ன செய்கிறார் என்பதை காமிக்ஸ்களின் இண்டரெஸ்ட் குறையாமல் இயக்குனர் காட்டியுள்ளார், இந்த படத்தின் அடுத்த பாகம் பேட் மேன் ரிடர்ன்ஸ் - மனது அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தன்னுடைய ஜிம்னாஸ்டிக் திறன்களை மொத்தமாக கொண்டு செலினா கைல் மற்றும் அதிக பலம் கொண்ட உருவ மாறுபாட்டுடன் பிறந்ததால் நிராகரிக்கப்பட்ட பெங்குவின் என்ற வில்லனின் செயல்களை பேட்மேன் தடுப்பதாக அமைகிறது, படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் கதையுடன் நேர்கோட்டில் நன்றாக பயணிப்பதால் படம் வேகமாக செல்கிறது, நடிப்பு அருமையாக உள்ளது, அந்த கால கட்டத்தில் வெளிவந்து இருந்தாலும் இந்த காலம் வரையில் சூப்பர் ஹீரோ கதைகளின் ஸ்டைல் மாறாமல் இன்னும் ஃபிரெஷ் ஆக இருக்கிறது இந்த இரண்டு படங்கள், மைக்கேல் கியாட்டான் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படங்களை கண்டிப்பாக பார்க்கவும். மைக்கேல் கியாட்டான் ரொம்ப கியூட்டான ஸ்மார்ட்டான பேட் மேன்னாக மனதை கவர்ந்து செல்கிறார் என்றால் அடுத்த படத்தில் செலினா கைல் கேரக்டர்ரில் நடிக்கும் ஏவாஜின் லில்லி நெக்ஸ்ட் லெவல்க்கு எடுத்து சென்று மேதட் ஆக்டிங்கில் வேற லெவல்லில் கொண்டுவது இருக்கிறார். " 

BATMAN 1989 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 

BATMAN RETURNS - 1991  - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! 

CINEMATIC WORLD - 063 - PERSUATION - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00095]

 

இந்த படம் 2022 இல் வெளிவந்தது - இந்த படம் 1917 இல் ஜேன் அகஸ்டின் எழுதிய பேர்சுவேஷன் என்ற நாவலை அடைப்படையாக கொண்ட ரொமான்டிக் திரைப்படம் ஆகும், ஒரு மாடர்ன் ரொமான்டிக் காமெடியாக அடாப்ஷன் செய்யப்பட்டு உள்ளது, இந்த படத்தின் கதை ஒரு காலத்தில் பேட்ரிக் என்ற கப்பல் மாலுமி இளைஞரை காதலிக்கும் கதாநாயகி ஆனே பெற்றவர்களால் பிரித்து வைக்கப்படுகிறார். இந்த காதலின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத பெட்ரிக் கடலில் மாலுமியாக நிறைய வருடங்களுக்கு சென்றுவிடுகிறார், மறுபடியும் திரும்ப இவர்கள் இருவரும் சந்திக்கும்போது விட்டுப்போன காதல் மறுமுறை எப்படி சேருகிறது என்பதே இந்த படத்தின் கதைக்களம், இந்த படத்தின் கதாப்பத்திரங்கள் , லொகேஷன்கள் மற்றும் இந்த கதையை ஆனேவே நேரஷன் செய்து ஆடியன்ஸ்க்கு சொல்லக்கூடிய விதம் எல்லாமே இந்த படத்தை தனியாக காட்டுகிறது,  இந்த படத்தில் லொகேஷன் ஷாட்ஸ் எல்லாம் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். எப்படித்தான் இந்த மாதிரி ரொம்ப அழகான லொகேஷன்ஸ் கிடைக்கிறதோ என்று யோசிக்கும் அளவுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும். ஒரு ரொமான்டிக் நாவல் உடைய மாடர்ன் டே அடாப்ஷன் என்பதால் திரையில் இருந்து ஆடியன்ஸ்ஸை பார்த்து பேசும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் எக்ஸ்பெரிமேன்டல்தான் ஆனால் ப்ரமோஷன்க்கு தேவைப்படுகிறது. நோட்டீஸ் பண்ணாம ஒரு ஃபிக்ஷன் வொர்க் போறதுக்கு நெகட்டிவ் க்ரிடிக்கிஸம் என்ற காரணத்துக்கவது அந்த ஃபிக்ஷன் வொர்க் நொட் பண்ணப்படுவது ரொம்ப நல்ல விஷயம் !!  இப்போது என்னுடைய கதைக்கு வருவோம் நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 062 - WEDDING SEASON - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00094]

   



 மைக்ரோ ஃபைனான்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என பல வருடங்களாக முயற்சி செய்துகொண்டு இருக்கும் ஆயிஷா , ஒரு கட்டத்தில் அவருடைய பெற்றோர்கள் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தவே அவர்களுக்கு தெரிந்த ரவி என்ற ஸ்டார்ட்அப் பிசினஸ் தொடங்க முயற்சி செய்யும் இளைஞரை சந்திக்கிறார் ஆஷா, பெற்றவர்களின் செயலால் உருவான இந்த இணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக எப்படி காதலாக மாறுகிறது, மேலும் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதை ஒரு சாதாரணமான ரொமான்ஸ் திரைப்படமாக சொல்லியிருக்கிறது இந்த நெட்பிலிக்ஸ் படைப்புக்கு ப்ரொடக்ஷன் வேல்யூ எப்போதும் போல பிளஸ் பாயிண்ட் ஆகவே அமைந்துள்ளது என்று சொல்லலாம். இந்த ரவி - ஆயிஷா கதை இந்திய காதல் கதைகளில் இருக்கும் வழக்கமான ரொமான்டிக் போர்ஷன்ஸ்தான் ஆனால் கிளைமாக்ஸ்ஸில் கதாநாயகியின் கனவுகளுக்கு கதாநாயகன் முயற்சி பண்ணும்பொது அதனை கூட புரிந்துகொள்ள முடியாமல் ஒரு சின்ன ஈகோ காட்டுவதும் பின்னாட்களில் கிளைமாக்ஸ்ஸில் சமாதானம் ஆவதும் நன்றாகத்தான் இருக்கிறது. இதுதான் லவ் ஸ்டோரி என்று ஒரு இளவரசனும் இளவரசியும் காதலித்து கல்யாணம் கட்டுவதை போல சொல்லாமல் உண்மையான வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட காதலில் எவ்வளவு முக்கியமானது என்று இந்த படத்தில் தெரிந்துகொள்ளலாம். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 061 - ONCE UPON A TIME IN HOLLYWOOD - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00093]



 


 இந்த படத்தை பார்ப்பதற்க்கு முன்னதாக இந்த படம் ஒரு உண்மையான வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பின் ரீ-இமாஜினேஷன் என்பதை ஆடியன்ஸ் புரிந்துகொள்ள வேண்டும், கதை என்னவென்றால் 1970 களில் பிரபலமான ஹாலிவுட் நடிகரான ரிக் டால்டேன் பட வாய்ப்புகள் அவருக்கு குறைவாகவே கிடைப்பதால் கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து கொடுக்கிறார்,  எங்கையும் கொஞ்சமும் பயப்படாத அவரது நண்பரும் ஸ்டண்ட் நபருமான கிளிப் பூத் அவருடனே சப்போர்ட்டாக இருக்கிறார், இவர்களுடைய வாழ்க்கையில் என்னதான் நடக்கிறது, என்பதை கொஞ்சம் 1970 ஸ் களின் நிஜவாழ்க்கை ஹாலிவுட் பிரபலங்களான ஷேரன் டேட் மற்றும் புரூஸ் லீ போன்ற கதாப்பாத்திரங்களுடன் கொஞ்சம் இணைத்து சொல்லப்பட்ட ஒரு ஸ்லைஸ் ஆஃப் லைப் கதைதான் இந்த ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட், படத்தின் காட்சிகள் மற்றும் நடிப்பு திறன் மேலும் அமெரிக்காவின் 1970 களின் நினைவுகளுடன் குயின்டின் டாரேன்டினோ ஒரு படத்தை கொடுத்துள்ளார், இவருடைய தனித்த பிலிம் மேக்கிங் ஸ்டைல் படத்தை தனித்து காட்டுகிறது. இங்கே சினிமாவை பொறுத்த வரைக்கும் மார்ட்டின் ரொம்பவுமே சீனியர். நீங்கள் THE COLOR OF MONEY போன்ற படங்களை பார்த்தால் எப்படி அந்த படத்தின் கதாப்பாத்திரங்களின் டிசைன் ரொம்பவுமே பிரமாதமாக இருக்கும் என்றும் எப்படி அந்த கதை நடக்கும் உலகத்துக்கே ஆடியன்ஸ்ஸை கொண்டுபோகும் அளவுக்கு அவ்வளவு ரியல்லீஸட்டிக்கான பிலிம் காமிரா வொர்க் மற்றும் லொகேஷன் செலெக்ஷன் இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். பயோகிராபி , ரீ- இமாஜினேஷன் - ஸ்லைஸ் ஆஃப் லைப் - ஃப்யுர் ஆர்கன்னைஸட் க்ரைம் மாதிரியான தீம்கள் இந்த படத்திலும் இருக்கிறது. ஒரு சினிமா என்பது காட்சிகளை கொண்டுள்ள ஒரு கதை புத்தகம் என்பதில் இந்த இயக்குனர் ரொம்பவுமே நம்பிக்கை வைத்து இருக்கிறார். இதுதான் பெஸ்ட்டான விஷயம் !! தி ஐரிஷ்மென் இன்னும் நல்லா இருக்கும். ஆனால் எனக்கு பிடித்தது இந்த படம்தான். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 060 - SONIC THE HEDGEHOG 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00092]



 


 ஒரு சூப்பர் ஹீரோ ஸ்டோரிக்கான எல்லா அம்சங்களும் நிறைந்த ரசிக்கும்படியான தரமான ஒரு ஃபிரான்சைஸ் படம்தான் இந்த சோனிக் தி ஹெட்ஜ்காக் 2 , இங்கே ஒரு பெரிய சண்டை - ஒரு பக்கம் இன்டர் டிமேனஸனல் போர்டல்லில் இருந்து வந்த சோனிக் மற்றும் அவருடைய குடும்பம், இன்னொரு பக்கம் சண்டை போட்டு பகையின் வஞ்சம் தீர்க்க தனித்து களம் இறங்கியிருக்கும் இன்னொரு இன்டர்டிமேன்ஷனல் போர்திறன் மிகுந்த க்னக்கில்ஸ் - KNUCKLES- இவருக்கு சப்போர்ட் பண்ணுவது யாரென்றால்  முதல் படத்தில் அடைத்து வைக்கப்பட்ட காளான்களின் டிமேன்ஷனில் இருந்து கஷ்டப்பட்டு பல வருடங்களுக்கு பின்னால் வெளியே வந்த மரண மாஸ் வில்லன் டாக்டர் ரோபோட்னிக் , ஃபேமிலியை காப்பாற்ற வேண்டும் என்று பயங்கர சக்திகளை கொண்டு பிளான் போட்டு களம் இறங்கும் சூப்பர் வில்லன்களாக இருக்கும் இவர்களை ஆரம்பத்தில்  தனியாக சமாளிக்க நினைக்கும் சோனிக்குக்கு புதிதாக சப்போர்ட் என்று ஒரு நண்பன் கிடைக்கிறார் அவர்தான் நம்ம டைல்ஸ். 

வீடியோ கேம் கதாப்பத்திரங்களின் பட்டாளமே களம் இறங்கியிருக்கும் சோனிக் தி ஹெட்ஜ்காக் 2 ஒரு சிறப்பான வீடியோ கேம் அடாப்ஷன் என்று சொல்லலாம். இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்.  இந்த படத்தை நீங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். இங்கே என்னதான் இருந்தாலும் சோனிக் ஒரு வீடியோகேம் ஹீரோ என்பதால் இந்த படத்தில் அவருடைய சூப்பர் ஸ்பீட் மட்டுமே அவருடைய சக்தியாக காட்டப்படவில்லை. நிஜத்தில் சோனிக் எவ்வளவுதான் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் உதவி என்று வரும்போது முதலில் வந்து உதவி பண்ணுகிறார். இங்கே அடிப்படையில் தனியாகவே வளர்ந்தாலும் குறைவான காலத்திலேயே மனிதர்களுடைய உலகத்தில் ஒரு நல்ல நண்பனாக மாறுகிறார். பேட்மேன் படங்களை எல்லாம் பார்த்து நானும் குற்றங்களை தடுக்கப்போகிறேன் என்று களத்தில் இறங்கி முயற்சி பண்ணும் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்ஸில் டாக்டர் ரோபோட்னிக்கை கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து தோற்கடிக்கும் காட்சி வரைக்கும் அடிப்படையில் சோனிக் அவர் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவே இல்லை. 

இந்த படம் உங்க வாழ்க்கைக்கு ஒரு நல்ல மெசேஜ். அப்புறம் ஜிம் கேரி. இந்த முறை டாக்டர் ரோபோட்னிக் கேரக்டர்க்கு மாஸ் காட்டி இருக்கிறார். ஐட்ரிஸ் எல்பாவின் KNUCKLES கதாப்பத்திரம் தரமான கெஸ்ட் ரோல். இந்த கதையில் சோனிக்குக்கு நேர் ஆப்போஸிட்டில் வந்து களத்தை விறுவிறுப்பாக மாற்றுகிறார். சப்போர்ட்க்கு இருக்கும் டெய்ல்ஸ் ஒரு நல்ல நண்பனாக சோனிக்குடன் கிளைமாக்ஸ் வரைக்கும் செல்கிறார். இந்த படத்தில் டேக்னிக்கலாக எக்ஸேலேண்ட்டான காட்சிகள் இருக்கிறது. கிளைமாக்ஸ் நிறைய திருப்பங்களுடனும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்போடும் முடிக்கப்பட்டு இருக்கிறது. நெக்ஸ்ட் பார்ட் எப்போதுதான் வரும் என்று சோனிக் ஃபேன்ஸ்ஸின் காத்திருப்போர் சங்கத்தில் நானும் கொள்கை பரப்பு செயலாளராக இணைந்து விடுகிறேன். அடுத்த படம் வந்ததும் சோனிக் நற்பணி மன்றம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லறீங்க ? மக்களே !!! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 059 - BLACK PANTHER & WAKANDA FOREVER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [[REGULATION 2024 - 00091]

இந்த படத்துடைய கதை கேப்டன் அமெரிக்கா  சிவில் வார் திரைப்படத்தின் சம்பவங்களை கடந்து நடக்கிறது. இந்த படம் வெளிவந்த சமயத்தில் ரொம்ப பெரிய HYPE என்னவென்றால் BLACK PEOPLE மட்டுமே வாழும் ஒரு பணக்கார நாடாக கலாச்சாரங்கள் கொண்டாடப்படும் ஒரு கனவு உலகமாக இருக்கும் WAKANDA - இந்த நாடு நிறைய அதீத சக்திகளை உடைஉய பாதுகாப்பு தொழில் நுட்பத்தில் கருவிகளையும் சாதனங்களையும் உருவாக்கம் பண்ணுவதில் மிகச்சிறந்த நாடாக இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வெளி உலகத்துக்கே தெரியாமல் மறைக்கப்படும் நாடாக இருக்கிறது. இப்படி ஒரு நாட்டின் பெரிய அரசராக கிங் டி-சல்லா - சாட்விக் போஸ்மேன் இருக்கிறார் இவருடைய இந்த WAKANDA நாட்டில் கிடைக்கும் வைப்ரேனியம் உலோகம் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு உறுதியான உலோகம் என்பதாலும் மேலும் பயங்கரமான ஆயுதங்களாக எளிதில் மாற்றப்படும் அளவுக்கு மிகவும் பயனுள்ள உலோகம் என்பதாலும் கண்டிப்பாக பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பொருள். இப்போதுதான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. இங்கே உலக அளவில் ஆயுதங்களை உருவாக்க இந்த உலோகத்தை கொள்ளையடித்தே ஆகவேண்டும் என்று போராடும் ஸ்ட்ரைக்கர் என்ற வில்லனை தடுக்கும் முயற்சியில் WAKANDA செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. 


இங்கே அரசரின் தூரத்து சகோதரரும் இன்டர்நேஷனல் குற்றங்களுக்காக தேடப்படும் மிகவும் சக்தவாய்ந்த மனிதரும் ஆன கில்மாஞ்சர் நடப்பு நிகழ்வுகளை சாதகமாக பயன்படுத்தி நேரடியாக சவால் விட்டு அவரோடு நேர்மையாக சண்டைபோட்டு அரசரை கொலை பண்ணிவிட்டு  வாகாண்டாவின் புதிய அரசராக மாறுகிறார் , இந்த சண்டையில் பலத்த காயங்களுடன் மிகவும் அரிதாக உயிர்பிழைத்தது மக்களை காப்பாற்ற  மறுபடியும் உயிரோடு வரும் கதாநாயகர் பிளாக் பாந்தர் எப்படி அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதைக்களம். இந்த படம் 2017 ஆம் ஆண்டு மார்வெல் நிறுவன சினிமா பிரபஞ்சத்தின் திரைப்படமாக அமைந்துள்ளது. நிதானமான கதை அமைப்பு மற்றும் காட்சியமைப்பு. கதையில் நேர் எதிராக வரும் இரு கதாபாத்திரங்களாக இருக்கும் பிளாக் பாந்தெர் மற்றும் கில்மொஞ்சேர் கதை முழுவதும் இரு தனித்தனி துருவங்களாக செயல்படும் விதம் புதுமையாக இருக்கும் காட்சிகளின் அமைப்புக்கு ஒரு நிதானமாக செல்லும் வரையறையை கொடுக்கிறது எனலாம்.  இந்த படத்துடைய கதைக்களத்தில் இருக்கும் கலாச்சார அமைப்புகள் மற்றும் தொழில் நுட்ப மேம்பாடுகள் மார்வெல் திரைப்படங்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் அளவுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து இருக்கிறது எனலாம். வகாண்டா ஃபார்ரேவர் பொறுத்தவரைக்கும் ரொம்ப கஷ்டமான விஷயம் என்னவென்றால் மோஸ்ட் பிலோவேட் கதாப்பாத்திரத்துக்கு ஸெண்ட் ஆஃப் கொடுப்பதுதான். இந்த விஷயத்தை உண்மையில் மிகப்பிரமாதமாக பண்ணி இருப்பார்கள். 


ONE LINE REVIEW : "IN THE LOVING MEMORY OF ACTOR CHADWICK BOSEMAN"


 


இந்த படத்தில் பிளாக் பாந்தர் பிளாக் பாந்தர் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சாட்விக் போஸ்மேன் அவர்கள் நிஜமான வாழ்க்கையில் இப்போது நம்மிடையே இல்லை என்பதால் படத்திலும் பிளாக் பாந்தர் கொடிய நோயின் பாதிப்பால் இறந்துவிட்டார் என்று காட்டப்பட்டுள்ளது,  இப்போது வகாண்டா நாடு உச்சகட்ட பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் உலகம் முழுவதும் வைப்ரேனியத்துக்கானா தேவை அதிகமாக இருக்கும் பிரச்சனைகளும் இருக்கும்போது புதிதாக உள்ளே நுழையும் கடல்வாழ் மக்களின் தலைவன் நேமர் தி சப்மேரைனர் பல காலமாக தரையில் இருக்கும் மக்களை தாக்க திட்டமிடுகிறார், பிளாக் பாந்தர் / டி செல்லாவின் தங்கை அவரின் முயற்சிகளை தடுக்கவும் நேமர் வகாண்டாவின் பகுதிகளை கொடிய அளவில் தாக்குகிறார், புதிதாக பிளாக் பாந்தர் ஆக மாறும் ஷ்யுரி அவருடைய உடனடி அவசர படையுடன் நேமரின் திறன்மிக்க படைகளுடன் மோதுவதுதான் படத்தின் மீதி கதையாக உள்ளது, இந்த படம் நன்றாக உள்ளது, சாட்விக் போஸ்மேன் கதாப்பத்திரத்தின் கலாச்சார முக்கியத்துவம் கொண்டு வேறு நடிகரை மாற்றாமல் கதையை மட்டுமே அடிப்படையாக கொண்டு படம் எடுத்தது ஒரு நல்ல விஷயம் எனலாம். படத்தில் கடைசி காட்சியில் சொல்லப்பட்ட விஷயங்களின்படி பிளாக் பாந்தரின் மகன் இனிமேல் அடுத்த பிளாக் பாந்தராக இருக்க போகிறார் என்பதால் மார்வேல் படங்களுக்கு ஒரு முடிவே இல்லையா ? என்ற எண்ணம் உருவாகிறது. நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 


Saturday, June 10, 2023

CINEMATIC WORLD - 058 - DUNGEONS AND DRAGONS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION 2024 - 00090]




DUNGEONS AND DRAGONS இந்த படத்துடைய கதை , தன்னுடைய மகளை சந்திக்க வேண்டும் என்பதால் சிறையில் இருந்து தப்பித்து செல்லும் கதாநாயகர் இந்த உலகம் கொடிய மந்திரவாதிகளின் கையில் மாட்டிக்கொள்ள செய்யப்பட்ட சதிதிட்டத்தை முறியடிப்பதே படத்தின் ஒருவரிக்கதை, இந்த படத்தில் கதை மிக அருமையாக சொல்லப்பட்டது உள்ளது. சமீப காலங்களில் வெளிவந்த ஃபேண்டஸி படங்கள் மற்றும் வெப் சீரிஸ் எல்லாமே கடினமான கேம் ஆஃப் தேரோன்ஸ் ஃபார்முலாவை பயன்படுத்த நினைக்கும்போது இந்த படம் ஒரு நல்ல ஃபேமிலியுடன் பார்க்கக்கூடிய ஒரு படமாக இருக்கிறது, இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம், இந்த படத்துக்காக செலவு பண்ணிய ப்ரொடக்ஷன் வேல்யூ கண்டிப்பாக நன்றாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆர்ட்வொர்க்ஸ் எல்லாமே படம் நடக்கும் உலகத்துக்கே நம்மை கொண்டுபோய்விடும் என்ற அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது என்றால் ப்ரொடக்ஷன் வேல்யூ நன்றாக இருப்பதால் கிரியேட் ஆகியிருக்கும் பிசிறு இல்லாத நேர்த்தியான CGI இந்த படத்துக்கு இன்னொரு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - THIS LOWBUDGET FLICK NEEDS ATTENTION. - திரை விமர்சனம் ! [REGULATION 2024 - 00089]

 



CORRECTIVE MEASURES  - இந்த படத்துடைய கதை, உலகத்தில் நடந்த ஒரு பேரழிவை தொடர்ந்து நிறைய பேருக்கு ரேடியேஷன் காரணமாக செல்கள் மியூடெஷன் அடைந்தது சூப்பர் பவர்கள் கிடைக்கிறது, ஆனால் அரசாங்கத்தால் சக்திகள் கட்டுப்படுத்தப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர், இவர்களால் வெளியே செல்ல முடியுமா ? வெளியே செல்ல இவர்களின் திட்டம் என்ன என்பதுதான் ஒரு வரிக்கதை , குறைவான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். இந்த படத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், கிளைமாக்ஸ் காட்சி பிரமாதம். ஒரு வரி கதையை கூட ஒரு நல்ல படமாக மாற்ற முடியும் என்ற கருத்துக்கு இந்த படம் ஒரு நல்ல எக்ஸாம்பிள். ஒரு பட்ஜெட் படமாக சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை எடுத்தால் என்னென்ன குறைகள் இருக்குமோ இந்த படத்திலும் அதே குறைகள் இருக்கதான் செய்கிறது. இருந்தாலும் கதைக்கு கொடுத்த டேடிகேஷன் படத்துக்கு நல்ல சப்போர்ட்டாக இருக்கிறது. 


Thursday, June 8, 2023

GENERAL TALKS - யோசிக்க வேண்டிய விஷயம்பா !! - [REGULATION 2024 - 00088]

 

"இந்த கதை ஒரு சுவாரஸ்யமான கதை , ஒரு ஆராய்ச்சி கூடத்தில் ஒரு மிகப்பெரிய கூண்டுக்குள் ஐந்து குரங்குகள் வளர்க்கப்பட்டது, அந்த ஐந்து குரங்குகளில் ஒரு குரங்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எப்போது அந்த குரங்கு கூண்டின் மேல் கம்பிகளை பிடித்து ஏறி வந்தாலும் அந்த குரங்குக்கு பரிசாக சுவையான பழங்கள் கொடுக்கப்பட்டது, ஆனால் மற்ற நான்கு குரங்குகள் கூண்டின் மேலே வந்தால் எந்த பழங்களும் கொடுக்கப்படுவதே இல்லை !, மற்ற குரங்குகள் அந்த குரங்கை பார்த்து பொறாமைப்பட்டன. அதனால் அந்த குரங்கு எப்போது கூண்டின் கம்பிகளை தொட்டு மேலே செல்ல முயற்சி செய்தாலும் மற்ற குரங்குகள் அந்த தேர்ந்தேடுக்கப்பட்ட குரங்கை சண்டை போட்டு அடித்து தாக்கின. இதனால் பயந்து போன அந்த குரங்கு கூண்டின் கம்பியை தொடுவதையே விட்டுவிட்டது, சுவையான பழங்கள் அந்த குரங்குக்கு அதன் பின்னால் கிடைக்கவே இல்லை. இந்த சம்பவங்களுக்கு பின்னால் கூண்டின் கம்பிகளை தொட்டாலே போதும் மற்ற குரங்குகள் சேர்ந்து அந்த குரங்கை அடிக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் கதை இங்கே முடியவில்லை, காலப்போக்கில் எந்த குரங்கு கூண்டின் கம்பிகளை தொட்டாலும் மற்ற குரங்குகள் சேர்ந்து அந்த குரங்கை தாக்க ஆரம்பித்தன. இது இந்த குரங்குகளுக்கு ஒரு கலாச்சார நிபந்தனையாக மாறிவிட்டது, இன்னும் புதிதாக ஐந்து குரங்குகள் அந்த கூண்டுக்குள் விடப்பட்டது. ஆனால் அவைகள் எல்லாம் இந்த செயல்முறையை பார்த்து கூண்டின் கம்பிகளை பிடித்து மேலே செல்ல முயற்சித்தாலே அதுவே பெரிய தவறு என்று கற்றுக்கொண்டு முடிவு செய்து விட்டன ! அவைகளும் மற்ற குரங்குகளை போலவே கூண்டின் கம்பியை தொட்டால் கொலை குற்றம் செய்ததை போல தாக்க ஆரம்பித்து விட்டன,  இதுபோலதான் வாழ்க்கையும் , வாழ்க்கையில் யாராவது முன்னேற நினைத்தாலே போதும் அவர்கள்  என்னமோ ஒரு மிகப்பெரிய தவறை செய்தது போல மற்ற எல்லோரும் சேர்ந்து தண்டனைகளை கொடுக்க பார்க்கிறார்கள், இவர்கள் தானும் முன்னேற மாட்டார்கள் அடுத்தவர்களையும் முன்னேற விட மாட்டார்கள், இங்கே குரங்குகளின் பொறாமை கூண்டுக்கு மேலே வருவது என்பதே ஒரு கொடிய குற்றம் என்றும்  , எப்போதும் தரையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றும் , மேலே போகவே கூடாது என்றும் தேவையற்ற கட்டுப்பாடுகளை உருவாக்கியதை போல மனிதர்களும் யாராவது முன்னேறுவதை பார்த்தால் அவர்களை கேலி செய்யவும் தாக்கவும் ஆரம்பித்து விடுகிறோம், பரவைக்கு கால்கள் இருக்கலாம், கடைசி வரையில் பறக்காமல் தரையில் இருந்து கிடைக்கும் தீனிகளை கொண்டே அந்த பறவை உயிர் வாழ்ந்து விடலாம் , ஆனால் இறக்கைகள் இருப்பது பறந்து வானம் செல்லத்தானே ? அவைகளை தரையில் மட்டுமே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் சரியான செயல் ?" - இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் இணைப்பில் இருக்கும் சிறப்பு நெட்பிலிக்ஸ் நகைச்சுவை காணொளியை பார்க்கவும். TAMILNSA.BLOGSPOT.COM - NICE TAMIL BLOG  - SIMPLE TALKS - TAG : TAMIL DEMOTIVATIONAL STORY XD.

Wednesday, June 7, 2023

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - WAR DOGS - FOR REAL ! IS THIS EVEN REALLY HAPPENED ? - [REGULATION 2024 - 00086]



WAR DOGS

வார் டாக்ஸ் - இந்த படத்துடைய கதை -  தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற படிப்பு முடிந்ததும் மொத்த பணத்தையும் செலவு செய்து சாஃப்ட் போர்வைகள் விற்பனை செய்யும் நம்ம கதாநாயகன்  , இவருடைய வாழ்க்கையில்  போர் ஆயுதங்களை வாங்கல் விற்றல் செய்து அதிக லாபம் பார்க்கும் ஒரு நண்பன் வந்தால் என்ன நடக்கும் ?  கொஞ்சம் உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட கதையாக இருந்தாலும்  இருவரின் நடிப்பு மிரட்டல் செய்கிறது , "இந்த இடம்  பேசிக்கலி காமிக் கான் தான், ஆனால் ஆயுதங்களுக்கு !" என்று சொல்லும் காட்சிகள் வேறு லெவல், அல்பேனியாவில் வியாபாரம் பேசும் காட்சிகளாக இருக்கட்டும் , டிராயான்கிள் ஆஃப் டெத் என்ற இடத்தை கடந்து வரும் காட்சிகளாக இருக்கட்டும் , ஸ்கிரீன்பிளே படுவேகமாக பிரகாசிக்கிறது, இவர்களின் சுமாரான கம்பெனிக்கு ஒரு முன்னூறு மில்லியன்கள் ஆர்டர் கிடைத்த அடுத்த ஒரு மாதங்களில் இந்த இரண்டு நண்பர்கள் பண்ணக்கூடிய ரிஸ்க் ஆன வேலைகள் எல்லாம் க்ரைம் காட்சிகளுக்கு ஒரு புதிய பரிமாணம். இவ்வளவு நல்ல திரைக்கத்தையை படத்தின் காட்சிப்படுத்துதல் என்றால் ஒரு முறை கூட சொதப்பாமல் நூறு சதம் சரியாக செய்துள்ளது, மொத்தத்தில் மிக பிரமாதமான படம் எனலாம், இந்த படத்தை தனியாக பார்க்கலாம். ஆனால் 2008 களில் உண்மையாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது கொஞ்சம் அதிசயம்தான். இந்த படம் கிளைமாக்ஸ்ல கெத்து காமிச்ச படம். இந்த மாதிரி படங்கள் ஹாலிவுட் சினிமாவில் கிடைப்பது ரேர்ரான விஷயம். 

CINEMATIC WORLD - 057 - THE MITCHELLES VS THE MACHINES - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - [REGULATION 2024 - 00085]

 


ஒரு சராசரி குடும்பமாக புறநகர் பகுதியில் வாழும் மிட்செல் குடும்பத்தினர் இந்த உலகத்தையே கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட ஒரு மிகப்பெரிய ரோபோட்களின் படையையே எதிர்க்கவேண்டிய நிலையில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மிக நகைச்சுவையாக சொல்லியுள்ளது இந்த படத்தின் கதை, படத்தின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரையில் நிறைய விஷயங்கள் நகைச்சுவையுடன் பின்னப்பட்டு சொல்லப்பட்டுள்ளது, படம் முழுவதும் அட்வென்சர்க்கு பஞ்சமே இல்லை, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக சில படங்களை சொல்லிக்கொள்ளும் நம்ம ஊரு பிளாக் பஸ்டர் பிரியர்கள் படங்கள் கொஞ்சம் இந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்வது நல்லது, காட்சிகள் , வசனங்கள் , படத்தொகுப்பு என அனைத்தையும் மிக சரியாகவே செய்துள்ளது இந்த அனிமேஷன் காமெடி திரைப்படம், ஒரு படம் இன்னொரு முறை பார்க்கும்போதும் விறுவிறுப்பாக ஸ்வரஸ்யமாக இருக்குமா இல்லையா என்பதை உங்களுடைய ரசனை முடிவு செய்யும் என்றால் மிட்செல்ஸ் வி. மெஷின்ஸ் அனிமேஷன் சினிமா பிரியர்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல படைப்புதான். இந்த படத்தை பார்த்தவர்களுக்கு நிஜமாகவே ஒரு ஃபேமிலியின் வேல்யூக்கள் கண்டிப்பாக புரியும், இதை யாரோ ஒருவர் குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கும்தான் , நமக்கு என்று இருப்பது ஒரு குடும்பம்தான் என்று சுமாரான வசனங்களில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று புரியவரும். சோனி அனிமேஷன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் அனிமேஷன் பட வரலாற்றில் மிகச்சிறந்த கிரேயடிவ் ஆன திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படம் பெர்ஸனலா எனக்கு ரொம்ப பிடிச்ச படம் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் !! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...