Sunday, August 26, 2018

SUPERHERO MOVIES - TAMIL - EXPLAINED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00011]

உங்களுக்கு மார்வால் vs டி ஸி பற்றி தெரியுமா ? இந்த இரண்டு நிறுவனங்களின் வரைகலை புத்தகங்களின் கத்தப்பத்திரங்கள்தான் இப்போது சூப்பர் ஹீரோ திரைப்படங்களாக ஸ்பைடர் மேன் , அவெஞ்சர்ஸ், எக்ஸ் மென் கதாப்பத்திரங்கள் MARVEL நிறுவனத்தின் காமிக் புத்தகங்களை அடிப்படையாக கொண்டது, பேட் மேன் , சூப்பர் மேன் , ஜஸ்டிஸ் லீக் , சூசைட் ஸ்குவாட், பிளாஷ் கதாப்பாத்திரங்கள் டி ஸி வரைகலை புத்தகங்களின் அடிப்படையாக கொண்டது. 2000 களுக்கு முன்னால் சூப்பர் மற்றும் பேட் மேன் திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றன, அப்போது எல்லாம் MARVEL கத்தப்பத்திரங்கள் அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் என்றால் BLADE திரைப்படங்கள் மட்டும்தான் இருந்தது. இங்கதான் ஜூராசிக் பார்க் திரைப்படங்கள் உருவாக காரணமான ஒரு மாயாஜாலாமான தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தது. விசுவல் எஃபக்ட்ஸ் மற்றும் சி ஜி ஐ அனிமேஷன். 2000 முதல் 2007 வரை ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் வெளி வந்து வசூல் சாதனை படைத்தது. எக்ஸ் மென் திரைப்படங்களின் தொடக்கமும் இந்த கால கட்டத்தில்தான் ஆரம்பம் ஆனது. ஆனால் கிறிஸ்டோபர் நோலான் அவர்களின் தி டார்க் நைட் TRIOLOGY பேட் மேன் கதாப்பத்திரத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையே கொடுத்தது எனலாம். சூப்பர் ஹீரோ படங்களுக்கே ஒரு கௌரவத்தை கொடுத்த படம் THE DARK KNIGHT - இப்போது MARVEL -ஐ பார்க்கலாம், ஒரு சிறந்த திரைப்பட வரிசையை உருவாக்க முயற்சி செய்த MARVEL நிறைய கடினமான பொருளாதார தடைகளை கடந்து IRON MAN , CAPTAIN AMERICA , THOR , மற்றும் THE AVENGERS திரைப்படங்களை வெளியிட்டது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் வசூல் சாதனை நிறைய நம்பிக்கையை கொடுத்தது. ஃபாக்ஸ் நிறுவம் எக்ஸ் மென் திரைப்படங்கள் வசூல் சாதனைகள் உருவாக்கும்போது DEADPOOL போல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளிவந்தன. ஜாக் சனைடர் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் மென் திரைப்படமான மேன் ஆஃப் ஸ்டீல் - டி ஸி உலகத்தின் திரைப்படங்களின் வரிசையை உருவாக்கியது. டி ஸி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் அனிமேஷன் திரைப்படங்களும் நன்றாக இருக்கும். MARVEL க்கும் அனிமேஷன் தொடர்கள் இருக்கிறது. கடைசியாக வெளிவந்த ஜாக் சனைடர் ஜஸ்டிஸ் லீக் , ஷசாம் திரைப்படங்கள் DC க்கும் வெற்றிகளை கொடுத்துள்ளது. அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் கதைக்களம் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்டு கேம் திரைப்படங்களில் ஸ்டோரி ஆர்க் நிறைவு செய்து இன்னமும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சோனியின் ஸ்பைடர் மேன் வரைகலை புத்தக கதாப்பத்திரங்களின் அடிப்படையில் வெனம் போன்ற திரைப்படங்களின் வெற்றிகளையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். வருங்காலத்தில் நிறைய தரமான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் எதிர்பார்க்கலாம். இப்போது எல்லாம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யுரியஸ் திரைப்படங்கள் கூட லார்ஜர் தென் லைஃப் என்ற லெவல்க்கு சென்றுவிட்டது. 



2 comments:

Anonymous said...

ஒரு படம் புடிக்குது புடிக்கல.. அவ்வளவுதான். இதுல வாதத்துக்கெல்லாம் இடமே இல்ல. ஆனா, இந்திய திரைப்பட ரசிகர்கள், குறிப்பாக தென்னிந்திய ரசிகர்கள் திரைப்படங்களை வேறுவிதமாக பார்ப்பதும் இந்தக் கருத்துகளுக்கு காரணியாகி விடுகிறது.எந்தக் கருத்துமே எல்லாரையும் உள்ளடக்காது. விதிவிலக்குகள் உண்டு. அதனால் நான் அப்படியில்லன்னு சொல்லிக்கிட்டு வரவேண்டாம். இது பெரும்பான்மையை மட்டுமே குறிக்கிறது. நடிகனையும், கதாபாத்திரத்தையும் பிரித்துப் பார்க்கிற மனப்பான்மை இல்லாமைதான் அந்த இயல்பு. பலர் இந்தப் படத்தில் த்ரிஷா கதாபாத்திரம் தேவையற்றது. கமல் தன் மனைவியை ஒருபுறமும் த்ரிஷாவை ஒருபுறமும் வைத்துக்கொள்வது கலாச்சரக் கேடு என்றெல்லாம் விமர்சிக்கும்போது இது நிரூபணமாகிறது. கதாநாயகன் நல்லவனும், இலக்கணப் புருஷனுமாய் இருக்கிற படங்களைப் பார்த்தே பழக்கப்பட்டு, கமல்ஹாசன் இப்படி செய்திருக்கக் கூடாது என்று சொல்லும்போது அவர்கள் படங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது.

Anonymous said...

இந்தப் பார்வை சரி தவறு என்பதல்ல. திரைப்படம் என்னும் கலையை முழுமையாக சுவைக்கமுடியாமல் போய்விடுகிறது இவர்களுக்கு. உலகம் முழுவதிலும். பொதுவாக COMMERCIAL FILM என்றழைக்கப்படுகிற பொழுதுபோக்குப் படங்கள் ஊருக்கு உழைப்பவனையும், இந்த உலகத்தை தன் சாகசத்தால் காப்பாற்றுகிறவனையும், பொதுநலனுக்காகப் போராடுகிறவனையும் நாயகனாகக் கொண்டிருக்கும். அந்த நாயக நடிகரை நிஜவாழ்வு நல்லவனாகவே நம்பிவிடுகிற குழந்தை மனதுக்கு நம்மைக் கொண்டுபோய் விடும். இன்னொருவகைப் படம் தப்பானவனையும், தவறானவனையும் நாயகனாகக் கொண்டிருக்கும். இவ்வகைப் படங்கள் அவ்வப்பொழுது வருவதுண்டு. அடிப்படைக் கல்விபெற்று, உயர்கல்வி பெற்று, உழைத்து, சமூகத்தோடு ஒன்றிவாழ்பவரின் உலகம்.
படிப்பறிவின்றி, முரட்டுத்தனமாக வாழ்ந்து, எப்படியும் சம்பாதிக்கலாம், என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று சுயநலமாக வாழ்பவரின் உலகம். சக்திவேல் ஒரு தவறான ஆள். கீழுலகத்தைச் சேர்ந்தவன். அவனைச் சுற்றியிருக்கும் அனைவரும் வாழ்வதற்கு தவறானப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர். மனித உயிர்களின் மாண்பு தெரியாத கூட்டம். தங்கள் பிழைப்புக்காக யாரையும் கொல்லத் தயங்காதவர். சமூகத்தின் அழுக்குப் பணம் மட்டுமே அவர்கள் வாழ்வாதாரம். அந்த சக்திவேலிடம் ஒழுக்கத்தையும் நன்னடத்தையும் எதிர்பார்க்கிற பரிதாபத்திற்குரிய தமிழ் திரைப்பட ரசிகனை எப்படிப் பண்படுத்துவது?

திரைப்படங்களைப் பொழுதுபோக்காகப் பார்ப்பவருக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. நடிகர்களை அளவுக்கதிகமாக ரசிப்பவர்களுக்கு இந்த மயக்கம் வருவதைத் தவிர்க்க இயலாது.

பெரியர்களுக்கு இந்த மனமுதிர்ச்சி வந்திருக்கும் என்பதால்தான் சிறியவர் பெரியவர்களின் ஆலோசனையுடன் இத்தகையப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று சென்சார் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்கள் தவறானவர்கள் என்று முதலிலேயே சொல்லிவிட்டால் இளம் மனங்களுக்கு அந்தத் தெளிவு வந்துவிடும்.
ஆனால், இயக்குநரின் ஒரு தவறு 'விண்வெளி நாயகா' பாடல்தான்.
சக்திவேல் சமூகவிரோதி. அவனை எப்படி இப்படி ஒரு பாடல் வைத்துக் கொண்டாடலாம்? அவன் ஒன்றும் சீர்திருத்தவாதி இல்லையே. சுயநலக்காரன்தானே!

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...