திங்கள், 12 மே, 2025

GENERAL TALKS - இந்த உலகத்தில் கடினமான விஷயம் !


காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போதுமே மனிதர்களை விட அதிகமான சக்திகள் இருக்கிறது. இந்த உலகத்தில் நாமும் எவ்வளவோ நேர்மையாக கஷ்டப்படுகிறோம். இருந்தாலும் கஷ்டப்படாத மக்களுக்கே எல்லாமே கிடைக்கிறது. 

இந்த உலகத்தில் நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்கள் அது எல்லாமே காலாகாலமாக சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்ட சுத்தமான கேப்பிட்டலிஸம் நிறைந்த பொய், முதலாளிகள் தங்களின் தொழிலாளிகள் அனைவரும் சுதந்திரமற்ற அறியாமை நிறைந்த  சிதறும் ரொட்டி துண்டுகளை சாப்பிடும் அப்பாவி தாவர உண்ணிகளாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். 

இங்கே பாவம் புண்ணியம் பார்க்காமல் வேலை பார்ப்பவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். மற்றவர்கள் இருப்பவை அனைத்துமே இழந்து நடுத்தெருவில் பிச்சைதான் எடுக்கிறார்கள். வாழ்க்கை வேகமாக நகர்கிறது. நான் கண்கூடாக பார்க்கிறேன், தனி மனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு எல்லாம் விவேகானந்தர் காலத்தோடு போய்விட்டது.

தனக்கு கஷ்டம் என்று வந்தால் கஷ்டப்படுத்தியவர்களை எதிர்த்து நின்று அடிக்க வேண்டும். நாம் பாவம் பாவம் வலிக்கும் என்று விட்டுவிட்டு சென்றால் ஒரு நாளுக்கு நம்மை கஷ்டப்படுத்தியவர்களுக்கு சாதகமாக வாழ்க்கை மாறும்போது கடவுள் அவர்களுக்கு தேவ பலத்தை கொடுத்து நம்முடைய உடல் பாகங்களை அவர்கள் வெட்டுவதை சிரித்துக்கொண்டு ஸ்வீட் சாப்பிட்டு பார்த்துக்கொண்டு இருப்பார். 

இத்தனைக்கும் நாம் கடவுளுக்கும் சரி நம்மை கஷ்டப்படுத்திய அந்த மனிதர்களுக்குமே சரி நாம் ஒரு சின்ன கஷ்டம் கூட கொடுத்து இருக்க மாட்டோம். இன்னொருவர் கதறல் , அழுகை , இயலமையை சந்தோஷமாக பார்க்கும் இந்த ஜீவன்கள் இருந்தால் என்ன செத்து உடல் அழிந்தால் என்ன ? மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. பழிவாங்கியவர்களுக்கே வெற்றி சொந்தமானது ! 






கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...