1. Titanic#1997@Epic$Love
2. Avatar&Pandora@SciFi#09
3. Incepti0n!Dream@Mind%10
4. Gladiator#Russell!2000@
5. Interstellar@Space#2014!
6. Jurassic*Park1993@Dino#
7. TheDarkKnight&Hero@08!
8. Matrix1999!Neo@Cyber%#
9. FightClub@Soap#99&Power
10. PulpFiction#Story@1994$
11. Shawshank@Freedom#1994!
12. Godfather&Classic@1972@
13. StarWars@Empire#1977&!
14. ForrestGump@Life#1994%
15. TheLionKing@Disney#94!
16. SavingPvtRyan@War#1998&
17. TheShining&Horror@80!#
18. Back2TheFuture@85#Cool!
19. TheAvengers@Marvel#2012@
20. Deadpool@Humor#2016&Fun!
21. HarryPotter@Magic#2001*
22. IronMan@Genius#2008&Tech
23. SpiderMan@Web#2002!Hero
24. Joker@Madness#2019&Twist
25. ToyStory@Pixar#1995!Fun
26. GuardiansGalaxy@SciFi#14@
27. JohnWick@Action#2014&Cool!
28. FastAndFurious@Speed#01@
29. TheTerminator@80s#1984!
30. Alien@SpaceThriller#1979&
31. ThePrestige@Magic#2006&!
32. BlackPanther@Power#2018$
33. FindingNemo@Ocean#2003&
34. Frozen@DisneyMagic#2013!
35. KingKong@Monster#1933&!
36. MadMax@FuryRoad#2015&
37. PiratesCaribbean@2003!Sea
38. DoctorStrange@Marvel#2016&
39. TheHungerGames@2012#Fight!
40. Rocky@Champion#1976&Boxing!
மேலும் AI மூலமாக இதுபோன்ற பாஸ்வேர்ட்களையும் உருவாக்கலாம் !
2 comments:
ஒரு அப்ளிக்கேஷன் ஐடியா இருக்கிறது. ஃப்ளோட்டிங் சாட் ஆப் ! மொபைல்க்கும் கம்ப்யூட்டருக்கும் ஒரு இணைப்பை உருவாக்க இந்த அப்ளிக்கேஷன் மிகவுமே பயனுள்ளதாக இருக்கும். இந்த APP - ஒரு பிரமாதமான வணிக யோசனையாக அமையலாம்.
முத்தமழை பஞ்சாயத்தை நாம் விட்டால் கூட நம்மை அது விடாது போலிருக்கிறது. மணி சார் வீடியோ விட்டதில் இருந்து பலரும் தீயின் குரல் த்ரிஷாவிற்கு பொருந்தவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வாட்சப்பில் வேறு வந்து வம்பிழுக்கிறார்கள். அதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு ஒன்றுமில்லை..
முதலில் தீ வெர்சனும் சின்மயி வெர்சனும் ஒரே நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதில்லை. தீ வெர்சன் நாம் தனியாக அமர்ந்து கூட உருகிக் கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட ஒன்று.
சின்மயி பாடியது லைவாக பல நூறு பேரை எண்டெர்டெய்ன் பண்ணுவதற்காக செய்யப்பட்ட ஒன்று.
இருவேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதால்தான் தீ வெர்சன் ஒரே சீரில் சென்று கொண்டிருக்க, சின்மயியின் வெர்சன் ஏற்ற இறக்கங்களோடு போய்க் கொண்டிருக்கும். இருவேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதாலேயே இருவேறு விசயங்களை நாடுபவர்களுக்கு இவை பிடித்தமானவையாக மாறிவிட்டன.
இந்த புரிதலோடுதான் இரண்டு பாடல்களையும் அணுகுகிறேன்.. ஆனால் இரண்டையும் ஒரே தராசில் வைக்கும் போது எனக்கு தீ பக்கமே முள் அதிகம் சாய்கிறது..
ஆரம்பத்தில் இருந்து அடியேன் சொல்வது , தீ வெர்சனில் ஒருவித ஆன்மீகத்தன்மை இருக்கிறது. ஆன்மாவின் மேல் நம்பிக்கையற்றவராக இருப்பவரின் ஆன்மாவைக் கூட தொட்டுத் தூண்டும் இடத்தில் இருந்து சூஃபிதன்மையில் ஒலிக்கிறது.
சின்மயி பாடல் ஒரு கொண்டாட்டமானது. அதில் ஆட்டமும் துள்ளலுமே மேலோங்கி இருக்கிறது.
இரண்டு விஷயங்களை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஏற்கனவே சொன்னதுதான்..
“காலைக் கனவினில் காதல் கொண்டேன் கண்விழித்தேன் அவன் காணவில்லை ”
என்கிற இடத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால் சின்மயி வெர்சனில் ஒரு “ஹ” போட்டிருப்பார்.
கிறக்கத்தை தூவிவிட்டு அந்த வரிகளை பாடும் போது என்னால் அதோடு ஒன்றமுடியவில்லை.
இதுதவிர திருவாளர் ரஹ்மான் பாடல்களில் ஒரு சுழல்தன்மை இருக்கும் . இசையிலேயே அவர் அதை செய்திருக்கும் போதும் அந்த இடத்தில் வரிகள் முட்டி மோதி சுழலும் போது நம்மை அப்படியே சுற்றி உள்ளிழுத்துவிடும்.
ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் அதே போல உச்சரிப்பதன் மூலம் அவர் இதைச் செய்வார்.
சூஃபி தன்மை உடைய பாடல்களில் கட்டாயம் இருக்கும். குறிப்பாக தில்சேவிற்கு பிறகு பல பாடல்களில் நீங்கள் அதைக் கேட்டிருக்கலாம்.
ஒளியாக வந்தாய், தவிச்சேன் பனிமலரே.. பனிமலரே.. என வலிகளையும் தவிப்பையும் கடத்தும் இடங்களில் அவை நம்மை அப்படியே கட்டிப் போட்டு கழுத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்..
அது ஓரிடத்தில் சிக்கி அங்கேயே தேங்கிவிட்டு அதில் இருந்து மீளமுடியாமல் மீண்டும் மீண்டும் முட்டி மோதும் மனதின் அழுகுரல்.
“நான் காதலி,, காதலன் நீ.. வேறு எல்லாம் வெறும் வேஷமென்பேன்” என்கிற வரியில்
தீ, ”வேஷமென்பேன்” என்கிற இடத்தில் திக்கி நின்றுவிடுவார்.. காதலன் காதலி என்கிற பாத்திரத்தைத் தவிர உலகின் மற்ற அனைத்தும் ஒன்றுமில்லை என நான் தீர்க்கமாக நம்புகிறேன் என்பதை அவர் பாடியிருக்கும் முறை ஆழமாக கடத்தியிருக்கும்..
அதுவே, சின்மயி வெர்சனில் ”வேஷம் என்பேன்” என்கிற வரியை மிகவும் அலங்கரித்துப் பாடியிருப்பார். ”வேஷம்” என்பதில்தான் அவருடைய அழுத்தம் இருக்குமே தவிர ”என்பேன்” என்கிற அகக்குரலை அது மேலோட்டமாக கடந்து போயிருக்கும்..
அதே போல ஏற்ற இறக்கங்களற்ற, அனைத்தையுமே தொலைத்துவிட்ட ஒருவர் உணர்ச்சிகளற்று புலம்புவதையும் ரஹ்மான் பாடல்களில் நீங்கள் கேட்டிருக்கலாம்... சட்டென நினைவுக்கு வருவது.. அகர் தும் சாத் ஹோ பாடலில்.. வரும் ஆண் குரல்.. போர்ஷன்..
இதில் தீ வெர்சனில் ”இன்னும் வரும் எந்தன் கதை” போர்ஷன் அப்படியான ஒரு உணர்வை ஏற்படுத்தும், சின்மயி வெர்சனில் ”இன்னும் வரும் எந்தன் கதையே..” என்று அங்கேயும் ஒரு துள்ளல் இருக்கும்... அதே போல சின்மயி, ” எந்தன் கதையே ” என கதையை மட்டுமே மையப்படுத்திப் பாடியிருப்பார்.. ”இன்னும் வரும்” என்கிற துரத்திவரும் தன்மை அதில் இருக்காது. அதுமட்டுமின்றி தீ மீண்டும் மீண்டும் சொல்லும் போது விரட்டி வரும் உணர்வோடு ஒரு தவிப்பும் வெளிப்படுகிறது.
இங்கே ஆணித்தரமாக சொல்ல விரும்பும் இன்னொன்று என்னவெனில் , தீ யின் வெர்சன் தான் எனக்கு அதிகம் பிடித்தது என்று சொல்வதாலேயே சின்மயி வெர்சன் சிறப்பானதில்லை என்று சொல்ல வரவில்லை.
சுத்தி சுத்தி என்னடா எழுதியிருக்க என்று கேட்டால்.. கீழ்கண்ட விக்ஸ் என்பதைதான் எழுதியிருக்கிறேன்.
விக்ஸ்:
சின்மயி ஏன் சிறந்த பாடகி என்பது முத்தமழை சின்மயி உடைய வெர்சனில் புரிகிறது.
முத்தமழை ஏன் சிறந்த பாடல் என்பது தீ யின் வெர்சனில்தான் தெரிகிறது.
நன்றி வணக்கம்.. llll
Post a Comment