இந்த படம் விசித்திரமாக கதை அமைப்பு கொண்டு வெளியாகிய தமிழ் ஆக்ஷன்-காமெடி திரைப்படம். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் எடுப்பதற்கு பதிலாக மற்ற கமர்ஷியல் ஆக்ஷன் படங்களை கலாய்த்து வேற லெவல்லில் பாட்டுகளை இறக்கி ட்யூன் போட்டு விசுவல்லாக திரைக்கதை இல்லாமலே படத்தை முடித்துவிட்டார். அஜீத் வேற லெவல்லில் இந்த படத்தில் கேசுவலாக ஸ்கோர் பண்ணுகிறார். கதை AK என்ற ஒரு 90 களின் டானை பற்றியது. "தி ரெட் டிராகன்" என அறியப்பட்ட இந்த AK தன்னுடைய குற்றங்களில் இருந்து ஓய்வு பெற்ற கதாபாத்திரம். மனைவி ரம்யா மற்றும் மகன் விஹான் உடன் திருந்திய மனிதனாக சேர AK தன்னை சுயமாக காவல்துறைக்கு ஒப்படைக்கிறார். 18 ஆண்டுகள் அமைதியாக சிறை வாழ்க்கை வாழ்ந்த AK, குடும்பத்தோடு ஸ்பெயின் செல்லத் திட்டமிடுகிறான். ஆனால், அவரது குடும்பத்தின் கடந்த கால விரோதிகள் பழிவாங்க வருகிறார்கள். பயணத்தின் போது, AK மீது பழைய எதிரிகள் கொலை முயற்சி நடத்துகிறார்கள். ரம்யா எச்சரித்தும், AK விலக மறுக்கிறார். பின்னர் விஹான், மாகாண சிறையில் தவறாக செய்யாத தவறுக்கு கைது செய்யப்படுகிறார். ரம்யா இதற்க்கு AK என்பவரது கடந்த காலத்தின் காரணமாகவே நடந்ததாகக் கருதுகிறாள். இப்போது AK, தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காகவும், விஹான் மீது நடந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவும், தனது பயங்கரமான கடந்த காலத்தை சார்ந்த எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும். மிகவுமே சிம்பிள்ளான படம் இது. பெரிதாக கதை என்று எதுவுமே இல்லை. ஜெயிலர் படத்தை போல வெறும் விஷுவல் ஸ்டைல்லில் ரசிகர்களை குஷிப்படுத்த சினிமா கொடுத்த ஒரு அட்டெம்ப்ட் என்றே இந்த படத்தை சொல்லலாம். இந்த படத்தின் VFX கூட ஒழுங்காக இல்லை. 100 கோடி ஹீரோவுக்கு சம்பளம் , 4 கோடி ஹீரோயின்க்கு சம்பளம் ஆனால் படத்தை நடிப்பு திறனால் காப்பாற்றி கொடுத்த வில்லன் அர்ஜூன் ரெட்டிக்கு சம்பளம் 50 லட்சம் ! கதை எங்கே ? கதையே இல்லை ? நாமும் கூட இதுபோல ஒரு படம் எழுதலாம் , ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது பையனை கடத்தி வைத்து விட்டார்கள் , இரண்டரை மணி நேரம் ரசிகர்களின் மண்டையை கழுவிவிட்டு கிளைமாக்ஸ்ஸில் வில்லனை கொன்று பையனை காப்பாற்றி படத்தை முடித்துவிடலாம். இந்த படமே பிளாஸ்டிக்கை சாப்பிடுவது போல சுவையற்ற விஷயமாக இருக்கிறது. அஜீத் ஃபேன்ஸ் தவிர மற்றவர்கள் பார்த்து பார்த்து சலித்த ஃபார்முலாவில் ஒரு மொக்கை படத்தை உணர்வீர்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக