சனி, 10 மே, 2025

GENERAL TALKS - இருப்பவனுக்கு இன்னும் இன்னும் கொடுப்பது !

 



இந்த கேள்வியை நான் எனக்குள்ளே கேட்டுதான் ஆகவேண்டும் , நடக்கக்கூடிய விஷயங்கள் எதுவுமே நமக்கு சாதகமான விஷயங்களாக அமையவில்லை, இப்படியே சென்றுக்கொண்டு இருந்தால் கடன் சுமை அதிகமாக மாறுவதால் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு தனியான முடிவை எடுத்துவிட்டேன், இனிமேல் முட்டாள்களை நம்பி பிரயோஜனம் இல்லை, தங்களின் வாழ்க்கையை கெடுத்துக்கொள்வதோடு மட்டும் அல்லது அடுத்தவர்களுடைய வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்து ஒட்டிவிடுகிறார்கள். சரியான குப்பைகள் இவர்கள், இவர்களை நம்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை, இவ்வளவு நாட்களாக மரியாதை கொடுத்தால் என்னையே ஏமாற்ற பார்க்கிறார்கள். நம்பகத்தன்மையற்ற போலிகள். நிஜமாவே நம்முடைய வாழ்க்கையை நாம் கவனமாக பார்த்தால் உண்மையாக இருக்கக்கூடிய மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்றும் போலியாக இருக்கக்கூடிய மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்றும் கண்டிப்பாக நம்மால் கற்றுக்கொள்ள முடியும், இவர்கள் கண்டிப்பாக போலியான மனிதர்கள்தான் இவர்களை நம்பினால் பிரயோஜனமாக எதுவுமே நடக்காது, தான் வாழ முடியாத வாழ்க்கையை மற்றவர்களும் வாழ கூடாது என்ற பொறாமை உள்ளூற ஊறிக்கொண்டு இருக்கிறது. இவர்களுடைய மனசாட்சியை ஊடுருவி நன்றாக பார்த்தால் இவர்களுடைய வாழ்க்கையில் தோல்விகளும் வெறுமைகளும் மட்டும்தான் மிஞ்சி இருக்கிறது. நான் குறைந்தபட்ச காலகட்டத்தில் (2 - 3 MONTHS) - கோடீஸ்வரர்கள் ஆன மனிதர்களை பார்க்கிறேன், அவர்களிடம் அதிகமாக பணம் உள்ளது. அவர்களுக்கு தேவையான பணத்தை அமைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள், நாம்தான் இங்கே கஷ்டப்படுகிறோம், வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் இழந்துகொண்டு இருக்கிறோம், கடவுள் யாருக்கு ஒரு பொருள் தேவையோ அவருக்கு அந்த பொருளை கொடுக்க மாட்டார். யாருக்கு ஒரு பொருள் அவசியமே இல்லையோ அவருக்குதான் அள்ளி அள்ளி கொடுப்பார். என்னிடம்தான் இருக்கிறதே, இப்போதாவது இல்லாத மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்னால் இன்னுமே அள்ளி அள்ளி தேவையே இல்லாத இடத்தில் பருத்தி மூட்டையை குவிப்பது போல குவித்துக்கொண்டே இருப்பார், அந்த பொருளுடைய தேவை இருப்பவன் அந்த பொருளை அடைய நினைப்பான், நிறைய  கஷ்டப்படுவான், கஷ்டங்கள் வீண்போகும், நிறைய பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை எல்லாம் கடவுள் கரைத்துவிடுவார், அந்த பொருள் மட்டுமே அவனுக்கு கிடைத்தால் அவனுடைய குடும்பத்தையே காப்பாற்ற முடியும், கடவுள் கொடுக்க வேண்டிய எந்த விஷயத்தையும் கொடுக்க மாட்டார், கண்ணீரும் கவலைகளும் கஷ்டங்களும் உடல் வலிகளும் மன பாரங்களும் அதிகமாவதால் அவனுடைய உயிர் அவனுடைய உடலை விட்டு பிரிந்துவிடும், மறுபடியும் வெட்கமே இல்லாமல் யாரிடம் அதே பொருள் அதிகமாக ஸ்டாக் இருக்கிறதோ அவர்களுக்கே அள்ளி அள்ளி கொடுக்கிறார். இந்த கொடுமை எங்கே போய் முடியப்போகிறதோ என்று தெரியவில்லை ! 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...