புதன், 14 மே, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 012


நிறைய நேரங்களில் பிரபஞ்சத்திடம் வேண்டுவது தவறு என்று தோன்றுகிறது. உண்மை என்னவென்றால் யாருக்கு இந்த விஷயங்களை கொடுக்க கொஞ்சமும் தகுதி இல்லையோ அவர்களுக்கே பிரபஞ்சம் எல்லா விஷயங்களையும் கொடுக்கிறது. தரமான இயற்கை முறை உணவுகள் விற்பவர்கள் இலாபம் பார்ப்பது இல்லை. ஆனால் போதை பொருட்கள் விற்பவர்கள் கையூட்டு - லாவண்யங்களை பெற்று பெற்று சந்தோஷமாக இருக்கிறார்கள். இன்னைக்கு இந்த உலகத்தில் போடப்படும் 60 சதவீதம் குப்பைகளுக்கு இன்றைய உலகத்தில் இருக்கக்கூடிய வெறும் 10 பெர்ஸன்ட் பணக்காரர்கள்தான் காரணம் என்றால் நம்பமுடிகிறதா ? இதனை விடவுமே கஷ்டமான விஷயம் என்னவென்றால் AI - ஆனது மொத்த போஸ்ட்களையுமே படித்து அதுவே இந்த வலைப்பூ சல்லிக்காசு பெறாது என்று வருமானத்தை வெட்டிவிட்டது. இது எல்லாமே எனக்கு மிகவும் கஷ்டமான விஷயம். AI தொழில்நுட்பம் வந்த பின்னால் நடக்கப்போகும் போர்களில் மனிதனுடைய வெற்றிவாய்ப்பு ௦.௦௦ என்று மாறிவிட்டது. இனிமேல் மனிதர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறைவாக தொழில்நுட்பம் இருந்தபோதே மனிதர்கள் உலக போர்களை உருவாக்கி டென்ஷன் பண்ணிவிட்டார்கள் !

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…



நாட்டாமை படத்தோட மெகா ஹிட்டுக்கு அப்புறம் அந்த படத்தோட ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் இவங்களுக்கு ஒரு சிறப்பான வரவேற்பு இருந்தது. ஆனா அந்த படத்துக்கு சூப்பர் ஹிட் சாங்ஸ் கொடுத்த சிற்பிக்கு படமே கிடைக்கல. நாட்டாமை படத்துக்கு அப்புறம் அடுத்த 2 வருஷத்துக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் தான் செஞ்சாரு சிற்பி. ஏன்? இந்த நிலைமை, எங்க மிஸ்ஸாச்சுனு ஒன்னுமே புரியாத காலகட்டம். அப்ப மறுபடியும் சூப்பர் குட் பிலிம்ஸ்ல தான் ஒரு வாய்ப்பு கிடைக்குது. "சுந்தர புருஷன்" படத்துக்கான கம்போசிங் வேலை மட்டும் போய்ட்டு இருக்கு. அந்த பட ஷூட்டிங் தொடங்க லேட்டானாதால 3 மாசம் தினமும் மீட் பண்ணி டியூன் போடறது தான் வேலை. அந்த 3 மாசத்துல மட்டும் 150 டியூன் போட்டுருக்காரு சிற்பி.

இப்படியே காலம் போய்ட்டு இருந்த போது, அந்த வருடம் தமிழகத்தில் நடக்க இருந்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஒரு தீம் சாங் அமைத்து கொடுக்கும் வாய்ப்பு சிற்பிக்கு கிடைக்குது. முதல்வரை நேரில் பார்த்து பேசக்கூடிய வாய்ப்பு. அந்த பாடலுக்கான வேலைல இருக்கும் போது தான் "உள்ளத்தை அள்ளித்தா" பட வாய்ப்பு வருது. அதுவும் கிட்டத்தட்ட கடைசி நேர வாய்ப்பு தான். ஷூட்டிங் போக இன்னும் 6 நாள் தான் இருக்குங்கற நிலைமைல வந்த வாய்ப்பு. உடனடியா அதை ஏத்துகிட்டு பாட்டு கம்போஸ் பண்ணி கொடுக்கறாரு சிற்பி. உள்ளத்தை அள்ளித்தா படம் அதிரி புதிரி ஹிட். அதுக்கப்புறம் தான் சிற்பியோட திரை வாழ்க்கைல வசந்தம் வீசத் தொடங்குது. அடுத்த வருசம் மட்டும் கிட்டத்தட்ட 37 படங்கள். நிக்கக்கூட நேரமில்லாம வேலை பார்த்தார். அவர் சும்மா இருக்கும் போது போட்டு வச்சாரே 150 ட்யூன், அதெல்லாம் தான் இப்ப உதவுது.


பெயரில்லா சொன்னது…

சினிமாவுக்குள்ள வந்து ஏதேதோ வேலைகள் செய்து அதுக்கப்புறம் தனக்கான வேலையை கண்டுபிடிச்சு அதுல ஜெயிச்சவங்க பல பேர். அப்படியான ஒருத்தர் தான் "அம்மா கிரியேஷ்ன்ஸ்" தயாரிப்பாளர் டி.சிவா. இவரும் வேற வேற வேலைகள் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா சினிமாவை கத்துகிட்டு, தயாரிப்பாளாராகி ஜெயிச்சவர். அடுத்தடுத்து பட்ஜெட் படங்கள் செஞ்சு ஜெயிச்சுட்டு இருந்தவருக்கு "அரவிந்தன்" படம் பெரும் சோதனையா மாறிடுச்சு. பெரிய பட்ஜெட்ல தயாரிச்ச அந்த படம் சரியா போகாததால மீள முடியாத ஒரு நிலைக்கு போனார் டி.சிவா. அதுவரைக்கும் சம்பாதிச்ச எல்லாமே போயாச்சு. இப்ப அவர்கிட்ட மிச்சம் இருந்தது அவரோட சினிமா அனுபவம் மட்டும் தான். ஒரு படம் தயாரிப்புக்கான ப்ளானிங் & எக்சிகியுஷனில் அவர் கிங்.

அந்த தொழில் அனுபவம் தான் அவருக்கு ரெண்டு மிகப்பெரிய வாய்ப்பை வாங்கிக் கொடுக்குது. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் ஒரு படம் டைரக்ட் செய்ய இருந்த போது தயாரிப்பு உதவிக்கு சிவாவை கூப்பிடறாரு. அவரும் கூடப்போய் எல்லா வேலைகளையும் செஞ்சு கொடுக்கறார். பாலச்சந்தருக்கு ரொம்ப பிடிச்சு போகுது. அந்த படம் இலங்கைல ஷூட்டிங். அந்த படம் முடிஞ்சு வந்த உடனே இயக்குனர் இமயம் பாரதிராஜா தன்னோட அடுத்த படத்துக்கு இலங்கை போறதா இருந்தது. ஏற்கனவே அங்க போய்ட்டு வந்தவர்ங்கற முறையில மறுபடியும் டி.சிவாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குது. இப்படி ஒரே நேரத்துல தமிழ் சினிமாவின் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளோட நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைச்சது. இதுல பாலச்சந்தரோட இறுதிக்காலம் வரைக்கும் சிவாவோட பயணம் இருந்தது..

வாழ்க்கைல ஒரு கடினமான காலகட்டத்தை பார்க்காதவங்க யாருமே இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வகையில் அடுத்து என்ன செய்யறதுனு தெரியாத ஒரு மாயமான, குழப்பமான காலகட்டம் வம்தே தீரும். அது குடும்ப வாழ்க்கைல இருக்கலாம், செய்யற தொழில்ல இருக்கலாம், இல்லை பார்க்கற வேலையா கூட இருக்கலாம். இதுல ஏற்படற தோல்விகள் தான், நம்ம வாழ்க்கை பாதையை மாத்தி அமைக்குது. அதனால எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுங்கற கேள்வியை விட்டுடுங்க. பல பேர் அந்த காலகட்டத்துல பொறுமையாவும், உறுதியாவும் நின்னு அதை கடந்து ஜெயிக்கறாங்க.

சோதனையான காலகட்டம் கூட நமக்கு சில வாய்ப்புகளை தரும். சில சமயம் அது வெறும் அனுபவமா கூட இருக்கலாம். நமக்கு பணங்காசு சம்பாதிச்சா மட்டும் தான் அவன் ஜெயிச்சவன்னு நம்ம தலைல ஆணி அடிச்சு சொல்லி கொடுத்ததால, நாம அந்த அனுபவத்தை பெரிய விஷயமா எடுத்துக்கறதில்லை. ஆனா அந்த அனுபவம் நம்ம வாழ்க்கை முழுவதும் கூட வரும்.

எதிர்காலத்தை பத்தின பயம், நாம என்ன செய்யப் போறோம், எப்படி இதை தாண்டப்போறோம்னு அனுதினமும் நம்மளை சுத்தி நிக்கற கேள்விகள், இதையெல்லாம் தாண்டறது அவ்வளவு சுலபம் கிடையாது தான். மனசுல தைரியம் இருக்கனும். கண்டிப்பா நாம மீண்டு வருவோம்டானு நம்பனும். முக்கியமா நம்மோளோட எதிர்காலத்துக்கான திட்டமிடுதலுக்காகவும், பயிற்சிக்காகவும் அந்த சோதனையான காலகட்டத்தை நாம யூஸ் பண்ணிக்கனும். நாம மறுபடியும் மீண்டு எழுந்து வந்து ஓட ஆரம்பிக்கும் போது அந்த பயிற்சி நம்மளை வலிமையா உணர வைக்கும்.

நம்பிக்கையோட இருங்க. சிலசமயம் விருப்பம் இல்லேன்னாலும் வாழ்க்கையோட போக்குல சில காலம் பயணிச்சு தான் ஆகனும். அந்த பயணத்துல கூட நமக்கு தேவையான சில விஷயங்கள் கிடைக்கும். அது நம்மோட அடுத்த கட்டத்துக்கு தேவையானதா கூட இருக்கலாம்..

இதை நீதினு எடுத்துக்க வேண்டியது இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் நாம சந்திக்கும் மனிதர்கள், கேட்கிற விஷயங்கள் இப்படி எல்லா இடத்துல இருந்தும் நாம கத்துக்க ஏதாவது ஒரு விஷயம் இருக்கு. அதுக்கான தேடல் தான் இது.

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...