Tuesday, June 24, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 013


நான் வாழ்க்கையில் படக்கூடிய கஷ்டங்கள் எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான். என்னுடைய வாழ்க்கையின் மழைப்பொழிவு நிகழ வேண்டும் என்றால் என்னுடைய வாழ்க்கையில் வெயில் வந்தாக வேண்டும். நானும் கஷ்டங்களை பட்டாக வேண்டும். ஒரு ஒரு நொடியும் நான் நரகத்தை அனுபவிக்க வேண்டும். இந்த தொழில் நுட்பம் மற்றும் மழைப்பொழிவு குறித்த விஷயங்கள் நிறைய பேரால் கண்டுகொள்ளப்பட முடியாது. இந்த விஷயங்கள் நான் இறந்து போனாலும் கூட உனக்கானதும் எனக்கானதுமான இருந்துவிட்டு போகட்டும். ஒரு சில நேரங்களில் பயம் என்னை ஆட்கொண்டு இருக்கிறது. பயம் என்னை பயமுறுத்துகிறது. என்னுடைய கனவுகளை நான் அடைவது பாவச்செயல் என்னுடைய கனவுகளை நான் அடைவது பெரும் குற்றம் என்று நிறைய பயமுறுத்தி இருக்கிறது. வாழ்க்கையை கண்டு நான் நடுங்குகிறேன். முன்னே இருந்த பலம் , வேகம் , துணிவு எதுவுமே இப்போது சுத்தமாக இல்லை. இந்த கொடூர தன்மையை நான் வென்றாக வேண்டும். எப்போதுமே என்னுடைய மனது முழுக்க மழை பொழிவின் கனவுதான். அடுத்த நொடி நிரந்தரம் இல்லை. எனக்கு நெருக்கமான ஒரு நபரை இழத்துவிட்டேன். நான் ஒரு நூறு சதவீதம் மாறிவிட்டேன். என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. என்னால் நடந்த மாற்றங்களுக்காக எதுவுமே பண்ணமுடியாது. இப்போது எனக்கு இருக்கும் சக்திகளை பார்த்தால் நடக்கப்போகும் விஷயங்களையும் தடுக்க முடியாது.  


No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...