Wednesday, July 8, 2020

CINEMATIC WORLD - 034 - THOR THE DARK WORLD - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



 

 தோர் - தி டார்க் வேர்ல்ட் - இங்கே அவெஞ்சர்ஸ் படங்களுக்கு பின்னால் நம்ம தோர் காதப்பாத்திரத்துக்கு அதிகமான டெவலப்மெண்ட் கொடுத்த படம் இந்த படம் என்று சொல்லலாம். தோர் மற்றும் ஜென் ஃபாஸ்டர் காதல் கதை இந்த படத்தில்தான் ஸ்டார்ட் ஆகும். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்படத்தில் 8 வது திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. தி அவென்ஜ்ர்ஸ் திரைப்படத்தின் சம்பவங்களை தொடர்ந்து கடந்த காலத்தில் ஆஸ்கர்ட்டின் எதிரியாக இருந்த மெலகித் அவருடைய படைகளை பயன்படுத்தி  இன்பினிட்டி ஸ்டோனான AETHER - ஐ அடைந்து அதனுடைய  சக்திகளை பயன்படுத்தி  கால நேர கூட்டமைப்பு என்ற குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த பிரபஞ்சத்தை அடைய முயற்சிக்கிறார். இந்த முயற்சியை தோரால் தடுக்க முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைச்சுருக்கம். இந்த திரைப்படம் 2013 ம் ஆண்டு வெளிவந்தது . இந்த படத்தில் மார்வேல்லின் மேஜர் ஈவண்ட்ஸ் என்று பார்த்தால் லோகி ஒரு அளவுக்கு தோர்க்கு சப்போர்ட்டாக இருப்பார். ஆனால் கிளைமாக்ஸ்ஸில் மனசு மாறிவிடுவார். படம் மொத்தமும் ஜேன் ஃபாஸ்டர்க்கு நிறைய காட்சிகள் இருக்கும். ஆஸ்கார்ட் உலகத்தில் நடக்கும் காட்சிகள் நிறையவே இருக்கும். HARRY POTTER 6 போல ஒரு BROWN COLOR PALATTE பயன்படுத்தி இருப்பார்கள். கதைக்கு இந்த மாதிரி COLOR PALATTE பயன்படுத்துவது நன்றாக இருக்கிறது. இந்த படத்துக்கு தீமக்கு ரொம்பவுமே பொருத்தமாக கலர் பெலட் இருந்தது என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது !! மொத்தத்தில் இந்த படம் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் !!

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...