Thursday, July 9, 2020

CINEMATIC WORLD - 035 - CAPTAIN AMERICA - THE WINTER SOLDIER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00053]




கேப்டன் அமெரிக்கா அவருக்கு இருக்கும் ஒரே ஒரு ஃப்ரெண்ட்டான பக்கி பாரனேஸ் இன்னைக்கும் உயிரோடு இருக்கிறார் என்று தெரிந்துகொள்கிறார். ஆனால் HYDRA வின் கட்டுப்பட்டால் சொன்ன வேலையை கண்ணை மூடிக்கொண்டு செய்யும் ஹிப்னாட்டீஸம் பண்ணப்பட்ட கொலைகார கூலிப்படை சொல்ஜர்ராக இருக்கிறார். மேலும் சோதனைகளால் கேப்டன் அமெரிக்காவை விட வலிமையாக இருக்கிறார். மேற்கொண்டு ஒரு இரும்பு கரமும் அவரிடம் இருக்கிறது. SHIELD இன் தலைவர் NICK FURY மேல் கைவைத்துவிட்டார். இத்தனை பண்ணியும் நண்பரை பாதுகாக்க நடாஷா மற்றும் பால்கன் உதவியுடன் கேப்டன் பண்ணும் முயற்சிகள் என்ன ? மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்பட வரிசையில் இந்த திரைப்படம் 9 வது திரைப்படமாக அமைந்துள்ளது , இந்த திரைப்படத்தின் கதைசுருக்கம் : கேப்டன் அமெரிக்கா தி பர்ஸ்ட் அவெஞ்சர் மற்றும் தி அவென்ஜர்ஸ் திரைப்படங்களை தொடர்ந்து அமைந்துள்ளது. SHEILD என்ற பாதுகாப்பு அமைப்பு உலகத்தின் நன்மைக்காக INSIGHT என்ற நவீன பாதுகாப்பு சாதனங்களை உருவாக்குகிறது. ஆனால் HYDRA அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த தொழில்நுட்பத்தை எடுக்க நினைக்கிறார்கள் . இந்த நிலையில் ஸ்டீவ் ரோஜர்ஸ் இன் கடந்த காலத்தில் இருந்த ஒரே நண்பர் பக்கி பார்னெஸ் இப்போது  கடந்த கால நினைவுகளை இழந்து அந்த மோசமான அமைப்புக்காக வேலை செய்கிறார். கேப்டன் அமெரிக்கா இந்த பிரச்சனைகளை கடந்து எல்லோரையும் காப்பாற்ற முயற்சிக்கும்போது நடக்கும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதைக்களம். இந்த திரைப்படம் 2014 ம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் கதைக்களம் விமர்சனங்களின் மிகச்சிறந்த பாராட்டுக்களை பெற்றது.இந்த படத்தில் நீங்கள் யோசிக்க வேண்டிய கருத்து என்னவென்றால் யாரையும் நம்ப முடியாது. கிளைமாக்ஸ் எல்லாம் வரும்போது யாரு HYDRA வை சேர்ந்தவர்கள் யாரு TEAM CAPTAIN ஐ சேர்ந்தவர்கள் என்று ஒரு பெரிய போரே நடக்கும். இந்த படத்தில் நிறைய திருப்பங்களுடன் பக்காவான ஃபைட் ஸீன்களும் பறந்து பறந்து அடிக்கும் (நிஜமாத்தான் சொல்லறேன்) இன்டென்ஸ் சண்டை ஸ்டண்ட்களும் இருப்பதால் கண்டிப்பாக பாருங்கள். TAMIL DUBBING சிறப்பு.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...