Tuesday, July 7, 2020

CINEMATIC WORLD - 031 - RALPH BREAKS THE INTERNET (2018) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00049]





கதைச்சுருக்கம் :ரால்ப் - யார் இந்த ரால்ப் - பிக்ஸ் இட் ஃபெலிக்ஸ் என்ற கன்சொல் விளையாட்டின் வில்லன். ஒரு வில்லனாக இருப்பதால் மட்டும் அனைவரும் அவரை வெறுப்பதால் வாழ்க்கை இவருக்கு கடுப்பாக சென்றுக்கொண்டு இருக்கிறது. எப்படியாவது அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இன்னொரு வீடியோ கேம்க்குள் செல்கிறார். அங்கே வெனாலப்பை சந்தித்து ஒரு பிரச்சனை என்று வரும்போது உதவி பண்ணி கடைசியில் நிரந்தர நண்பனாக மாறுகிறார். இதுதான் முதல் பாகத்தின் கதை. இப்போது இந்த பாகத்தில் ரேஸ் கார் ஓட்டும் கணினி விளையாட்டு கதாபாத்திரமான வேனாலப் வான் ஸ்கீவச்-ன் கணினி விளையாட்டான SUGAR RUSH கார் ரேஸிங் விளையாட்டின் உதிரி பாகமான ஸ்டயரிங்க வீல் உடைந்து போனதால் ரால்ப் உதவியை கேட்கிறார். EBAY இல் ORDER போட இன்டர்நெட் போகும் RALPH மற்றும் VENOLLOPE பண்ணும் சாகசங்கள் என்ன என்ன ? என்று படத்தின் கதை செல்கிறது. எனக்கு பிடித்த விஷயம் வேனாலப் அந்த கணினி விளையாட்டை சரி செய்ய கணினி உலகத்தில் இருந்து இணைத்ததளத்தின் உலகத்துக்கு செல்கின்றனர். இந்த உலகத்தை கற்பனையாக கொடுத்து கூட இருக்கலாம் ஆனால் GOOGLE , WIKI , YAHOO , PINTEREST போன்று நிஜமான இன்டர்நெட்டேயே கதைக்குள் பயன்படுத்தி இருப்பதுதான் ஸ்டுடியோவின் சாமர்த்தியம். இதுமட்டும் இல்லாமல் DISNEY தனக்கு தானே விளம்பரம் செய்து இருக்கிறது. இது எல்லாம் ஒருப்பக்கம் இருந்தாலும் RALPH யுட்யூப் சேனல் ஆரம்பிப்பது , வெனாலப் NFS போன்ற AAA GAME இல் கார் ஓட்டுவது , வெனாலப் பிரிந்து போகக்கூடாது என்பதற்காக DARKWEB வரைக்குமே சென்று மொத்த இன்டெர்நெட்டையும் VIRUS இறக்கி காலி பண்ணுவது என்று படம் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரைக்கும் கலகலப்பான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் சேர்ந்து இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது . WRECK IT RALPH திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த பாகமாக வெளியிடப்பட்ட இந்த திரைப்பட வரிசையில் இந்த RALPH BREAKS THE INTERNET திரைப்படம் 2018 ல் வெளிவந்தது . இந்த திரைப்படத்தின் சிறப்பான கதை மற்றும் வண்ணமயமான அனிமேஷன் காட்சிகள் நல்ல விமர்சனங்களை பெற்றது . இன்னொரு முக்கியமான விஷயம் இந்த படம் ஒரு META வகையறா படம், META படங்கள் என்றால் என்ன என்று தனியாக ஒரு கட்டுரை போட்டு ஒரு நல்ல நாள் பார்த்து பப்ளிஷ் பண்ணுகிறேன். ஸ்டே ட்யூனட் ஆக இருங்கள். இன்னும் நிறைய கட்டுரைகள் உங்களுக்காக வலைப்பூவில் காத்துக்கொண்டு இருக்கிறது !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...