Monday, July 6, 2020

CINEMATIC WORLD - 030 - WRECK IT RALPH (2012) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



பிக்ஸ் இட் ஃபெலிக்ஸ் என்ற கணினி விளையாட்டில் ரால்ப் வில்லன் கதாபாத்திரமாக இருக்கிறார் , ஒரு கட்டத்தில் அவருக்கு வில்லனாக இருக்க விருப்பம் இல்லை. காரணமே இல்லாமல் எல்லோருமே அவரை வெறுப்பதாக உணர்வதால் இனிமேல் கதாநாயகனாக மாறினால்தான் அவரை எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைத்து கதாநாயகனாக மாற முயற்சி செய்கிறார் , இதனால் ஹீரோஸ் டியூட்டி -என்ற 3D கணினி விளையாட்டின் கடைசி லெவல் ல் கிடைக்கும் தங்க மெடலை எடுத்துக்கொண்டு அங்கே இருந்து சுகர் ரஷ் என்ற இன்னொரு கார்-ரேஸிங் கணினி விளையாட்டுக்குள் சென்றுவிடுகிறார். அங்கே வெனலப் வான் ஸ்கிவச் என்ற கதாப்பாத்திரத்தை சந்திக்கிறார். சுகர் ரஷ்  கணினி விளையாட்டின் முதன்மை கதாபாத்திரமாக இருக்க வேண்டிய இந்த வெனலப் கதாப்பாத்திரம் இப்போது தனித்து விடப்பட்டு இருக்க வில்லன்தான் காரணம் என்று புரிந்துகொள்ளும் RALPH எப்படிவது VENALLOPE -ஐ ஜெயிக்க வைக்க வேண்டும் என்று VENALLOPE கதாபாத்திரத்துக்கு உதவி செய்ய முயற்சிக்கிறார். இதனை தொடர்ந்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதைக்களம். இந்த திரைப்படம் 2012 ம் ஆண்டு வெளிவந்தது நல்ல REVIEW-க்களை பெற்றது. இந்த திரைப்படம் நிச்சயமாக பார்க்கவேண்டிய திரைப்படங்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் ரால்ப் பிரேக்ஸ் தி இன்டர்நெட்- 2018 ம் ஆண்டு வெளிவந்தது.  எனக்கு தெரிந்து இந்த படம்தான் MATRIX படங்களுக்கு பின்னால் VIDEO GAME NPC க்களை கணக்கில் எடுத்துக்கொண்ட படம் என்று நினைக்கிறேன். NPC க்கு எல்லாம் ஒரு படமா என்று பார்க்கும்பொது கதை ரொம்பவுமே பெஸ்ட்டாக இருக்கணுமே என்ற கருத்து எனக்குள் இருந்தது.இந்த படம் பார்க்கும்போது 2 படங்களையும் BACK 2 BACK னு போட்டு பார்த்தேன். அனிமேஷன் நல்லபடியாக இருப்பதாலும் ஸ்டோரி டீசண்ட்டாகவும் புதுமையாகவும் இருப்பதாலும்தான் இந்த படம் வெற்றிநடை போட்டது என்பதுதான் என்னுடைய கருத்து. இன்னொரு விஷயம் பாராட்டவேண்டிது என்னவென்றால் RALPH மற்றும் VENOLLOPE க்கு நல்ல வேலை ரோமான்டிக் ஆங்கிள் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்து இருந்தால் படம் படு மட்டமாக இருந்திருக்கும். ஒரு ஃப்யுர் ஃப்ரெண்ட்ஷிப் படம்தான் இந்த WRECK IT RALPH படம்.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...