Thursday, July 30, 2020

CINEMATIC WORLD - 039 - CAPTAIN AMERICA - CIVIL WAR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!





பேட்மேன் V. சூப்பர்மென் என்று ஒரு HERO V. HERO படம் இந்த படம் வெளிவந்த அதே வருடம் வெளிவந்தது . மொத்த அவெஞ்சர்ஸ்ஸையும் களத்தில் இறக்குவதோடு மட்டும் இல்லாமல் SPIDER MAN மற்றும் BLACK PANTHER போன்ற முக்கியமான கதாப்பத்திரங்களையும் இந்த படத்தில் களம் இறக்கி இருப்பார்கள். DOCTOR STRANGE இருந்தால் இந்த மோதல் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் !! என்ன பண்ணுவது ? பொதுவாக கேப்டன் அமெரிக்கா படங்கள் ஸ்டீவ் ரோஜர்ஸ் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை பற்றி மட்டுமே CENTERED ஆக இருக்கும் ஆனால் இந்த படம் இந்த படத்தின் அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் கெத்து காட்டி இருக்கிறது . இந்த திரைப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்படங்களின் வரிசையில் 13 வது திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதைக்களம் : அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் நடந்த சம்பவங்களை தொடர்ந்து அவென்ஜ்ர்ஸ் அமைப்பு இனிமேலும் தனிப்பட்ட அமைப்பாக செயல்பட வேண்டாம் என்ற முடிவை யூ.என் எடுக்கும்போது ஸ்டீவ் ரோஜர்ஸ் மறுப்பு தெரிவிக்கிறார். இந்த நிலையில் அவருடைய நண்பரான பக்கி பார்னெஸ் மீது அவர் செய்யாத விஷயங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு துரத்தப்படும்போது ஸ்டீவ் ரோஜர்ஸின் குழுவினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர் ஆனால் டோனி ஸ்டார்க் ன் குழுவினர் தடுக்க முயற்சி செய்கின்றனர். இந்த மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம் . இந்த திரைப்படம் 2016 ம் ஆண்டு வெளிவந்தது . இந்த திரைப்படத்தின் நேர்த்தியான திரைக்கதை , விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் அசத்தலான மோதல் காட்சிகள் விமர்சனங்களின் பாராட்டுக்களை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திரைப்படங்கள் வெளிவந்தனர். இந்த திரைப்படம் முந்தைய ஸ்பைடர்மேன் திரைப்படங்களை கடந்து ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் எம்.சி.யு அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரே லெவல்லில் கெத்து கொடுத்து இருப்பது இந்த படத்துடைய சூப்பர் ஹிட் வெற்றிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இந்த படத்துடைய சக்ஸஸ்க்கு பெரிய காரணம் அதுதான் என்று சொல்லலாம் !!

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...