Wednesday, July 8, 2020

CINEMATIC WORLD - 033 - SPIDERMAN HOMECOMING - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00051]





இந்த திரைப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்பட வரிசையின் அடுத்தடுத்த பாகங்களில் 16 வது திரைப்படமாக அமைந்துள்ளது. போன படமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் திரைப்படத்தில்  நடந்த சம்பவங்களை கடந்து இப்போது டோனி ஸ்டார்க் அதாவது அயர்ன் மேன் கொடுத்த புத்தம்புது சூப்பர்ஹீரோ யூனிஃபார்ம்ன் உதவியுடன் ஒரு பக்கம்  உயர்நிலை பள்ளியின் சமத்து மாணவராக இருக்கும் பீட்டர் பார்க்கர் இன்னொரு பக்கம் ஸ்பைடர் மேன்னாக அவதாரம் எடுத்து அநியாயத்தை கண்டால் தட்டி கேட்கும் சூப்பர் ஹீரோவாக லோக்கல் பகுதிகளில் அவருடைய நகரத்தில் நடக்கும் சின்ன சின்ன  குற்றங்களை தடுக்கிறார், ஆனால் அப்போதுதான் புதிதாக வருகிறார் நம்ம வில்லன் VULTURE. இந்த நிலையில் 2013 இல் AVENGERS க்கும் LOKIக்கும் நடந்த சந்தையில் கிடைத்த மாயாஜால டெக் சாதனங்களை கொண்டு ஆயுதங்கள் பண்ணி கொள்ளைக்காராக அவதாரம் எடுக்கும் ஒரு சாதாரண குடும்பஸ்தன்தான்  இந்த அட்ரெய்ன் என்று அழைக்கப்படும் VULTURE. இப்போது பீட்டர் பார்க்கால் காதலித்த பெண்ணின் அப்பாதான் இவர் என்று தெரியவருகிறது. மேலும் அவருடைய பயங்கரமான திட்டம் என்னவென்றால் இதுவரை ஃபார்ம் பண்ணிய அவருடைய டெக் சக்திகள் நிறைந்த குழுவினருடன் அதீத தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவெஞ்சர்ஸ் தொழில்நுட்பங்களை நடு விமானத்தில் அப்புடியே கொள்ளையடித்து மொத்தமாக எடுக்கவேண்டும் என்று ஒரு பெரிய பிளான் போட்டு வைத்துள்ளார். இந்த விஷயத்தை தெரிந்துக்கொண்ட ஸ்பைடர்மேனால் யாரிடம் இருந்தும் எந்த சப்போர்ட்டும் இல்லை என்றாலும் சொந்த சக்திகளை மட்டுமே பயன்படுத்தி அவரை நேரடியாக சண்டைபோட்டு தடுக்க முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த படத்தில் ஸ்பைடர் மேன்க்கு ஒரு லவ் ஸ்டோரி நடந்துகொண்டு இருக்கிறது ஆனால் கடைசியில் வருங்கால மாமனார்தான் தேடப்படும் சூப்பர்வில்லன் என்ற காட்சி கிளைமாக்ஸ் வரும்போது எனக்கே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. கவலைப்படவேண்டாம் ஸ்பைடர்மேன் இன்னொரு எம். ஜே. அடுத்த படத்தில் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் !! இந்த திரைப்படம் 2017 ம் ஆண்டு வெளிவந்தது.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...