Thursday, July 9, 2020

CINEMATIC WORLD - 036 - THOR RAGNAROK - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




பொதுவாக மற்ற மார்வேல் படங்களோடு கம்பேர் பண்ணும்போது தோர் என்னக்குமே அவருடைய பெர்சனல்லிட்டியை விட்டுக்கொடுக்காத ஒரு அன்பான சூப்பர் ஹீரோவாக இருந்து இருக்கிறார். கடவுள்களின் உலகத்தில் பிறந்து இளவரசராக மட்டுமே வளர்ந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம்தான் இந்த RAGNAROK படம். ஒரு குறிப்பிட்ட தீர்க்க தரிசனம் கடவுள்களின் பிரபஞ்சத்தை ஆளும் ASGARD நகரம் RAGNAROK என்ற பேரழிவால் அழிந்துவிடும் என்று சொல்கிறது. இந்த விஷயம் பற்றி விசாரணை பண்ணும் தோர் இப்போது ASGARD -இல் ODIN போல இருப்பது LOKI என்று கண்டுபிடிக்கிறார். கடைசியாக ODIN ஐ காப்பாற்ற போகும்போது ODIN இறந்து போகிறார் ஆனால் அவரால் கட்டுப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட ஹெலா இப்போது விடுதலை ஆகிறார். அடுத்து என்ன நடக்கும் ? மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்பட வரிசையில் இந்த திரைப்படம் 17 வது திரைப்படமாக உள்ளது , அவென்ஜ்ர்ஸ் , தோர் , தோர் தி டார்க் வேர்ல்டு திரைப்படங்களை தொடர்ந்து இந்த திரைப்படம் 17 வது திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படம் மற்ற படங்களில் இருந்து ரொம்பவுமே வித்தியாசமான முறையில் இருக்கிறது. குறிப்பாக கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் ஸ்பேஸ் ஹியூமர் ஒரு ரகம் என்றால் இந்த படத்தின் ஸ்பாட் ஹியூமர் இன்னொரு தனி ரகம் ஒரு பக்கம் தன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது என்ற கௌரவம் உள்ள ஆஸ்கர்ட்டின் இளவரசரான தோர் மற்றும் மாயாஜாலத்தால் தன்னால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ள சகோதரர் லோகி இவர்கள் இருவரும் வாழ்நாளில் அடித்துக்கொள்ளாத நாட்களே இல்லை. இருந்தாலும் இன்றுவரை பிரபஞ்சத்தை காப்பாற்றிய ODIN தந்தையின் மறைவுக்கு பிறகு ஆஸ்கர்டை ஆட்சி செய்ய முயற்சிக்கும் அதிசக்திவாய்ந்த சகோதரி ஹெலாவை தடுக்க முயற்சி செய்யும்போது சக்கார் என்ற கிரகத்தில் மாட்டிக்கொள்கின்றனர். தோர் அங்கே சந்தித்த அவருடைய நண்பர் ப்ருஸ் பேனர் / ஹல்க் மற்றும் வல்கெரியின் உதவியுடன் எல்லோரையும் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படத்தின் கதை சுருக்கம். இந்த திரைப்படத்தின் ஆக்சன் காட்சிகள்  மற்றும் கலகலப்பான திரைக்கதை இந்த திரைப்படத்தை ரசிக்கும்படியாக அமைத்துள்ளது எனலாம் . இந்த திரைப்படம் 2017 ம் ஆண்டு வெளிவந்தது. இன்று பார்த்தால் கூட ஒரு கலகலப்பான சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். கண்டிப்பாக பாருங்கள். TAMIL DUBBING பிரமாதம். போன படங்களை விட வேற லெவல்லில் தமிழ் டப்பிங் பண்ணி கொடுத்து இருப்பார்கள், 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...