Wednesday, July 22, 2020

CINEMATIC WORLD - 038 - FINDING NEMO & FINDING DORY - TAMIL REVIEW - திரை விமர்சனம் [REGULATION-2024-00055]

FINDING NEMO [2003] - TRAILER



கடலில் இருக்கும் குட்டி பையன் மீன்னான நீமோ குடும்பத்தை பிரிந்து கரைக்கு வந்துவிடுகிறது. இந்த நீமோவின் அப்பா மெர்லின் கண்டிப்பாக விட்டுக்கொடுப்பதாக இல்லை. இங்கே DISNEY க்கு மட்டும்தான் மீன்கள் , பொம்மைகள் , வீடியோ கேம் NPC க்கு எல்லாம் உயிர் கொடுத்து கதை எழுதவைக்க தோன்றும் இல்லையா ? இந்த விமர்சனத்தை தவிர்த்து ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள் , NON-VEG FOOD சாப்பிடாமல் இருப்பது B COMPLEX மற்றும் VITAMIN D ன் அளவை குறைத்துவிடும். பின்னால் உடல் நலத்துக்கு போதுமான விட்டமின்கள் உடலில் இருக்காது. கண் மற்றும் காது நரம்புகளின் பங்க்ஷன் குறைந்தால் நான் பொறுப்பு அல்ல. இப்போது கதைக்கு வருவோம் கோரல் கடற்கரை பகுதியில் வசிக்கும் மீனான மெர்லின் அவருடைய மகனான நீமோ காணாமல் போனதை தொடர்ந்து அவர் நீமோவை தேடும் முயற்சியில் இறங்குகிறார். இங்கே பிரச்சனை என்னவென்றால் உதவி பண்ணவேண்டிய மீனாக இருக்கும் DORY   ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்-ல் பாதிக்கப்பட்டுள்ள  சின்ன சின்ன சம்பவங்களை கூட எளிதில் மறந்துவிடக்கூடிய இந்த மாதிரி மீனுடைய உதவியுடன் கஷ்டப்பட்டு கடினப்பட்டு பல இன்னல்களை கடந்து ஒரு வாரம் ஆனாலும் எதிர்களை நேருக்கு நேராக முன்னின்று சந்தித்து கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார். இந்த நிலையில் நீமோவும் அவனுக்கு புதிதாக கிடைத்த நண்பர்களின் உதவியுடன் கடலுக்கு திரும்பவும் செல்ல முயற்சி செய்கிறான். கடைசியில் நாளை நமதே என்று இவர்கள் செருவார்களா ? இதனை அடுத்து இவர்களுடைய பயணத்தில் உருவாகும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை கடந்து செல்லும் முயற்சிகள் என்று சிறப்பாக நகர்கிறது இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தை நீங்கள் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படங்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த திரைப்படத்தின் கதைக்களம் , திரைக்கதை , கணினி அனிமேஷன் காட்சிகள் இந்த திரைப்படத்தை எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு தனித்தன்மை வாய்ந்த சாகச பயணமான அட்வென்ச்சராக மாற்றியுள்ளது . இந்த திரைப்படம் 2003 ல் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் அடுத்த பாகமான FINDING DORY என்ற திரைப்படம் 2016 ம் ஆண்டு வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்றது.

FINDING DORY [2016] - TRAILER :
 


போன படத்தின் சம்பவங்களுக்கு பிறகு நீமோ , மெர்லின் , மற்றும் பலர் சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருக்கும் கடல் பகுதியில் டோரி அமைதியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். ஆனால் ஒரு நாள் அவளுடைய கடந்தக்கால நினைவுகளில் ஒரு சில நினைவுகள் திரும்ப வந்ததால் டொரியின் அப்பாவும் அம்மாவும் ஒரு கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறார்கள் என்ற தகவல் டோரிக்கு நினைவுக்கு வருகிறது. என்னதான் மெமரி லாஸ் இருந்தாலும் தைரியமான துணிவான மீனாக இருக்கும் டோரி இப்போது அவளுடைய அப்பா அம்மாவை கண்டுபிடிக்கும் பயணத்துக்குள் செல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...