Tuesday, July 21, 2020

CINEMATIC WORLD - 037 - THE PURSUIT OF HAPPYNESS [2006] - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



இந்த திரைப்படத்தின் கதை : 1980 ல் சான் பிரசிஸ்க்கோ நகரத்தில் வசிக்கும் மெடிக்கல் ஸ்கேன் மெஷின் - சேல்ஸ் மேனாக பணிபுரியும் ஒரு சராசரி குடும்பஸ்தன்தான் இந்த கிறிஸ் கார்ட்னர்.  இவருடைய பயணத்தின் மொத்த சேமிப்புகளையும் இந்த போன்-டென்சிட்டி ஸ்கேனர் விற்பனையில் முதலீடு செய்கிறார். பிரச்சனை என்னவென்றால் அதிகமாக சேல்ஸ் ஆகாததால்  அவருக்கு மிக மிக குறைவான வருமானமே கிடைக்கிறது. குடும்பத்தை நடத்த போதுமான பணம் இல்லை.  மேலும் அவருடைய மனைவி அவரை விட்டு பிரிந்த பிறகு  வீட்டுக்கு சரியாக  வாடகை கூட கொடுக்க முடியாததால் இப்போது வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். மிக குறைவான பணத்துடனும் அவருடைய மகனை காப்பாற்றும் பொறுப்புகளையும் சேர்த்து ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் நிறையவே கஷ்டப்படும் கிறிஸ் கார்ட்னரால் கடைசியில் அவருடைய வாழ்க்கையில் துன்பங்களை கடந்து ஒரு நல்ல நிலைக்கு வர முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை . 2006 ல் வெளிவந்த  இந்த திரைப்படம் அமெரிக்க தொழில் அதிபரான கிறிஸ் கார்டனரின் கடந்த கால வாழ்க்கை குறித்த புத்தகமான தி பெர்சியூட் ஆப் ஹப்பினஸ் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக பார்க்கவேண்டிய திரைப்படமாக எடுத்துக்கொள்ளலாம். WILL SMITH ஒரு தேர்ந்த நடிகராக இந்த படத்தின் கதாநாயகன் CHRIS GARDENER -ஐ மனதுக்குள் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஜூனியர் JADEN SMITH ஒரு அப்பாவியான பையனாக உள்ளங்களை கவர்கிறார். தி கராத்தே கிட் படம் பார்த்துவிட்டு இந்த படம் பார்த்தால் ஜெடன் ஸ்மித் எவ்வளவு கியூட் என்று உங்களுக்கு புரியும்.  நீங்கள் பிறந்ததில் இருந்தே பணக்காரராக இருந்தால் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது உங்களால் இந்த படத்தை புரிந்துகொள்ளவும் முடியாது. ஆனால் பணத்துக்கு கஷ்டப்படும் குடும்பத்தின் செலவுகளை சமாளிக்கும் கணவராக இருந்தால் இந்த படம் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்கும். காலத்தால் அழிக்க முடியாத சாதனை இந்த படம்.  

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...