ஸ்டீபன் ஸ்ட்ரெய்ன்ச் - நியூ யார்க் நகரத்தில் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார், ஒரு கட்டத்தில் எதிர்பாராத கார் விபத்தால் அவருடைய கைகள் பாதிக்கப்படுகிறது, அவருடைய கைகளை குணப்படுத்தவதற்காக நேபாளத்தில் காட்மன்ட் நகரத்தில் உள்ள மாயாஜால சக்திகளின் குருவான ANCIENT ONE ஐ சந்திக்கிறார். இந்த ANCIENT ONE மற்றும் அவருடைய மாயாஜால அமைப்பில் உள்ளவர்கள் சப்போர்ட்டுடன் மாயாஜால சக்திகளின் குருவாக இருந்து இந்த உலகத்தை காப்பாற்ற முயற்சி செய்வதை அறிந்துகொள்கிறார் . அங்கே மாய கலைகள் மற்றும் மாயாஜால சக்திகளில் தேர்ச்சி பெற்று இந்த உலகத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மேலும் TIME ஸ்டோன் என்ற இன்பினிட்டி ஸ்டோனை பயன்படுத்தி இந்த உலகத்தை DORMAMMU என்ற இருள் உலகத்தின் சக்தியிடம் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் அவரால் வெற்றிபெற முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த படத்துடைய ஸ்பெஷல்லான விஷயம் கண்ணாடி மாதிரி விஷுவல் எப்பேக்ட்ஸ் அவ்வளவு துல்லியமாக இருக்கும். பொதுவாக மாயாஜாலங்களை சக்திகளாக படத்தில் காட்டியது HARRY POTTER படத்தில்தான் HARRY POTTER படங்களுக்கு பின்னால் மாயாஜால படங்கள் என்று அதிகமாக எந்த படமும் வெளிவரவில்லை. இந்த படம் வெளிவந்து இருக்கிறது. ADOBE AFTER EFFECTS ல பேசிக்கான அனிமேஷன் பண்ணலாம் ஆனால் இந்த அளவுக்கு பண்ண முடியுமா ? நான் போய் கம்ப்யூட்டர்ல போட்டு செக் பண்ணி பாக்க போறேன். ஆனால் விஷுவல் எஃபக்ட்ஸ் துல்லியத்துக்காக நிறைய மெனக்கெட்டு இருக்கணும். இல்லைன்னா அவ்வளவு தெளிவான காட்சிகளின் அமைப்பை உருவாக்கி இருக்க முடியாது. கண்ணாடி டைமன்ஷன் முதல் டைம் டிராவல் வரைக்கும் நிறைய VFX இருப்பதால் RELEASE ஆன வருடத்தில் இந்த படம் மட்டுமே தனியாக தெரிந்து இருக்கும். இந்த படம் வெளிவந்த அடுத்தடுத்த வருடங்களில் MAGIC இந்த மார்வேல் யுனிவெர்ஸ்ஸில் பாசிபிள் என்பதால் அடுத்தடுத்த சூப்பர் ஹீரோ படங்கள் இன்னும் இண்டரெஸ்ட்டிங்காக இருந்தது. இந்த படத்துக்குதான் தாங்க்ஸ் சொல்லனும்.
இந்த திரைப்படம் 2016 ம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்த வருடத்தில் எல்லாம் இந்த திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் VISUAL EFFECTS காட்சிகள் விமர்சனங்களின் பாராட்டுகளை பெற்றது.
No comments:
Post a Comment