இந்த திரைப்படம் 2016 ல வெளிவந்தது , இந்த திரைப்படத்தின் கதை மேன்ஹாட்டன் நகரத்தில் இருக்கும் KATIE இன் செல்லப்பிராணியாக இருக்கும் மேக்ஸ் (MAX) ஒரு கட்டத்தில் புதிய நண்பர் டியூக் (DUKE) உடன் தொலைஞ்சு போகிறார் , பொதுவா செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களை வெறுக்கும் ஒரு குட்டி முயலின் கைவிடப்பட்ட செல்லப்பிராணிகள் சங்கத்திலும் வேற வழி இல்லாம சேரவேண்டிய நிலைமையும் வருது , அவங்ககிட்ட இருந்து எப்படியாவது எஸ்கேப் ஆனதுக்கு அப்புறம் டியூக்மற்றும் மாக்ஸ் திரும்பவும் சொந்த வீட்டுக்கு போனாங்களா ? அப்டிங்கறதுதான் கதை .. இந்த திரைப்படத்தில் நகைச்சுவை வேற லெவல் ல இருக்கும். கலகலப்பான SCREENPLAY , வண்ணமயமான VISUAL EFFECTS அப்படின்னு இந்த MOVIE வேற லெவல் . இல்லூமினேஷன் ஸ்டுடியோ எங்கேயோ இருந்து இப்போ மினியான்ஸ் மூலமாக உலக அளவில் பாராட்டுகளை பெற்று இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய தங்க கிரீடத்தில் பதிக்க வேண்டிய வைரம்தான் இந்த படம். இந்த படம் நான் TAMIL DUBBING ல பார்த்தேன். செம்ம என்ஜாய்மெண்ட். படம் உங்களுக்கு ரொம்ப நல்லாவே பொழுது போகும். வீட்டுல இருக்கும் வரைக்கும்தான் சந்தோஷ் இப்படி இருப்பான் ஆனால் வீட்டை விட்டு வெளியே எப்படி இருப்பான் தெரியுமா ? என்று கேட்கும் கேள்வி போல ஒரு ஒரு வீட்டுடைய பேட்டும் தனித்தனி பெர்சனாலிட்டியாக இருக்கும். கிளைமாக்ஸ்ல எப்படி இவ்வளவு அருமையாக அனிமேஷன் டிசைன்களை கொடுத்து இருக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்தே நகரக்கூடிய செல்லப்பிராணிகள் நிறைய இருக்கிறதே எல்லா பிராணிகளுக்கும் எப்படி அனிமேஷன் டிசைன் பண்ணியிருப்பார்கள் என்று நினைத்தாலே ரொம்பவுமே அதிசயமாக இருக்கு. பெரிய லெவல் வொர்க் பின்னணியில் பண்ணியிருக்கிறார்கள். நான் முன்னதாக சொன்ன மாதிரி இந்த படம் ஹாலிவுட் அனிமேஷன் சினிமாவில் பதிக்கப்பட வேண்டிய வைரம். அவ்வளவுதான். இன்னைக்கு நம்ம தமிழ் டாக்கீஸ் !!! . அடடா.. மைண்ட் வேற பக்கம் போயிருச்சு !! இன்னைக்கு நம்ம தமிழ் வெப்சைட்ல நம்ம நிகழ்ச்சிகள் புடிச்சு இருந்தால் மறக்காமல் ஃபாலோ கொடுங்கள். மேலும் இந்த விளம்பரங்களை கிளிக்கோ கிளிக் என்று கிளிக் பண்ணுங்கள். எனக்கும் கொஞ்சம் சம்பளம் கிடைக்கும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
1 கருத்து:
சூப்பர் படம் !
கருத்துரையிடுக