PORCO ROSSO - இந்த திரைப்படம் 1992 ல் வெளிவந்த ஜப்பானிய மொழி நகைச்சுவை திரைப்படமாகும் . இந்த திரைப்படத்தின் கதைக்களம் : முதலாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் இத்தாலிய விமானப்படையை சார்ந்த போர்கோ (PORCO) ஒரு சாபத்தால் PIG போன்ற உருவ அமைப்பில் இருக்கிறார். இந்த நிலையில் கர்டிஸ் (CURTIS) என்ற விமானம் ஓட்டுவதில் சிறந்த விமானியாக இருக்கக்கூடிய ஒருவரால் தாக்கபடுகிறார். இதனால் விமானத்தை இழந்த ஒரு புதிய விமானத்தை ஃபியோ (FIO) என்ற இளம் பெண் பொறியாளர் மற்றும் விமானியுடன் உருவாக்கும் PORCO மறுபடியும் CURTIS ஐ போட்டியில் வெற்றி அடைவாரா என்பதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்கிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படம் 1915 களின் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி கதையை கொஞ்சம் கலகலப்பு கலந்து சொல்லியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதைக்களம் மனதை தொடுகிறது.
OCEAN WAVES (1993)
டோக்கியோவில் TRAIN க்காக காத்திருக்கும் TAKI அவருடைய கடந்த காலத்தில் கொஞ்சம் வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நினைத்து பார்ப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் அவருக்கு RIKAKO என்ற சக மாணவி சுற்றுலாவின் போது பணத்தை தொலைத்து விட்டதால் அவருக்கு அவருடைய பார்ட் டைம் வேலையில் சம்பளமாக கிடைத்த பணத்தை கொண்டு பணம் கொடுத்து உதவுகிறார். சில நாட்களுக்கு பிறகு அவளுடைய தொலைவில் இருக்கும் தந்தையை சந்திக்க முயற்சி செய்யும் RIKAKO அதற்காகத்தான் பணம் சேர்க்கிறார் என்பதை விமான நிலையத்தில் அவரை சந்திக்கும்போது புரிந்துகொள்ளும் TAKI அவரோடு பயணித்து அவருடைய தந்தையை சந்திக்க செல்லும் பயணத்தில் உதவுகிறார். பின்னாளில் சின்ன சின்ன சண்டைகளால் பிரிந்துவிடும் TAKI மற்றும் RIKAKO மறுபடியும் எப்படி சந்திக்கிறார்கள். இந்த திரைப்படம் ஒரு மென்மையான லவ் ஸ்டோரியாக இடம்பெறுகிறது. இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஜப்பானிய பாரம்பரிய அனிமேஷன் இந்த திரைப்படத்தை இன்னும் சிறப்பாக மாற்றியுள்ளது.
No comments:
Post a Comment