Wednesday, February 5, 2025

GENERAL TALKS - பயனற்ற விஷயங்களோடு தொலைக்காட்சி !


இந்த விஷயம் காலகாலமாக சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு விஷயம் தான். இன்றைய காலத்து தொலைக்காட்சிகளில் பயனற்ற விஷயங்கள் தான் அதிகமாக உள்ளது. உதாரணத்துக்கு சமீபத்தில் இடம் பெற்றுள்ள தொலைக்காட்சி நெடுந்தொடர்களை எடுத்துப் பாருங்கள். தன்னுடைய மனைவியை சந்தேகப்படும் ஒரு கணவன் வேண்டுமென்றே மனைவியின் நடத்தையில் நிறைய பழிகளை சுமத்துகிறான், புதிதாக திருமணமான கணவன் மற்றும் மனைவி வீட்டில் இருக்கும் போது மின்சாரம் நீங்கி போய் மழை பொழிகிறது இதனால் அவர்களுடைய இல்லற வாழ்க்கை இனிதே தொடங்குகிறது ஆனால் இதுபோன்ற விஷயங்களை குழந்தைகள் தினம் பார்க்கும் நாடகத்தில் எதற்காக வைக்கிறார்கள் ? தனக்குப் பிறந்த குழந்தை மேல் சந்தேகப்படும் ஒரு தந்தையானவன் டிஎன்ஏ சோதனை என்று அழைக்கப்படும் மரபணு சோதனையை எடுத்துக் கொள்ள மறுக்கிறான் நாடகத்துக்கு நிறைய எபிசோடுகள் வேண்டும் என்பதற்காக மனைவி ஆசைப்படுவதே முழு நேர வேலையாக கடந்த இரண்டு வருடங்களுக்கு செய்கிறான். இந்த வகையான பொழுதுபோக்கு சமுதாயத்துக்கு எந்த வகையில் பிரயோஜனமாக இருக்கும் ? இது ஒரு கதை என்றால் இதனை விடவும் கொடுமையான கதைகள் எல்லாம் திரைக்கதையில் இருக்கிறது. நன்றாக சிறப்பாக ஊரே பாராட்டும் படியாக வாழ்ந்து கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு கையெழுத்தால் குடும்பத்தில் நனைந்து சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவில் கொண்டு வந்து நிற்கிறார்கள். பின்னதாக அடுத்த மூன்று வருடங்களில் கிடைக்கும் வேலைகள் எல்லாம் பார்த்து குடும்பத்தின் தரத்தினை இதற்கு முன் தரத்திற்கு பத்தில் ஒரு பங்காக உயர்த்துகிறார்கள். இவர்கள் இழந்த சொத்துக்களை கடைசி வரையில் மீட்க போவார்களா இல்லையேல் இழந்தது இழந்ததாகவே போய்விடுமா என்று தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களையும் வறுமையும் மறந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பாளர்கள் பின் நாட்களில் அடுத்த தலைமுறைக்கு வழி நடத்த வேண்டிய பொறுப்பாளர்கள் இதுபோன்று நாடகவியரான விஷயங்களில் தங்களுடைய மூளையை சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து இந்த திரையை பார்க்கும் குழந்தைகளுக்கு இது அவர்களுடைய முட்டாள்தனத்துக்கு அப்பாவித்தனத்திற்கும்தான் தீனியை போடுமே தவிர்த்து அவர்களை எந்த வகையிலும் ஸ்மார்ட்டான குழந்தைகளாக மாற்றாது. இந்த சின்ன விஷயங்களை கூட புரிந்து கொள்ளாமல் பொழுதுபோக்காக கொடுக்கக்கூடிய இந்த ரியாலிட்டி டிவி ஷோவை போன்ற விஷயங்கள் இந்த சீரியல் போன்ற விஷயங்கள் மக்களுடைய மனதை சலவைதான் செய்கிறதே தவிர்த்து சமூக முன்னேற்றம் என்று இவைகளால் எந்த நல்ல விஷயமும் நடந்ததில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை.


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...