புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - நமது திறன்கள் நலமாக வேண்டும்


இந்த உலகம் எந்தெந்த விஷயங்களை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே சரியாக தேர்ந்தெடுக்கவில்லை ! கடைசியாக விளையாடிய ஐபிஎல் மேட்ச் வெற்றி பெற்ற அணி என்ன என்று யாரிடம் கேட்டால் மிகவும் சரியாக சொல்வார்கள் ? கடைசியாக தீபாவளியன்று ஹிட்டான திரைப்படத்தின் இயக்குனர் யார் என்றும் கதாநாயகன் கதாநாயகி யார் என்று கேட்டால் மிகவும் சரியாக சொல்வார்கள். இருந்தாலும் அடிப்படையில் ஒரு சமுதாயத்தில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பது பற்றியான அடிப்படையான கருத்துக்கள் என்னென்ன என்பது கூட இவர்கள் தெரிந்து கொள்ள மாட்டார்கள். இந்த காலத்தில் நல்லபடியாக யோசனைகளுடன்ட இருப்பதே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிவிட்டது என்று கலாய்ப்பார்கள், இருந்தாலுமே இவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் இவர்களுடைய வாழ்க்கையில் இவர்களுக்கு தேவையான எல்லா விஷயங்களும் முன்னோர்கள் சேர்த்து வைத்த பணத்திலிருந்து இவர்களுக்கு கிடைத்துவிடும். கவலைப்பட வேண்டியது இன்னும் சரியாக வேலை கிடைக்கவில்லையே என்று காத்திருக்கக் கூடிய உங்களுடைய நிலைமைதான். அதாவது போதுமான வசதி வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படக் கூடிய ஒரு நிலை.  இதுதான் எப்போதுமே நடக்கிறது ஒரு போட்டியென்று வந்தால் வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு மனிதனால் கண்டிப்பாக தாக்கு பிடிக்க முடிவதில்லை. இதனால் இளமையில் இருக்கும்போதே போதுமான அளவுக்கு வசதி வாய்ப்பை உருவாக்கிக் கொள்வது எல்லோருக்கும் கட்டாயமான ஒரு விஷயமாக அமைகிறது. மேலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் எப்படி இருக்கிறீர்கள் என்பதை பற்றி யாருக்கும் கவலை இல்லை. உங்களைப் பற்றிய மற்றவர்களுடைய அபிமானமும் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. உங்களிடம் பிரம்மாண்டமான கப்பலை போன்ற ஒரு வீடு உங்களுடைய அடுத்த 30 தலைமுறைக்கு தேவையான சொத்துக்கள் உங்களுக்கே உங்களுக்கென்று சொந்தமான ஒரு தொழில் பட்டறை. இவ்வாறாக இந்த விஷயங்கள் கிடைத்து விட்டாலே போதுமானது வாழ்க்கையில் வேறு எந்த விஷயங்களும் தொழில் அடிப்படையில் உங்களுக்கு தேவையில்லை. உங்களுடைய சக்திகள் அதிகரிக்கும் போது பொறுப்புகள் அதிகரிக்கும் என்று சொல்வார்கள் ஆனால் சக்திகள் அதிகரித்தால் உங்களை வெறுப்பவர்களுடைய எண்ணிக்கைதான் அதிகமாகும். ஒரு விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இந்த வாழ்க்கை என்பது தோற்றுப் போவதற்காக அல்ல. உங்களுடைய கடந்த தலைமுறைகள் தோற்றுப் போனாலும் உங்களுக்காக அடுத்த லெகஸியை விட்டுப் போய் இருப்பதால் நீங்கள் தான் இந்த வாழ்க்கையை ஜெயித்து காட்ட வேண்டும். 

கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2005 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dancer Aayudham Ayya Devathaiyai Kanden Thirupaachi Iyer IPS Ayodhya Kannamma Ji Kannadi Pookal Sukran ...