Wednesday, February 5, 2025

GENERAL TALKS - காஸ்ட்லியாக ஒரு வாழ்க்கை !


உங்களுடைய செலவுகளை மிகவும் கவனமாக தான் செலவு செய்ய வேண்டும் உங்களுடைய சின்ன சின்ன செலவுகளையும் நீங்கள் மிகவும் கவனமாக கவனியுங்கள். உங்களுடைய சக்திகளுக்கு மேலே நீங்கள் செலவு செய்ய வேண்டாம் மேலும் உங்களுடைய சின்ன சின்ன செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெரிய அளவிலான தொகையை உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள முயற்சி செய்ய அனுமதிக்கவும் வேண்டாம். நீங்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சரி அந்த துறை சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் மிகவும் கவனமாக தெரிந்து வைத்திருங்கள். குறிப்பாக வணிகத்தில் தகவல் மட்டும் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை. உங்களுடைய வணிகத்தில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க கொஞ்சமும் தயங்க வேண்டாம். தயக்கம் என்பது மிகப்பெரிய தோல்வியின் முதல் படி. உங்களுடைய தயக்கம் உங்களை சிறிதளவேனும் நகரச் செய்யாமல் அப்படியே நிறுத்தி விடும். மேலும் உங்களுடைய தனிப்பட்ட மனதில் இருந்து தோன்றும் யோசனைகளை உங்களுடைய வியாபாரத்தில் பயன்படுத்த உங்களுக்கு கண்டிப்பாக மிகப் பெரிய முன்னேற்றம் தேவை. நிறைய வியாபாரங்களை உற்று நோக்கும்போது இதுவரையில் நடந்த விஷயங்கள் அந்த நடந்த விஷயங்களால் பொருளாதார இலாபமடைய கூடிய செயல்முறைகள் இதனை மட்டுமே தான் நன்றாக கற்றுக்கொண்டு கடந்த கால அனுபவங்களை பொறுத்து மட்டுமே வியாபார முன்னேற்றத்துக்காக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இங்கே உங்களுடைய தனிப்பட்ட யோசனைகளை வியாபாரத்தில் பயன்படுத்தும் அளவுக்கு வந்து விட்டாலே போதுமானது அதுவே ஒரு மிகப்பெரிய சாதனை தான். உங்களுடைய தனிப்பட்ட யோசனைகளை வியாபாரத்தில் பயன்படுத்தும் போது மற்றவர்களுடைய கருத்துக்கணிப்புகளை நீங்கள் அதிகமாக கேட்க வேண்டாம். மாறாக உங்களுடைய தனிப்பட்ட யோசனை எந்த அளவுக்கு உங்களுக்கு இலாபமான விஷயங்களை ஈட்டி தரும் என்பதை மட்டும் நீங்கள் மிகவும் தெளிவாக முழுமையாக ஆராய்ச்சி செய்தால் போதுமானது. உங்களுடைய தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட யோசனைகளை வியாபாரத்துக்கு பயன்படுத்தும் போது உங்களுக்கு அளவுக்கு அதிகமான பணம் தேவை. இந்த பணத்தை நீங்களே கஷ்டப்பட்டு சம்பாதித்து இருப்பீர்கள். ஆகவே தனிப்பட்ட யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரத்தை விரிவுபடுத்த பார்க்கும்போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய யோசனைகளை ஒரு முறைக்கு 100 முறை சுத்திகரிப்பு செய்து கொண்டே இருங்கள். உங்களுடைய வெற்றிக்கான பாதை நீங்களே கண்டுபிடிக்கும் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...