Wednesday, February 5, 2025

GENERAL TALKS - சமூகத்தால் உருவாகும் பொருளாதார மாற்றம் !


கடந்த காலத்தில் இருப்பதைப் போல சமூகத்தின் அடிப்படையிலான பொருளாதாரம் இப்போது இல்லை. இப்போது இருக்கும் பொருளாதாரம் பணத்தின் அடிப்படையானது. இங்கே பணம் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கலாம் பணம் என்பது எல்லா விஷயங்களை விடவும் சிறந்தது என்று தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உதாரணத்தை நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன் இருந்தாலும் இப்போதும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். ஒரு காலத்தில் ஒரு பெரிய பணக்காரன் தங்கச் சுரங்கத்தைஉருவாக்க நினைத்தான். இதனால வேலை பார்க்க நிறைய பேரை வேலைக்கு சேர்த்து அவர்களுக்கு தேவையான உணவு, உடை இருக்கும் போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து அவர்களுக்கு தேவையான ஒர்க்கிங் யூனிபார்ம் மற்றும் சாதனங்களை அவர்களுடைய கைகளில் வாங்கி கொடுத்தான். இப்போது நிஜமாகவே அவனுக்கு நிறைய தங்கம் எதிர்பார்ப்பை விட அதிகமான‌அளவுக்கு இந்த தங்க சுரக்கத்தில் கிடைத்திருந்தாலும் அவனைவிட பணக்காரனாக மாறியது யார் என்றால் அங்கே வேலை பார்க்கும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தேவையான யூனிபார்ம் மற்றும் கருவிகளை விற்ற நிறுவன உரிமையாளர் தான்.  தன்னிடம் இருக்கும் விஷயங்களை விற்பனை செய்யும் அனைவருமே வெற்றியடைவதில்லை. மக்களுடைய தேவைகளை இருந்து மக்களுக்கு நிஜமாகவே என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அதனை மட்டும் பணத்துக்கு விற்பனை செய்பவர்கள் மட்டும்தான் இங்கே ஜெயிக்க முடிகிறது. ஒரு விஷயம் மக்களுக்கு தேவை இல்லையா அப்படி என்றால் அந்த தேவையில்லாத விஷயத்தை நீங்கள் எவ்வளவு ஸ்டாக் கொண்டு வந்து வைத்தாலும் அது வீணானது தான். இதுவே ஒரு விஷயம் மக்களுக்கு தேவையானது என்றால் அந்த விஷயத்தை எத்தனை வருடங்களுக்கு மக்களுக்கு தேவைப்படும் என்று கணித்துக் கொண்டு போதுமான அளவுக்கு ஸ்டாக் கொண்டு வந்து இறக்கி வைத்தால் அந்த ஸ்டாக் உங்களுக்கு போதுமான இலாபத்தை கண்டிப்பாக ஈட்டி தரும். குடிசையில் இருந்து கோபுரத்துக்கு சென்ற நிறுவனங்களின் கதைகள் எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. நிறுவனங்கள் மற்ற நிறுவனங்கள் இருந்து நிர்வாகத்தில் செய்த ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் அந்த நிறுவனங்கள் காலத்துக்கு தகுந்தது போல அப்டேட்டுகளை அடைந்து கொண்டே இருந்ததுதான். அப்டேடுகளை அடையாது நிறுவனம் பயன்படுத்தப்படாத ஒரு கட்டடத்துக்கு சமமாகும். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த காலத்தில் அப்டேட் ஆகாத நிறுவனங்களால் எந்த பயனும் இல்லை. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...