Wednesday, February 5, 2025

GENERAL TALKS - நாம் மாற்றங்களை உருவாக்க வேண்டும் !


நீங்கள் எப்போதுமே வணிகத்தை பொருத்தவரைக்கும் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து தகவல்களை தெரிந்து கொண்டே இருப்பது உங்களுக்கு நிறைய சலிப்பை ஏற்படுத்தலாம் இப்படியே சென்று கொண்டால் என்ன அர்த்தம் இதற்கு ஒரு முடிவே கிடையாதா என்பது போல ஒரு மிகப்பெரிய ஆதங்கத்தையும் ஏற்படுத்தலாம். போதுமான தகவல்களை தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடிய நிறுவனங்கள் என்னதான் லாபத்தை பார்த்தாலும் குறிப்பிட்ட நேரங்களில் நஷ்டத்தையும் பார்த்து கிடைத்ததாவது தொலைத்து விடுகின்றன. இதுவே போதுமான தகவல்களை தெரிந்து அறிந்து வேலை பார்க்கும் நிறுவனங்கள் எந்த வகையில் லாபம் அடைந்தாலும் நஷ்டங்களை தவிர்ப்பதன் மூலமாக நிறுவனத்திற்கு தேவையான பணத்தை ஈட்டிக் கொண்டு இருக்கின்றன. உங்களுடைய நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் நீங்கள் எவ்வளவு தகவல் தெரிந்து கொண்டிருக்கிறீர்களா அவ்வளவு திட்டங்களை உங்களால் உருவாக்க முடியும் எவ்வளவு திட்டங்களை உங்களால் உருவாக்க முடியுமோ அதற்கான பணத்தை உங்களால் கணக்கு போட்டு சேகரிக்க முடியும். ஒரு சாதாரணமான திட்டமானது எப்போதுமே கிடைக்கும் தகவல்களை பொறுத்து தான் உறுதியாக இருக்கும் என்று உங்களுக்கு சொல்லவா வேண்டும். நிறைய நேரங்களில் வெளிப்புறத்தில் இருந்து சொல்லப்படும் சக்திகள் உங்களுடைய சொந்த நிறுவனத்தை நீங்கள் உருவாக்க வேண்டாம் என்றும் அது உங்களால் முடியாது என்றும் வேலைக்கு போய் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வயிற்றை கழுவிக்கொண்டு நீங்கள் தினசரியாக பணிக்கு செல்ல வேண்டும் என்ற விஷயங்களை எல்லாம் தான் உங்களுடைய மனதுக்குள் திணிக்க பார்ப்பார்கள். இருந்தாலும் ஒரு சொந்த நிறுவனம் என்பது உங்களுக்கு மிகப்பெரிய கௌரவத்தை கொடுக்கும் இத்தகைய சொந்த நிறுவனம் உங்களுக்கு தேவையான வீடு சொத்துக்கள் மற்றும் நிலங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் என்று அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு கொடுத்து விடும். உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கூட உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைதான் படுவார்கள்.  இது போன்ற ஒரு கௌரவமான மரியாதைக்குரிய வாழ்க்கை நிறைய பேருக்கு கிடைப்பதில்லை இத்தகைய வாழ்க்கைக்காக போராடலாம் கண்டிப்பாக தவறே இல்லை. நம்முடைய வாழ்க்கையை நாம்தான் சிறப்பானதாக மாற்ற வேண்டும் !


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...