புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - நமது வாழ்க்கையின் கடினத்தன்மை !


இந்த உலகம் அமைதியானதாக இல்லையே ? மக்களுக்கு பிரச்சனைகள் வந்தவுடன் அவைகளில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோயிஸம்தான் இப்போது திரைப்பட உலகத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் சூப்பர் ஹீரோக்கள் எல்லோருமே நடைமுறை சாத்தியம் கிடையாது இன்றைக்கு தேதிக்கு எல்லோருடைய கைரேகையும் அரசாங்க ஆவணங்களில் பதிவாகியுள்ளது. இவ்வாறு இருக்கும் போது நம் கண் முன்னாடியே குற்றங்கள் நடக்கிறது என்பதற்காக நாம் கோபப்பட்டு குற்றங்களை தடுத்தால் நாம் எளிதில் குற்றவாளியாக மாற்றப்படும் அபாயம் உள்ளது என்பதுதான் உண்மை. இன்றைக்கு நாம் கண்கள் முன்னாடியே பார்க்கிறோம் போலியாக குற்றம் சாட்டப்பட்டு குற்றங்களிலிருந்து வெளியே வர முடியாமல் தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி போலியாக குற்றம் சாட்டபட்டவர்கள் தங்களுக்காக தண்டனை அனுபவித்துக்கொண்டிருப்பதால் உண்மையாகவே குற்றம் செய்பவர்கள் இன்னும் சுதந்திரமாக குற்றங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அனைத்து நிலைப்பாடுகளும் மாற வேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு இன்னும் விரிவானதாக ஆக்கப்பட வேண்டும். இல்லை சமுதாயம் இப்போதே நன்றாக தான் இருக்கிறது என்று உங்கள் கண்களுக்கு தெரிந்து நீங்கள் இந்த சமுதாயத்தை அப்படியே விட்டுவிட்டால் போக போக உங்களுடைய வீடு வரைக்கும் குற்றங்கள் வந்து தான் சேரும். ஒரு சிறிய வேலி முள் செடியை க்யூட்டாக இருக்கிறது என்பதற்காக நீங்கள் வளர்த்துக் கொண்டிருந்தால் அடுத்து 20 வருடங்களில் மண்ணின் வளத்தையும் காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொண்டு பேர் ஆபத்து நிறைந்த வேலிக்காடாகத்தான் உங்களுடைய வாழ்க்கை அமைந்து விடும். முட்களின் செடிகளை வளர்ப்பதற்கு பதிலாக பூச்செடிகளை வளர்த்து, பூக்களை விற்பனை செய்வதன் மூலமாக நல்ல லாபத்தை பார்ப்பது தான் சிறப்பான விஷயம். குற்றங்களை தடுப்பது என்பது திரைப்படங்களில் வருவதைப் போல ஒரு தனி மனிதனுடைய பொறுப்புகள் மட்டுமல்ல. சராசரியாக இருக்கும் ஒரு தனி மனிதனால் குற்றங்கள் நடக்கும்போது முடிந்தால் ஒரு போட்டோ எடுக்க முடியும் அவ்வளவு தான். ஒரு சராசரி மனிதன் அவனுடைய வாழ்க்கையிலேயே நிறைய கஷ்டங்களை சந்தித்துக் கொண்டு இருப்பான் இந்நிலையில் அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் குற்றங்கள் நடந்துகொண்டு இருப்பதால் கொடியோரால்‌ கஷ்டங்கள் வருவது பார்த்து அவனால் உதவி செய்ய எல்லாம் முடியாது. நீங்கள் நல்லவராக இருந்தால் எல்லோருமே நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் அது அடிப்படையிலேயே நடக்காத காரியம். இந்த உலகத்தின் பாவங்களில் எப்போதுமே குளிப்பது தான் மனிதர்களுடைய தலையெழுத்து என்பதை யாரால்தான் மாற்ற முடியும்.


கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2005 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dancer Aayudham Ayya Devathaiyai Kanden Thirupaachi Iyer IPS Ayodhya Kannamma Ji Kannadi Pookal Sukran ...