Sunday, February 2, 2025

GENERAL TALKS - இன்றைக்கு தேதிக்கு இந்த உலகம் !




இந்த உலகத்தை பற்றி யோசித்து பார்க்கும்போது கடந்த காலத்தில் இருந்த அளவுக்கு நல்லவர்கள் கூட இந்த காலத்தில் இல்லை. அந்த காலத்தில் எல்லாம் எதேனும் விபத்து நடந்தால் யார் என்ன என்று தெரியாத ஆட்கள் கூட கஷ்டப்பட்டு ஒரு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போதுமான உதவிகளை செய்து சம்மந்தப்பட்ட மக்களுடைய குடும்பத்துக்கு இன்பர்மேஷன் சொல்லிவிட்டு நன்றாக ஒரு பிரச்சனையை ஹேண்டில் செய்வார்கள். இந்த விஷயங்களுக்கு காரணம் வெகு சிறப்பான முறையில் மக்களோடு மக்களாக ஒரு சமூகமாக நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் பழகியதால்தான். இருந்தாலும் இந்த புதிய ஜெனரேஷன் பையன்கள் இன்ட்ரோவேர்ட் என்று ஒரு வார்த்தையை கற்றுக்கொண்டு சமூகமாக இல்லாமல் தனித்து வாழ்ந்துகொண்டு இருப்பதுதான் பரிதாபகரமாக உள்ளது. புதிய ஜெனரேஷன் ஆல்ஃபாக்கள் வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு என்ற ஆர்ட் - இன்டலிஜென்ஸ் தொழில் நுட்பம் இருப்பதால் இந்த புது ஜென் பசங்களுக்கு கற்றுக்கொள்ள வேண்டிய எல்லாமே விரல் நுனியில் இருக்கிறது. இவர்களுக்கு ஒரு சமூகமாக வாழ்ந்து மனிதனுக்கு மனிதன் பேசித்தான் விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன்னுடைய வாழ்க்கை முழுவதும் வறுமையும் இயலாமையும் கோழைத்தனம் நிறைந்த மனநிலையும் சோம்பேறித்தனம் போன்ற நச்சுக்களும் சரியான வகையில் வேலை பார்த்தால் வெறும் ஒரு நாளுக்குள் மனிதனுடைய மனதில் இருந்து எடுத்துவிடலாம் என்னும் அளவுக்கு அவ்வளவு சுலபமான பலவீனம் அல்ல. குறைந்தபட்சம் 12 மாதங்கள் இந்த விஷயங்களை சாதிக்க நமக்கு தேவைப்படுகிறது. இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வு என்றால் பணம் மட்டும்தான். சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கூட ஒரு நபர் என்ன கூறியுள்ளார் என்றால் பணத்தால் உண்மையான அன்பையும் பாசத்தையும் வாங்க முடியாது அதனால் பணம் முக்கியமான விஷயமல்ல என்பார்கள். உண்மையில் நம்மை ஒருவர் உண்மையாக நேசித்தால் அல்லது ஆதரவு கொடுத்தால் அவர்களுடைய பண தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமாக அவர்களுக்கு போதுமான ஆதரவுக்கு இணையான ஒரு செயல்பாட்டை செய்துவிடுவோம். சரியான நேரத்தில் சரியான அளவுக்கு மற்ற மனிதர்களுக்கு பணத்தை கொடுப்பதன் மூலமாக ஒரு நன்றிக்கடன் நாம் உருவாக்குகிறோம் அல்லது ஒரு நன்மதிப்பை நாம் பெறுகிறோம். இந்த செயல்பாடு 'பொருளாதார அடிப்பையில் ஆதரவு' என்று அழைக்கப்படுகிறது. இந்த பொருளாதார அடிப்படையில் ஆதரவு கொடுக்கும் செயல்பாடு நம்மை தற்காலிகமாக இருக்கும் ஒரு பழக்கம் என்று ஒரு நிலையில் இருந்து நிரந்தரமான தொடரும் ஒரு இணைப்பாக மாற்றுகிறது. குறிப்பாக இதுபோன்று ஒரு பொருளாதார ஆதரவு கொடுத்து நண்பர்களை சம்பாதிப்பது கண்டிப்பாக சமுதாயத்தில் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். என்று யாரேனும் அட்வைஸ் பண்ணினால் கண்டிப்பாக நம்பாதீர்கள். இங்கே கொஞ்சமாக பண முதலீடு இல்லாவிட்டால் பணத்தை சம்பாதிப்பது நடக்காத காரியம். சப்ஜெக்ட் தன்னால் முடியாத ஒரு விஷயத்தை சாதிக்க முயற்சி செய்வதால் இந்த விளையாட்டை இன்னமும் கடினமானதாக மாற்றுகிறது. மேலும் சப்ஜெக்ட் எப்போதுமே சோஷியல் நாலேஜ் என்று சொல்லப்படும் சமுதாய அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணம் மட்டும் இல்லை என்றால் இந்த சமுதாய அறிவுத்திறன் கிடைக்காமலே போய்விடும். தொட்ட விஷயங்கள் எல்லாம் தோல்வியாக மட்டுமே மாறிக்கொண்டு இருக்கும். இந்த விஷயங்கள் எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது என்ன ? என்று ஒரு கட்டத்தில் மூளையை கசக்கி யோசித்து பார்த்தால் தன்னுடைய சக்திகளை தவறாக பயன்படுத்தும் சக்திவாய்ந்த மக்கள்தான் உண்மையான காரணம் என்பதை நம்மால் கண்டறிய முடிகிறது. நம்ம பையன் ஃபோன் பயன்படுத்தும்போது கம்ஃப்போர்டாக உணருகிறான். இதுக்கு காரணம் என்னவென்றால் நிஜமாகவே ஃபோன் பயன்படுத்தும்போது மட்டும்தான் நம்ம பையன் சந்தோஷமாக இருக்கிறான். குழந்தைகள் எதுக்காக பொம்மைக்கு ஆசைப்படுகின்றனர் ? குழந்தைகள் பொருட்கள் வைத்து விளையாடும் போது மட்டும்தான் உண்மையாக இருக்கின்றார்கள். மற்ற நேரங்களில் பெற்றவர்களுக்கு நிறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆசைப்பட்ட விஷயங்களை விட்டுக்கொடுத்து பொய்யாக நடிக்கிறார்கள். சமூகம் இப்படியாக மாறிவிட்டது. இவைகளை எல்லாம் எப்படி சரி செய்வது ? இது நிச்சயமாக ஒரு பெரிய கான்செப்ட் என்பதால் தனியாக ஒரு போஸ்டில் சொல்கிறேன். இந்த வலைப்பூவில் படித்தமைக்கு நன்றி அப்படியே இந்த வலைப்பூவின் சந்தா தாரர் என்று மாறிவிடுங்கள். 

No comments:

GENERAL TALKS - இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும்

1. ஒரு விஷயம் உன்னுடைய சாப்பாடு பற்றியது என்றால் அதற்காக நீ EXTREME-க்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் ! 2. இந்த உலகத்தில் எப்பொழுதும் மூளையை ப...